• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

கடுவெளிச் சித்தர்

siddharbhoomi by siddharbhoomi
August 24, 2018
in சித்தர்கள்
0
கடுவெளிச் சித்தர்
24
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

கடுவெளிச் சித்தர்.

கடுவெளிச் சித்தர்”வைதோரைக் கூட வையாதே- இந்த
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே

வெய்ய வினைகள் செய்யாதே – கல்லை
வீணிற் பறவைகள் மீதில் எய்யாதே
வேம்பினை உலகில் ஊட்டாதே- உந்தன்

வீராப்பு தன்னை விளங்க நாட்டாதே
நீர்மேற் குமிழியிக் காயம் – இது
நில்லாது போய்விடும் நீயறி மாயம்

பார்மீதின் மெத்தவும் நேயம் – சற்றும்
பற்றா திருந்திடப் பண்ணு முபாயம்”
-ஆசான் கடுவெளிச்சித்தர்-

“பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
தோன்றைன மறையும் மறைந்தன் தோன்றும்

பெருத்தன சிறுக்கும் சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்
புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்”

மனதை ஆரோக்கியமாக வைத்திருந்தால் நூறாண்டுகள் முழுமையாக வாழலாம் என்கிறார்கள் சித்தர்கள். மனதிற் கெட்ட எண்ணத்தினால் உயிர் அணுக்கள் பாதிக்கப்படுகிறது என்கிறார் கடுவெளி சித்தர்.

அந்த மனதை நல்ல சிந்தனையோடு வைத்திருந்தால் முழு ஆயுளோடு வாழ வழி சொல்கிறார் கடுவெளியார். “யாரிடமும் எதையும் யாசித்துப் பெறாதீர்கள், மனதில் எந்த இச்சைகளுக்கும் அடிமையாகாதீர்கள், பெண்களின் மீது ஆசை வைத்து மோகத்தை வளர்க்காதீர்கள், உயிரினங்களுக்கு துன்பம் செய்யாதீர்கள்,

உங்களுக்கு கெடுதல் செய்பவர்களையும் நீங்கள் பாவச் சொல்லில் திட்டாதீர்கள், எந்த கஷ்டம் வந்தாலும் பொய் பேசாதீர்கள், மனைவியை பழிக்காதீரகள், மமதையுடன் தான் என்கிற அகம்பாவத்துடன் நடக்காதீர்கள், அடுத்தவரை கெடுக்க நினைக்காதீர்கல், நூறு பேரின் நடுவே தன்னை போற்ற வேண்டும் என புகழ் விரும்பி அலையாதீர்கள்.

இந்த செயல்களை தவிர்த்தாலே மனிதன் சந்தோஷமாகவும், ஆரோக்யமாகவும் வாழலாம் என்கிறார். மதுரை அடுத்துள்ள கல்லுப்பட்டிக்கு அருகிலுள்ள ரெங்கபாளையம் எனும் கிராமத்தில் வாழ்ந்து பல சித்தாடல்களும் அற்புதங்களும் நிகழ்த்தியவர் முனியாண்டி.

சாதாரண, மனிதரைப் போன்றே இயல்பான, அமைதியான முகத்துடன் சாந்த சொரூபியாக எப்பொழுதும் காட்சியளிக்கும் இவர் உடலில் காவி உடையை சுற்றியிருப்பார்.

அவருக்கு எதிரே என்ன பிரச்சனைகளோடு யார் சென்று நின்றாலும் அவர்களின் ஆன்மாவிடம் பேசி, அந்த அன்பர்களுக்கு தெரியாமலே அவர்களின் பிரச்சனைகலிருந்து அவர்களுக்கு விடுதலை வழங்கி விடுவார்.

அரிஜன வகுப்பைச் சார்ந்த தாய் தந்தையருக்கு பிறந்தவர் கடுவெளி சித்தர். தனது இளம் வயதில் மாடு மேய்க்கும் சிறுவனாக வாழ்க்கையைத் துவங்கினார். அப்பொழுது ஒருநாள் மாடுகளை மேய விட்டுவிட்டு அரச மரத்து பிள்ளையார் குளக்கரையில் தூங்க ஆரம்பித்தார்.

