புத்தரையும் குசேலரையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நமக்கு வேறுபாடு தெரியும்.
குசேலரிடம் எதுவும் இல்லை. ஆனாலும் அவர் கொடுக்கிறார். புத்தரிடம் எல்லாம் இருந்தது என்றாலும் அவர் பிச்சை எடுத்தார்.
இந்த இரு நிகழ்ச்சிகளுமே அபூர்வமானவை. அசாதரணமானவை.
ஏழை பிச்சை எடுப்பதும், பணக்காரர் கொடுப்பதும் தான் சாதாரண நிலை.
ஆனால் அவரவர் இடம் மாறி முரண்படும் போது, அது அசாதரணமாகி முக்கியத்துவம் பெற்று விடுகிறது.
குசேலர் புத்தரைப்போல் அசாதரணமானவர். இருவரும் அபூர்வமான மனிதர்கள்.
மன்னனுக்கே பரிசளிக்க வருகிறார் குசேலர். அதுதான் சிறப்பான விஷயம். இது தான் அன்பின் வழி.
நீங்கள் எவ்வளவு பெரிய மனிதர், அல்லது அற்பமானவர் என்று அன்பு கவலைப்படாது.
கொடுக்க நினைத்தால் அது கொடுக்கும். உங்களிடம் எல்லாம் இருக்கிறது, எதற்கு கொடுக்க வேண்டும் என்றெல்லாம் அன்பு யோசித்துப் பார்க்காது.
இதில் நாம் தெளிவுபடுத்திக் கொள்வது, அன்பு கொடுத்துக் கொண்டே இருக்கும்.
உங்களுக்கு நிறைய கொடுத்தாகி விட்டது என்று அது கணக்கு பார்க்காது. அன்பின் தாராள தன்மைக்கு முடிவே இல்லை.
அன்பு தன் பரிசுகளை பொழிந்து கொண்டே இருக்கும்.
அப்போது கூட அது போதுமான அளவு கொடுக்கமுடியவில்லையே என்று வெட்கப்படும்.
அன்பின் இயல்பு அது, அன்பின் வழி அது.
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்-
சித்தர் பூமி தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..!
உங்கள் நண்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!
+91-7305018180










