ஒரு நாள் நகரத்தில் உள்ள ஓர் கிணற்றைச் சுற்றி கூட்டம் கூடியிருப்பதை கண்ணன் பார்த்தார்.அந்தக் கிணற்றில் ஒரு பெரிய தலைப்பாகை அணிந்த ஓர்வர் விழுந்திருந்து ‘உதவி உதவி’ என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தார். ஜனங்கள் கிணற்றில் குனிந்து
“உங்கள் கையைக் கொடுங்கள். கையைக் கொடுங்கள்” என்று கேட்டு அவரைத் தூக்கிவிட நினைத்தார்கள். ஆனால் அந்தநபர், அவர்களது வேண்டு கோளை காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை.
மேலும் மேலும் அவர் தணீரில் போராடிக்கொண்டு “உதவி, உதவி” என்று கூவிக்
கொண்டிருந்தார்.கடைசியில் கண்ணன் முன்வந்து தன் கையை அவர் முன்நீட்டி, “என் கையைப் பிடித்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னார். உடனே அந்தநபர், கண்ணன் கையைப் பற்றி மேலே வந்தார்.
ஜனங்கள் ஆச்சரியம் அடைந்து கண்ணன் “நீங்கள் எப்படி அவரை மேலே வர உதவினீர்கள்” என்று கேட்டார்கள். அதற்கு, கண்ணன் “அது ரொம்ப சுலபம். ஒரு கஞ்சன் எதையும் பிறருக்கு கொடுக்க மாட்டான்.
அது தன் கையாக இருந்தாலும் சரி. ஆகவேதான், நான் “உங்கள் கையைக் கொடுங்கள்” என்று கேட்பதற்குப்பதிலாக, “என் கையைப் பிடித்துக்கொள்ளுங்கள்” என்று கூறினேன். நான் நினைத்தது போலவே அவரும் என் கையைப் பிடித்துக் கொண்டார்” என்றார்.











