நான் உன்னை கவனித்து வருகிறேன் . ஏதோ பெரிதாக நடந்தது போல யோசித்து கொண்டு இருக்கிறாய், அப்படி என்ன நேர்ந்தது. நீ அதை சொல்ல தயங்கினாலும் நான் அறிவேன்
தயவுசெய்து தேவை இல்லாமல் யோசித்து கொண்டு இருக்காதே. கவலைகளுக்கு இடம் தராதே. ஏற்ற தாழ்வுகள் இல்லையென்றால் நீ வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருக்காது.
மனதில் பக்குவமும் தைரியமும் இருந்து விட்டால் நீந்தி கொண்டு வந்து விடலாம். நீயோ இவை அனைத்தையும் கடந்து வந்து விட்டாய், நீ எனது செல்ல பிள்ளை உன்னை கண்டிப்பதற்கு எனக்கு மட்டும்தான் உரிமை இருக்கிறது.
கவலை படாமல் இரு என்னை தாண்டி என்னை மீறி எதுவும் நடக்க விடமாட்டேன். எனது அனுமதியின்றி எவரும் உன்னை நெருங்க விடமாட்டேன் அப்பாநான்(ஸ்ரீ சாய்) இருக்கிறேன்.
தைரியமாக இரு தன்னம்பிக்கையோடு இரு கெடுதல் நடப்பதற்கு இடம் கொடுத்து விட்டால் பிறகு நான் எதற்கு? கலங்காதே எந்த சூழ்நிலையிலும் நான் உன்னை கைவிட மாட்டேன் பாதுகாப்பேன் .
உன்னை வெறுத்து ஒதுக்கியவர் மத்தியில் உன்னை இழிவாக பேசியவர்கள் மத்தியில், நீ எல்லாம் எங்கே வளர போகிறாய் என்று அஹங்காரத்தோடு பேசியவர்கள் மத்தியில் , உன்னை வீழ்த்தி பார்க்க மந்திரத்தையும் தந்திரத்தையும் செயல்பட செய்தவர்கள் மத்தியில்,
அனைவரும் உன்னை பார்த்து வியக்கும் வண்ணம் வாழ்க்கையில் உன்னை உயர்த்த போகிறேன்..! இது தெரியாமல் கவலை பட்டு கொண்டு இருக்கிறாய்.
நம்பிக்கையோடு இரு, நம்பிக்கை தான் வாழ்க்கை. நான் இருக்கிறேன் நிழலாக..!
ஓம் ஸ்ரீ சாய் ராம்.