அப்போது மனதை மயக்கும் இரம்மியமான மணமும், மெல்லிய மணியோசையும் கேட்க, மெல்ல கண் திறந்தவர், சட்டென எழுந்து உட்கார்ந்தார். காரணம் அவருக்கு எதிரே தீட்சணய பார்வையுடன் வாட்டசாட்டமான ஒரு உருவம் நிர்வாண நிலையில் நின்றிருந்தது.

அந்த உருவத்தைக் கண்டு திடுக்கிட்ட சித்தர், பயத்தில் ஓடிச் சென்று தனக்கு அருகே இருந்த அரசமரப் பிள்ளையாரை தழுவிக்கொண்டார்.

அடுத்த நொடி அவருக்குள் மின்சாரம் பாய்ந்த போல் உணர்வால் உடல் முழுவதும் சிலிர்ந்தது. சில நொடிகள் தன்னை மறந்த நிலையில் இருந்த சித்தர் கண் விழித்தபோது எதிரே இருந்த உருவம் மெல்ல சித்தரை நெருங்கி வந்தது.

சித்தரின் தலை உச்சியில் தன் கரம் பதித்து ஆசீர்வதித்து விட்டு சொன்னது “இப்போது நீங்கள் தழுவியிருக்கிறீர்களே இந்த ஆனைமுகன், இவரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரதீட்சை செய்தது தாத்தா சித்தர் என்கிற மகான்.

அவர் வழியில் வந்தவன் நான். நீங்கள் எமது கையால் தீட்சைப் பெற்று சித்தராக வேண்டும் என்பது இறைகட்டளை. இனி நீங்கள் தவிர்த்தாலும் உங்களை தொடர்ந்து வருவேன். உங்களுக்கு உபதேசம் தருவேன்” என்று சொல்லிவிட்டு அந்த உருவம் மறைந்துவிட்டது.

சிறுவனான முனியாண்டி இந்த நிகழச்சியை தனது குடும்பத்தாரிடம் சொல்ல அதை யாரும் நம்பவில்லை. ஆனால் தாத்தா சித்தர் தினமும் சிறுவன் முன்பு தோன்றி மறைந்துவிடுவார்.

மெல்ல மெல்ல முனியாண்டி எனும் சிறுவன் சித்தர் பகவானுக்குரிய எல்லா யோகங்களும் தவங்களும் செய்து முடித்து சித்தரானார். இந்த சிறுவயதிலேயே அவர் பல அற்புதங்களை நிகழ்த்த ஆரம்பித்தார். சாதாரண மனிதராகவே தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட சித்தர் வயல் வேலை செய்வாராம்.

அங்கே தன்னோடு பணிபுரிகிற நண்பர்களுக்கு மதிய வேளையில் தனது அதிசய சக்தியால் உணவு வரவழைத்து நண்பர்கள் பசியை போக்குவார். அதே போல் நின்ற இடத்திலிருந்து ஜிவ்வென்று மேலே கிளம்பி பறவையைப் போல் பறப்பாராம்.

இதை நேரில் கண்ட பாலசுப்ரமணியம் என்பவர் பிரமிப்பாக சொல்கிறார். இந்த சிறு வயதில் சித்தருக்கு பல தேவதைகள் தரிசனம் தருவார்களாம்.

சில சமயம் அவர் தவத்தில் உட்கார்ந்து இருக்கும்போது சில தேவதைகள் தடுக்க முயலுமாம். ஆனால் எந்த தடை தடங்களுக்கும் செவி சாய்க்காமல் சித்தர் முனியாண்டி தவத்தை மேற்கொள்வாராம்.

