• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

என்றுமே அன்புள்ள உன் அம்மா…

siddharbhoomi by siddharbhoomi
September 20, 2018
in கதைகள்
0
என்றுமே அன்புள்ள உன் அம்மா…
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

என்றுமே அன்புள்ள உன் அம்மா

ஒரு பெண் தனது ஒரேயொரு மகனுடன்
வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு கண் இல்லை. அவள் கணவன் திடிரென ஒரு நாள் இறந்து விட்டார். கணவரின் இறப்பிற்கு பின்பு அவளது வாழ்வின் ஒவ்வொரு நொடியும் தன் மகனின் எதிர்கால வாழ்வை குறித்த சிந்தனையாகவே இருந்தது.

தன்னிடம் இருந்த சொத்துக்களில்
ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல
பள்ளியில் சேர்த்தாள்.

மீதி சொத்தை தனது மகனின்
கல்வி தொடர்பான செலவுகளுக்கு தயார்
செய்திருந்தாள். நல்ல ஒழுக்கமிக்க மகன் இரக்கமானவன் புத்திசாலி ஊரில் எல்லோரும் புகழும் வண்ணம் அவன் செயற்பாடுகள் இருந்தன

பரிட்சையில் முதல் தரத்தில் தேறினான்
இந்த செய்தியை அறிந்த உடனேயே அந்த

தாய் ஆவலுடன் பாடசாலை நோக்கி ஓடினாள் மகனின் வகுப்பறை எது என அறிந்து அங்கு சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள்
இறைவனை புகழ்ந்தாள் சந்தோஷத்துடன்
வீடு வந்து அவனுக்கு பிடித்தமான உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.

மகனின் வருகையை எதிர்பார்த்து வழி மேல்
விழி வைத்து காத்திருந்தாள் மகன்
வந்தவுடன் வாஞ்சையுடன் அருகில்
சென்றாள். ஆனால் மகன் முகத்தை திருப்பி கொண்டான். தாயுடன் பேசவில்லை. நேராக அறைக்குள் சென்று படுத்து விட்டான்.
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

பதற்றத்துடன் ஓடிச்சென்று என்னவென்றாள்
கவலையுடன். மகன் சொன்னான், ” நீ ஏன்
என் பள்ளிக்கு வந்தாய்?. அங்கு அழகான பணக்காரர்கள் மட்டுமே வருவார்கள். நீயோ குருடி. என் நண்பர்கள் என்னை குருடியின் மகன் என
கூப்பிடுகின்றனர். இது பெரிய அவமானம். வெட்கம். இதன் பின்னர் நீ என் பள்ளிகூடம் பக்கமே வராதே” என கத்தினான் கோபமாக. அதிர்ந்து போனாள் தாய்.
ஆனாலும் மகனின் சந்தோஷம் கருதி இனி அவ்வாறு நடக்காது என சத்தியம் செய்தாள்.

இப்போது அவனது சுபாவம் மேலும்
மாறுபட ஆரம்பித்தது. தன்னை தேடி வரும்
நண்பர்கள் முன் வர வேண்டாம் என
தாயை எச்சரித்தான். அவள் கண்கலங்க
சரி என்றாள். பின்னர் சில நாட்கள் சென்ற
பின், தனக்கு குருடியுடன் இருப்பது வெட்கம் என்றும், தான் ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக சொன்னான்.ஒரு நாள் வீட்டை விட்டே சென்று விட்டான். அவள் கதறி துடித்தாள், தினமும் தன்
மகனை நினைத்து. இறுதி பரீட்சையில் தேர்ச்சி பெற்று மருத்துவ கல்லூரிக்கு மகன் தேர்வானது அவளுக்கு தெரியவந்தது.

தலை நகர் சென்று படிக்க வேண்டும்.
நிறைய செலவாகும். தனது மீதமிருந்த
அனைத்து சொத்துக்களையும் விற்று மகனுக்கு கொடுத்து அனுப்பினாள்.

5 வருடம் பறந்து சென்றன.
இப்போது அவளது மகன் ஒரு டாக்டர். அவனை பார்க்க ஆசையாய் இருந்தால் பல முறை
முயற்ச்சி செய்தும் அவனனை பார்க்க முடியவில்லை அவன் அனுமதிக்கவும் இல்லை.

ஒரு கடிதம் மகனிடம் இருந்து வந்தது. அதில், அம்மா நான் இப்போது இந்த நாட்டில் உள்ள சிறந்த டாக்டர்களில் ஒருவன். எனக்கும் ஒரு செல்வந்தரின் மகளுக்கும் திருமணம் நடக்க உள்ளது. அவளும் ஒரு டாக்டர்.

உன்னை போல் குருடியின் மகன் டாக்டர் என தெரிந்தால்
என் திருமனமும்,கௌரவம் பாதிப்படையும். ஆதலால் நான் இந்த நாட்டை விட்டும் உன்
பார்வையை விட்டும் கண் காணாத தேசம்
செல்கிறேன். இனி என்னை தேடாதே இது தான் அந்த கடிதத்தின் வரிகள். துடித்து போனாள் தாய்.

