அக்ஷய திரியை திருநாளில் – அன்னதானம்
அக்ஷய திரியை திருநாளில்(07-05-2019) அன்னமிட பொருள் உதவி செய்யும் அன்பு சகோதரி திருமதி.தங்க லட்சுமி, திருமதி.யசோதா மற்றும் திருமதி. சுமனா
சிவனுக்கு அன்னபூரணி தேவி தன் அக்ஷயா பாத்திரத்தால் அன்னமிட்ட தினமே அக்ஷய திரியை திருநாள் ஆகும்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையிலுள்ள ஸ்ரீரெட்டி சுவாமிகள் திருக்கோயிலின் பக்தகோடிகளுக்கு அன்னமிடவும்,
திரு. மோகன் அவர்களால் நடத்தப்படும் வாழ்வாங்கி முதியோர் இல்லத்திற்கும்,
திருமதி.பிரேமா அவர்களால் நடத்தப்படும் முதியோர் இல்லத்திற்கும்,
இத்திருநாளில் அன்னபூரணி தேவியாக இருந்து ஏழை எளியோர்க்கும்
பக்தகோடிகளுக்கும் அன்னமிட பொருள் உதவி செய்யும் அன்பு சகோதரி சித்தர் பூமியின் வாசக அன்பர் திருமதி.தங்க லட்சுமி, திருமதி.யசோதா மற்றும் திருமதி. சுமனா அவர்கள் தேவி அன்னபூரணியின் அருளால் செல்வச்செழிப்புடன் வாழ்வில் மேன்மேலும் உயரவும் அவர்கள் செல்வ வளம் அக்ஷயா பாத்திரம் போல் திகழவும் வாழ்த்துகிறது சித்தர் பூமி..!