அதேபோல் சித்தர் முனியாண்டிக்கு பறக்கும் சக்தியிருந்ததால் வடநாட்டிலுள்ள மதுரா, பிருந்தாவனம் முதலிய இடங்களுக்கும் ஸ்ரீலங்காவிலுள்ள கதிர்காமம் கோவிலுக்கும் அடிக்கடி பறந்து சென்று முருகனை தரிசித்துவிட்டு திரும்புவாராம்.

சித்தர் முனியாண்டிக்கு பறக்கும் சக்தி இருப்பது போல காற்றாய் மறையும் சக்தியும் இருந்தது. ஒருமுறை சித்தர் முனியாண்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் நின்று மீனாட்சி அம்மனை தொழுதுகொண்டிருந்தபோது,

ஒரு பித்தனை போன்ற நிலையிலிருந்த சித்தரை பார்த்த காவலர்கள் அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்ய, அவர் திமிறினாராம். உடனே அவர் கையில் விலங்கிட்டார்கள்.

சித்தர் முனியாண்டி அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டே “இந்த உலகத்தில் எனக்கு பூட்டா? முடியாது? என சொல்லிக்கொண்டே சட்டென மறைந்து போனார். அவரின் சக்தியை உணர்ந்து திடுக்கிட்ட காவலர்கள் தங்களை மன்னிக்கும்படி வேண்டுதல் செய்ய அவர் முன் கைவிலங்கு வந்து விழுந்ததாம்.

அதேபோல் திண்டுக்கல்லில் ஒரு ஓட்டலின் முன்பாக சித்தர் முனியாண்டி நிற்க, உள்ளிருந்த சிப்பந்திகள் “அந்த பரதேசியை கடைக்குள் விடாதீர்கள், அப்படியே விரட்டுவிடுங்கள்” என்று சொல்லிக்கொண்டே அவரை நெருங்கினர்.

ஆனால் என்ன அதிசயம்! அவர்கள் சித்தர் முனியாண்டியை நெருங்கிய நொடியில் அவர்களின் கண்களில் பளீர் என் மின்னல் வெட்டியது போல் வெளிச்சம் தோன்றி மறைந்தது.

அடுத்த நொடி அவர்கள் கண் திறந்தபோது எதிரே பரதேசி கோலத்திலிருந்த சித்தர் முனியாண்டி இப்போது பெரிய செல்வந்தர் போன்று கோட், சூட் சகிதமாக நின்று கொண்டிருந்தார். இதைக்கண்டு அதிர்ந்த சிப்பந்திகளும் சுற்றி இருந்தவர்களும் சித்தர் முனியாண்டி ஆச்சரியமாக பார்க்க அவர் “என்ன பண்றது,

பரதேசி கோலத்திலிருந்ததால் கடைக்குள்ளே விடாம துரத்தப்பார்த்தார்கள், அதான் இப்படி மாறிவிட்டேன். இனிமேல் உடையை மட்டும் பார்க்காதீர்கள், மனிதனை பாருங்க, மனசைப் பாருங்க” என்று சொல்லிவிட்டு ஓட்டலுக்கு செல்லாமலே நகர்ந்துவிட்டார்.

“நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி”

“நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு – அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு”
– கடுவெளிச் சித்தர் –

கடு வெளி என்றால் வெட்ட வெளி என்பதைக் குறிக்கும். இவர் சூனியத்தை தியானித்து சித்தி பெற்றதால் கடுவெளிச் சித்தர் என்று அழைக்கபட்டார்.

கடுவெளி சித்தரின் பாடல்கள் தமிழ் அறிந்த அனைவரிடமும் பிரபலமானவை, ஆனால் இவரின் வரலாறு யாருக்குமே தெரியாத பொக்கிஷம் போல ஆகி விட்டது.

