அருள்மிகு காஞ்சிப் பெரியவர் பக்திப் பாட்டு.
காஞ்சியின் புகழே தவசீலா
காமாக்ஷித்தாயின் அருள் பாலா |
ஆண்டியின் கோலத்தில் அரசாண்டாய்
அவனிக் கெல்லாமே அருள் தந்தாய் |
அன்பெனும் வாழ்க்கையின் பொருளானாய்
கலவையின் ஒளியால் பொலிவானாய் |
பாசம் பொழிந்திடும் தாயானாய்
ஆசிகள் தந்திடும் குருவானாய் |
சிரிப்புடன் கலந்த தவமானாய்
சீரிய வாழ்க்கையின் சிவமானாய் |
கருணைக் கடாக்ஷம் தந்திடுவாய்
கவலைகள் யாவும் தீர்த்திடுவாய் |










