சீலத்திரு ஶ்ரீ மண்ணுருட்டி சுவாமிகள் குருபூஜை விழா அழைப்பிதழ்.
திருக்கோவிலூரில் அவதரித்த மண்ணுருட்டி சுவாமிகளை புண்ணிய பூமியானபுதுச்சேரி தன்னகத்துள்ளே இழுத்துக் கொண்டது.
மண்ணுக்கும் நோய் தீர்க்கும் தன்மை
உண்டு என்று சங்க இலக்கியங்களால் அறியப்படுகிறது. அவ்வகையில் மண்ணுருட்டி சுவாமிகள் பல சித்து வேலைகளை செய்து மக்களின் குறையை தீர்த்துவைப்பது நமது சீலத்திரு மண்ணுருட்டி சுவாமிகளின் வழக்கமாக இருந்தது.
இக்காரணம் கொண்டே தாய்
தந்தையார் இட்ட திருநாமம் இராமகிருஷ்ணன் என்ற திருநாமம், மருவி, மக்கள் வழக்கில் மண்ணுருட்டி சுவாமிகள் என்றே அழைக்கப்பட்டார்.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரி தம்பு நாயக்கர் வீதியில் உள்ள ஒரு அன்பர் வீட்டிலும், புதுவை, குயவர்பாளையத்தில் உள்ள ஜீவரத்தினம் உடையார் இல்லத்திலும் தங்கியிருந்து சித்துகள் பல புரிந்து தன்னை நாடி வருபவர்களின்
துயர்நீக்கி அருள் செய்த சீலத்திரு மண்ணுருட்டி சுவாமிகள் 1963-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாட்டுப் பொங்கல் அன்று தன் கூட்டை உடைத்தெறிந்து பேரானந்த பெருவெளியில் பரப்பிரமானந்தத்தோடு கலந்தார்.
புதுச்சேரி, தென்னஞ்சாலை ரோடு, கண்ணன் நகரில் அமைந்துள்ளது அவருடைய ஜீவசமாதிக் கோயிலில்.
நிகழும் விகாரி வருடம் தை மாதம் 25-ஆம் தேதி (8.2.2020) சனிக்கிழமை பூச நட்சத்திரம் 55-வது ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு ஸத்குரு சீலத்திரு ஸ்ரீ மண்ணுருட்டி சுவாமிகள் ஆலயத்தில் சிறப்பு ஹோமமும் அபிஷேகமும் நடைபெற உள்ளது. மற்றும் இவ்விழாவினில்
ஆன்மீக அன்பர்களும், பெதுமக்களும் பங்கேற்று இறையருள் பெற்றுஉய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
Mannurutti Swamy Temple
Thennansalai Rd, Pudupalaiyam, Puducherry, 605005