கடுவெளிச் சித்தர் பாடல்
ஆனந்தக் களிப்பு
வாத வைத்தியம்

பஞ்ச சாத்திரம் ஆகிய நூல்களை இவர் எழுதியதாகவும் சொல்லப் படுகிறது.
காஞ்சியில் சமாதியடைந்ததாகவும் குறிப்புகள் கூறுகின்றன. காஞ்சிபுரத்திலே சமாதி அடைந்ததாகச் சொல்லப்படும் கடுவெளிச்சித்தரின் பாடல் ஒன்றையே நான் வியந்து நோக்குகிறேன்.

உலகையே சுத்தவெளியாக நோக்கி தனது தத்துவப்பாடல்களை யாத்ததினால் இவர் கடுவெளிச்சித்தர் என அழைக்கப்படுவதாகச் சிலர் சொல்கிறார்கள்.

மற்றும் சிலரே சோழநாட்டிலுள்ள கடுவெளி என்னும் ஊரத் தனது பிறப்பிடமாகக் கொண்டததினால் இவர் கடுவெளிச்சித்தர் எனறழைக்கப்படுகிறார் என்கிறார்கள்.

வாழ்க்கைக்குத் தேவையான தத்துவங்களை விளக்கும் வகையில் அமைந்த இவரது

ஒரு பாடலைத் தழுவிய என் மழலை வரிகள்,
பசுந்சோலைதனில் மலர்களினடுவே
மனமயங்கியிருந்த மதிகெட்ட

மனிதனவன் மனதிலொரு ஆசை கொண்டு
கட்டிலிலே மனையாளொடு குழாவியொரு
சிறு தொட்டிலை நிரப்ப
ஜயிரண்டு மாதமன்றோ

அவதிஇறாள் மங்கையவள்
முல்லையாய் மலர்ந்த
அம்மழலை முதிர்ந்ததும் ஜயகோ
மூளைகெட்ட மானிடனாய்

தாய்தந்தை தவமிருந்து
தாமடைந்த அப்பூவுடலை
மண்குடம் போட்டுடைப்பதைப் போலே
மண்மீது வீணடித்தானே !
சக்தி

இத்தகிய அற்புத தத்துவ முத்துக்கள் விளைந்த உள்ளத்தில் ஊறிக்கிடந்த சமுதாய விழிப்புணர்ச்சி இவரது மற்றொரு பாடலில் தெரிகிறது.
நல்லவனைப் போலே நடிக்காதே – மனிதா
கள்வனின் வடிவாகாதே

தப்பான வழி உறவுகளை – மனிதா
தவறிக்கூட நீ இழைக்க எண்ணாதே
உன் சொந்தம் இல்லாப் பொருளை – மனிதா

உன் வசம் ஆக்க முனையாதே
நண்பனைப் போல் உறவாடி – மனிதா
நயவஞ்சகமாய் பகை மூட்டாதே

ஆமாம் உலகில் மனிதனின் உள்ளம் அவனுக்குக் கொடுக்கும் உபத்திரவங்களை அவன் அடையும் மார்க்கங்களைத் தவிர்க்கும் பொருட்டு, கடுவெளிச் சித்தர் பகரும் பாடல் அறிவூட்டுகிறது. ஆக மொத்தம் சித்தர் என்போர் மனிதர்களின் சிருஸ்டிப்பா என்னும் கேள்வியை விடுத்து சித்தர்கள் கூறும் பொருள் மிக்க பாடல்களை ஒஉரிந்து கொள்வது மனதின் மென்மையை வளர்க்கும் என்பதே உண்மை.

அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில் இரும்பை-605 010. ஆரோவில், விழுப்புரம் மாவட்டம். இங்குள்ள தல விநாயகர் சுந்தர கணபதி என்று அழைக்கப்படுகிறார்.

இங்குள்ள விமானம் ஏகதள விமானம். திருஞானசம்பந்தர், பட்டினத்தார் ஆகியோர் சுவாமியை குறித்து பதிகம் பாடியுள்ளனர். சுந்தரர் ஊர்த்தொகை நூலில் சுவாமியை பற்றி பாடியிருக்கிறார்.