சில வருடங்கள் கடந்தன. முதுமையும்,
வறுமையும், அவளது ஒற்றை கண்ணுமே அவளிடம்
எஞ்சியிருந்த சொத்துக்கள். பசி காரணமாக
ஒரு பணக்கார வீட்டில் உணவுக்காக
வேலை செய்து வந்தாள் அந்த தாய்.

அந்த வீட்டின் எஜமானி இளம்வயது பெண். நல்ல
இளகிய குணம் படைத்தவள். இரட்சிக்கபட்டவள். அவளும் ஒரு டாக்டராகவே இருந்தாள். இந்த
தாயை தனது தாயாக நேசித்து போஷித்து வந்தாள். எல்லாம் நன்றாகவே நடந்தன. அந்த எஜமானியின்

கணவன் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்தான்.
தனது எஜமானியின் கணவர் வருகிறார்
என்பதனால் வாய்க்கு ருஷியாக நல்ல
உணவுகளை தயார்படுத்தி வைத்திருந்தாள்
அந்த வேலைகாரியான குருட்டு தாய்.

வீடு வந்த அவளது கணவன், சாப்பிட
அமர்ந்தான். உணவை இளம் மனைவி பரிமாற ஆசையாக சாப்பிட்டான். திடீரென அவன்
முகம் மாறியது. டக்கென்று திரும்பி
தன் மனைவியின் முகத்தை பார்த்து கேட்டான்,

“இதனை நீ சமைத்தாயா?” என்று. மனைவி குழப்பத்துடன் இல்லையே என்றாள். ” அப்படியானால் யார் சமைத்தது? என்றான். வீட்டு வேலைக்காரி சமைத்தாள் என்றாள் மனைவி. உடன் எழுந்த அவன் அடுப்படிக்கு சென்று எட்டி பார்த்தான். உள்ளே அவனது குருட்டு தாய்.
அதிர்ந்து போனான். இவள் இன்னும் உயிரோடு இருக்கிறாளா என்று ஆத்திரமும், வெறுப்பும் அவன் மூளையை ஆட்டுவித்தது.

அந்த தாய்க்கோ என் மருமகளா என் எஜமானி என்றும் தன் மகனை கண்ட சந்தோஷமும்,
மகிழ்ச்சியும் அந்த தாயின் இதயத்தை நிரப்பின. உணர்ச்சிகளால் இருவருமே பேசவில்லை.
மீண்டும் சாப்பாட்டு அறைக்கு வந்த கணவன் சொன்னான் தன் மனைவியை பார்த்து, “இந்த
குருடியை உடனடியாக அனுப்பி விடு என்று கத்தினான் அவன் சத்தம்.

அடுப்படியில் நின்ற அந்த அபலை தாயின் இதயத்தில் முட்டி மோதி நின்றது.
துவண்டு போனாள். வாழ்க்கையை இதற்கு பிறகும் வாழ வேண்டுமா என எண்ணி அழுதாள்.

அந்த இளம் மனைவியோ அது தனது கணவனின் தாய் என்று தெரிந்ததும் இங்கேயே இருக்கட்டும் என்று எவ்வளவோ சொல்லியும் தனது கணவனின் பிடிவாதமும், கோபமும், ஆவேசமும் எல்லை மீறி செல்லவே வேறு வழியின்றி அந்த தாய்க்கு போதுமான பணம் கொடுத்து முன்பு அவள் வாழ்ந்து வந்த ஊருக்கே மீண்டும் அனுப்பி வைத்தாள் வேதனையுடன்…

காலம் கடந்தது இப்போது அந்த டாக்டரின் தலை மயிர்கள் பழுக்க ஆரம்பித்து விட்டன. உடல் பலம்
சற்று சோர்ந்தும் போய்விட்டது. கணவனின்
சுயநலன், நன்றி மறத்தல் போன்ற காரணங்களினால் கருத்து மோதல் ஏற்பட்டு அவன் மனைவியும் விவாகரத்து செய்து விட்டு இன்னாரு மறுமணம் புரிந்து கொண்டாள். இப்போது டாக்டரிடம் பணத்தை தவிர வேறு எதுவும் இருக்கவில்லை.

எதிர்காலங்கள் சூனியமான நிலையில், ஆறுதலுற்கு கூட யாரும் இன்றி தனி மரமாக நின்றான். மெல்ல மெல்ல தான் தன் தாயிற்கு செய்த துரோகங்கள், அநியாயங்கள்,
நோகடிப்பு அவன் உள்ளத்ததை வந்து தொட ஆரம்பித்தன. ஒரு முறை ராத்திரியில்
எழுந்து அம்மா என கதறி அழும் அளவிற்கு அவனிற்கு தனது பாவங்களின் புரிந்தது.
தாயை பார்க்கவேண்டும் என நினைத்தான். ஆனால் போக வில்லை.

