காதலர் தினம் இல்லை – அன்பு தினம்..!
காதல் என்பது என்ன..?
அன்பு என்று அர்த்தம்..!
அன்பு காதலிக்கு மட்டும்தான் என்பது இல்லை..!
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளிடமும்
அன்பு செலுத்தலாம்..!
ஓர் அறிவு படைத்த தாவரங்கள் முதல்,
இரண்டு அறிவு படைத்த நத்தை முதல்,
மூன்று அறிவு படைத்த எறும்பு முதல்,
நான்கு அறிவு படைத்த தேனீ முதல்,
ஐந்து அறிவு படைத்த பாலூட்டிகள் முதல்,
ஆறாவது அறிவு படைத்த மனிதன் என்று அனைத்து உயிர்களிடமும் அவரவர்களுக்கு பிடித்தவர்களிடமும் பிடித்தவைகளிடமும் அன்பு செலுத்தலாம்..!!
இன்றிலிருந்து
நம்முடைய மனைவி மக்கள்,
பெற்றோர்கள்,
உடன்பிறந்தவர்கள்,
உற்றார் உறவினர்கள்,
நண்பர்கள், கள்ளங்கபடமில்லா குழந்தைகள் என அனைவரிடமும் அன்பு செலுத்தி இப்படியும் இந்த தினத்தை கொண்டாடலாம் என உலகிற்கு காட்டலாமே..!
வாழ்க அன்பு தினம்…!வளர்க நம் அன்பு பாசம்..!!