அம்பாள் சன்னதிக்கு முன் இடதுபுறத்தில் நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது கால் சற்று கீழே மடங்கியபடி இருக்கிறது. இதனை நடராஜரின் சந்தோஷ கோலம் என்கிறார்கள். நடராஜரையும் சிவகாமியம்மனையும் சுற்றி அக்னி வளையம் இருக்க, அதன் மத்தியில் இவர்கள் காட்சி தருவது வித்தியாசமான அமைப்பாகும்.

இவ்விடத்தில் நின்று கொண்டு சுவாமி, அம்பாள், நடராஜர் ஆகிய மூவரையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம். பின்புறத்தில் முருகன் ஆறு முகங்களுடன் மயில் மீது அமர்ந்து வள்ளி, தெய்வானையுடனும்,

கால பைரவர் தனிச்சன்னதியில் தெற்கு பார்த்தபடியும் காட்சி தருகின்றனர். சிவனிடம் வரம் பெற்ற அம்பன், அம்பாசுரன் எனும் இரு அசுரர்கள் பார்வதி தேவியின் மீது ஆசை கொண்டனர்.

அவர்கள் இருவரும் பார்வதியை திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினர். அவர்களை பார்வதிதேவி, மகாகாளி அவதாரம் எடுத்து வதம் செய்தாள். இதனால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்த அம்பாள், இத்தலத்தில் சிவனை நோக்கி தவம் செய்து, தோஷம் நீங்கப்பெற்றாள்.

பிற்காலத்தில் மகாகாளர் எனும் மகரிஷி சிவதல யாத்திரையின் போது வடக்கே உஜ்ஜயினியில் ஒரு லிங்கமும், தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் மாகாளத்தில் ஒரு லிங்கமுமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார். அவர் கிழக்கே வந்தபோது, இத்தலத்தின் மகிமையை அறிந்து இங்கேயும் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்கினார். சுவாமியும் “மகாகாளநாதர்’ என்ற பெயர் பெற்றார்.

மூன்று முக லிங்கம் : கடுவெளிச்சித்தர் என்பவர் இத்தலத்தில் உள்ள அரசமரத்தின் அடியில் சிவனை எண்ணி தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது நாட்டில் சரியாக மழை பெய்யாமல் மக்கள் அனைவரும் வறுமையில் வாடினர்.

சித்தரின் தவத்தால்தான் நாட்டில் மழை பெய்யவில்லை என்று எண்ணிய மன்னன் ஒரு தேவதாசியின் மூலம் அவரது தவத்தை கலைத்தான். சித்தர் தவம் கலைந்து எழுந்தபோது மன்னன் அவரிடம், நாட்டின் பஞ்ச நிலையைக்கூறி அதற்கு காரணமாக சித்தரின் தவம் இருந்ததோ என சந்தேகம் கொண்டு அவரை எழுப்பியதாக நடந்த உண்மைகளைக் கூறினான்.

மன்னனின் பேச்சைக்கேட்ட சித்தர் அவனுக்காகவும், மக்களுக்காவும் மீண்டும் தவ வாழ்க்கையை தொடராமல் இங்கேயே தங்கி சிவ பணி செய்து வந்தார். அதன்பின் நாட்டில் மழை பெய்தது. மக்கள் பஞ்சம் நீங்கப் பெற்று, சிவனுக்கு திருவிழா எடுத்தனர்.

விழாவில் சுவாமி ஊர்வலமாக சென்றபோது, அவருக்கு முன்பாக சித்தரின் தவத்தை கலைந்த தேவதாசி நடனமாடிச் சென்றாள். அப்போது, அவளது காலில் அணிந்திருந்த சிலம்பு கீழே கழண்டு விழுந்தது. இதை சித்தர் பார்த்து விட்டார்.

தேவதாசியின் நடனத்தால் விழாவிற்கு தடை வந்து விடக்கூடாதே என்று நினைத்த சித்தர், சிலம்பை எடுத்து அவளது காலில் அணிவித்து விட்டார். இதைக்கண்ட மக்கள், சித்தரின் செயலை தவறாக பேசி அவரை ஏளனம் செய்தனர்.