ஒரு நாள் காலையில் அவன் தொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது. அவனது தூரத்து உறவினர் ஒருவர்
பேசினார்.

“உன் தாய் மரண தறுவாயில் இருக்கிறாள் நீ உடனே வா என்பதே அந்த செய்தி. உடனடியாகவே அவன் தனது காரில் கிளம்பி தன் தாய் இருக்கும் இடத்திற்கு சென்றான். அவன் சென்ற போது, அவளது உயிர் பிரிந்து விட்டது.
உயிர் போன நிலையில் அவளை கட்டிலில்
படுக்க வைத்திருந்தனர். இப்போது அம்மா
என கண்ணீர் விட்டு கதறினான்… அழுதான்..

தன் தாயை நல்ல முறையில் அடக்கம்
செய்ய உதவினான். எல்லாம் முடிந்தது
அப்போது ஒரு கடிதத்தை அவனது உறவினர்
கொடுத்தார். தான் மறைந்த பின்னர், மகன்
வருவானாக இருந்தால் மட்டும் கொடுக்குமாறும், இல்லையெனில் எரித்து விடுமாறும் தயார்
கடைசி தருவாயில் வேண்டிக் கொண்டதாகவும்
அவர் சொன்னார்.

பிரித்து வாசித்தான். அவன் கண்களில் இருந்த கண்ணீர் வழிந்தது. அதில் இருந்த வரிகள் இதுதான்….என் அன்பு மகனே , எனக்கு தெரியும், என்
உருவத்தை பார்ப்பது உனக்கு ஒரு போதும்
பிடிக்காது என்று. அதனாலேயே, எனது மரணத்திற்கு பின்னர் நீ வந்தால் மட்டும் இதனை கொடுக்கும்படி சொன்னேன். மற்றபடி எனது அன்பு என்றும் மாறாதது.

அது இறைவனிற்கு மட்டுமே தெரிந்த விஷயம். மகனே நான் குருடி தான்.
உன் தாய் குருடியாக இருந்திருக்க கூடாது தான். எனக்கு உன் உள்ளம் புரிகிறது. உன் உணர்வுகளை நான் பெரிதும் மதிக்கின்றேன். நான் ஒரு நாளும்
உன்னை சபித்ததோ, கோபப்பட்டதோ கிடையாது.

உன் அப்பா இறந்தவுடன் எனக்கு ஒரு வாழ்க்கை வேண்டும் என்றிருந்தால் நான் இன்னொரு திருமணம் முடித்து நன்றாக வாழ்ந்திருப்பேன் ஆனால் நான் உனக்காகவே நான் வாழ்ந்தேன். அதை நீ புரிந்து கொள்ளாமல் போய் விட்டாயே??

மகனே உனக்கு தெரியுமா நான் ஏன்
குருடியானேன் என்று அப்போது உனக்கு சின்ன வயது. சாலையில் ஓரத்தில நீ விளையாடிக்கொண்டிருந்தாய். ஏதோ ஒரு வித பொருள் உன் கண்ணில் பட்டு உனக்கு ஒரு கண் குருடாகி விட்டது. டாக்டர்கள் இன்னொரு வெண்படலம் இருந்தால் மட்டுமே உனக்கு
பார்வையை கிடைக்க வைக்கலாம் என்றனர். என்ன
செய்வதென்று தெரியவில்லை. நேரமும் போதாது. அதனால்….

எனது ஒரு கண்ணை உடனடியகாவே தானம் செய்து உனக்கு பார்வை கிடைக்க செய்தேன்.
எனது கண்தான் இன்று உன் கண்களாக இருக்கிறது. நீ இந்த உலகத்தையும் ஏன் இந்த கடிதத்தையும் கூட அந்த கண்களாளேயே பார்க்கிறாய்..உனக்கு இதுவும் அவமானம் என்று உனது வலது கண்ணை பிடுங்கி எறிந்து விடாதே அதை அப்படியே விட்டு விடு. ஏனென்றால் அந்த கண்களால் தான் நான் உன்னை பார்த்துக் கொண்டிருப்பேன் என் அன்பு மகனே.

இப்படிக்கு,
என்றுமே அன்புள்ள,
உன் அம்மா….
இதை படித்த அந்த டாக்டர் மகன் உருன்டு புரண்டு அழுதானாம்..
இதை படித்த எனக்கு கண்கள் கலங்கின
உண்மை .
தயதுசெய்து பிறருக்கு பகிரவும்

Previous Post

திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா?

Next Post

சகலதடைகளையும் நீக்கும் மூலிகை சாம்பிராணி

Next Post
சகலதடைகளையும் நீக்கும் மூலிகை சாம்பிராணி

சகலதடைகளையும் நீக்கும் மூலிகை சாம்பிராணி

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025

சித்தர் வழி, சித்தர் வழி, சித்தர் வழி பாடல் – வெளியீடு சித்தர் பூமி 4K: உடனே கேளுங்கள்!

December 2, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »