சம்மர் ஸ்பெஷல் ராகி கூழ் (கேழ்வரகு கூழ்)ரெசிபி சத்துடன் குளிர்ச்சி அளிக்கும், Ragi Kuzhu in Tamil – Energy drink for Summer Cool Simply and easy
சம்மர் ஸ்பெஷல் ராகி கூழ் ரெசிபி சத்துடன் குளிர்ச்சி அளிக்கும், கடந்த தலைமுறைகளில் சிறுதானியங்கள் மறந்து போய் விட்டிருந்தாலும், அவற்றுள் மறக்கப்படாமல் உபயோகப்படுத்தப்பட்டு வந்த ஒரு சிறுதானியம் கேழ்வரகு.
கேழ்வரகு ஒரு முழு தானியம் மட்டுமின்றி முழுமையான தானியமும் ஆகும். இது மிக நுண்ணியதாய் இருப்பதால் இதன் தோல் நீக்கப்படுவதோ பாலிஷ் செய்யப்படுவதோ இல்லை. மேலும் இதன் எந்த பகுதியும் நீக்கப்படுவதும் இல்லை. எனவே இதன் சத்துக்களில் எந்த இழப்பும் ஏற்படாமல் பயன்படுத்தப்படுகிறது.