கோபமடைந்த சித்தர் சிவனை நோக்கி, “”தான் அமைதியாக இருப்பதை இம்மக்கள் தவறாக எடுத்துவிட்டார்களே, அவர்களுக்காகத்தானே நான் அனைத்திலும் மேலான தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தேன்!” என்று சிவனை வேண்டி பதிகம் பாடினார்.

தன் பக்தனான சித்தருக்கு சோதனை வந்ததால், கோயிலி ல் இருந்த சிவலிங்கம், மூன்று பாகங்களாக வெடித்துச் சிதறியது. உண்மையை உணர்ந்த மன்னன், சித்தரிடம் மன்னிப்பு கேட்டான்.

சித்தரும் அவனை மன்னித்து சிவனை வேண்டி மற்றொரு பாடல் பாடினார். சிதறிய லிங்கத்தின் பாகங்கள் ஒன்று சேர்ந்தன. பின் சிவன், சித்தருக்கு காட்சி தந்து முக்தி கொடுத்தார்.

குயில்மொழி நாயகி: அம்மனின்திருநாமம் குயில்மொழி நாயகி. இவள் தனிச்சன்னதியில் தாமரை மலர் பீடத்தின் மேல், தெற்கு பார்த்தபடி மகாலட்சுமியின் அம்சத்துடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள். கடுவெளி சித்தர் அரசமரத்தின் அடியில் தவம் செய்தபோது,

அம்பாள் குயில் வடிவத்தில் இம்மரத்தில் தங்கியிருந்து சித்தரை கண்காணித்து, அவரது தவத்தின் மேன்மையை தன் குரலால் சிவனிடம் சொல்வாளாம். இதனால் அம்பாளுக்கு “குயில்மொழி நாயகி’ என்று பெயர் ஏற்பட்டது. பேச்சு சரியாக வராதவர்கள்,

இசை கற்பவர்கள், இசைக் கலைஞர்கள் அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டு, அதனை நாக்கில் தடவிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் குரல் வளம் சிறக்கும், கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.

கலா சந்திரன் :

இக்கோயில் பிரகாரத்தில் சந்திரன், மேற்கு பார்த்தபடி தனிச்சன்னதியில் இருக்கிறார். இவர் இடது கையில் ஏடு ஒன்றை வைத்துக் கொண்டு “கலா சந்திரனாக’ காட்சி தருகிறார். பக்தர்கள் இவருக்கு பால் சாதம் நைவேத்யமாக படைத்து வணங்குகின்றனர். இதனால் கல்வி, கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.

நவக்கிரக சன்னதியில் உள்ள கிரகங்கள் அனைத்தும் மனைவியர்களுடன் இருக்கின்றனர். சூரியன் தாமரை மலர் மீது, தன் இரண்டு கால்களையும் மடக்கி வைத்து அமர்ந்து கொண்டு உஷா, பிரத்யூஷா ஆகிய இருவரையும் தன் இரு மடிகளில் அமர்த்திய கோலத்தில் அருளுகிறார்.

சூரியனின் இந்த தரிசனம் விசேஷமானது.
அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறையில் லிங்கம் மூன்று பாகங்களாக பிளந்து,

மூன்று முகங்களுடன் இருக்கிறது. இம்மூன்று பாகங்களையும் ஒரு செம்பு பட்டயத்தில் கட்டி வைத்து பூஜைகள் செய்கின்றனர். இம்முகங்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளை குறிப்பதாகச் சொல்கிறார்கள். சிவனின் இந்த மும்மூர்த்தி தரிசனம் மிகவும் அபூர்வமானது.

