குரு என்பவா் உங்கள் அருகிலேயே இருந்து இறுதி காலம் வரை உங்களை வழி நடத்துபவா் அல்ல, நீங்களும் ஒரு குரு தான் என்று உங்களை உணர வைப்பவரே குரு,
குருவின் சக்திகளை காண்பித்து உங்களை பிரம்பிக்க வைப்பவா் குரு அல்ல, உங்களுக்குள் மறைந்திருக்கும் ஆற்றல்களை உங்கள் மூலமாகவே வெளிக்கொணர வைப்பவா் .
உங்கள் கா்ம வினைகளை எல்லாம் ஏற்று கொள்பவா் குரு அல்ல, கா்ம வினைகளின் நன்மை தீமைகளை நீங்களே அறிந்து உணர வைத்து கடைத்தேற வழிகாட்டுபவா் .
உங்களிடம் பணம் பொருள் கேட்பவா் அல்ல குரு, தன் ஞானத்தை உங்களிடம் வழங்கி உங்களையும் ஞானவானாக மாற்றுபவரே குரு.
தன்னை வழிபடு என்று கூறுபவா் குரு அல்ல, உன்னுள் இருக்கும் இறை ஆற்றலை உன் மூலமாகவே வெளிப்படுத்தி உன்னை இறைவனாகவே மாற்றுபவரே குரு.
மொத்தத்தில் பக்குவமில்லாத உன்னை பக்குவ படுத்தி இறை ஆற்றலை சுவைக்க செய்து உன்னையும் இறை நிலைக்கு உயா்த்தி உன் மூலமாக பலரை பக்குவநிலைக்கு கொண்டு வருவதே குருவின் செயல்.
உண்மையான குரு என்பவாிடம் பணம் பொருள் ஆடம்பரம் எதுவுமே இருக்காது.
சித்தா்கள்போற்றி