அருள்மிகு ஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்

தல வரலாறு:

கடுவெளிச்சித்தரின் அவதாரத்தலம் இது. கடுவெளி என்றால் பரந்தவெளி. இந்த சித்தர், தான் கண்டுணர்ந்த ஞானத்தை மக்களுக்கு உபதேசித்தார். இவர் சிவதரிசனம் வேண்டி தவமிருந்தார்.

அவருக்காக, இத்தலத்தில் எழுந்தருளிய சிவன், சித்துக்களில் வல்லமை பெறும்படி அருள் செய்தார். பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சோழமன்னன் ஒருவன், சித்தருக்கு அருளிய சிவனுக்கு கோயில் எழுப்பினான்.

இவர் பஞ்சபூதங்களில் ஆகாயத்திற்கு அதிபதியாக திகழ்வதால் ஆகாசபுரீஸ்வரர் என்று பெயர் பெற்றார். இந்த தலத்துக்கு சித்தரின் பெயரையே வைத்தான்.

பூராடம் நட்சத்திர தலம்: சுவாமி ஆகாசபுரீஸ்வரர் பூராடம் நட்சத்திரத்திற்கு அதிபதியாக அருளுகிறார். மங்களகரமான வாழ்க்கை தருபவள் என்பதால், அம்பிகைக்கு மங்களாம்பிகை என்று பெயர். ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும்,

வாஸ்து பகவானும், பூராட நட்சத்திரநாளில் ஆகாசபுரீஸ்வரரை வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே, இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்களது நட்சத்திர நாளில் இத்தல சிவனுக்கு புனுகு, ஜவ்வாது சாத்தி, கேசரி நைவேத்யம் செய்து வணங்கி வரலாம்.

திருமணத்தடை உள்ளவர்கள், தங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சுவாமி சன்னதியில் சாம்பிராணி புகையிட்டு வழிபடுகின்றனர்.

சித்தர் வழிபாடு: முதலில் இக்கோயிலில் கடுவெளிச்சித்தரின் சிலை வடிவம் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன், இக்கோயிலைத் திருப்பணி செய்தபோது, சித்தரின் சிலை கிடைக்கப்பெற்றது. இவர் கோயில் முன் மண்டபத்தில் இருக்கிறார்.

சித்தருக்கு சிவன் காட்சி தந்தபோது, அவருக்காக நந்திதேவர் வெளியே நின்று கொண்டார். இதனடிப்படையில் நந்தி, கோபுரத்திற்கு வெளியே உள்ளது.

ஞானத்தை தேடுங்கள், உங்களுக்கு உள்ளேயே உள்ளது.

நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.

நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்-

சித்தர் பூமி தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..!

உங்கள் நண்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!

+91-73050 18180

Previous Post

மாங்கல்ய பாக்யம்,செல்வ வளம் அருளும் வரலட்சுமி விரதம்..!

Next Post

புண்ணியம் செய்தால் தான் திருமீயச்சூர்-ஸ்ரீலலிதாம்பாள்

Next Post
புண்ணியம் செய்தால் தான் திருமீயச்சூர்-ஸ்ரீலலிதாம்பாள்

புண்ணியம் செய்தால் தான் திருமீயச்சூர்-ஸ்ரீலலிதாம்பாள்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

‘மோட்ச தீபம்’ ஏற்றும் முறை மற்றும் அதன் ஆன்மீக பலன்கள்?

‘மோட்ச தீபம்’ ஏற்றும் முறை மற்றும் அதன் ஆன்மீக பலன்கள்?

March 11, 2026
இறந்த வீட்டில் சிவபுராணம் பாடுவது?

இறந்த வீட்டில் சிவபுராணம் பாடுவது?

March 10, 2026
கும்பாபிஷேகத்தில் கும்பத்தின் மாவிலையில் இருந்து தண்ணீர் எடுத்து ஏன் தெளிக்கின்றனர் தெரியுமா?

கும்பாபிஷேகத்தில் கும்பத்தின் மாவிலையில் இருந்து தண்ணீர் எடுத்து ஏன் தெளிக்கின்றனர் தெரியுமா?

March 9, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »