தவளகிரீஸ்வரர் தரிசனம் – வெண்குன்றம், வந்தவாசி, வடஆற்காடு மாவட்டம்.
வடஆற்காடு மாவட்டம் வந்தவாசி அருகில் அமைந்துள்ள வெண்குன்றம் என்னும் தவளகிரி
மலை மீது அமர்ந்து அருளாட்சி செய்யும் எம்பெருமான் தவளகிரீஸ்வரர் தரிசனம் செய்ய
கருங்கல் படிகள் அமைக்கப்படுகின்றன .
கண்வ மகரிஷிக்கு கார்த்திகை தீப காட்சியை இவ்விடத்திலேயே காண அருளி செய்து
இன்றளவும் பற்பல ரிஷிகளாலும் சித்தர்களாலும் எம்பெருமான் பூஜிக்கப்படுகிறார்.
1800 அடிகளுக்கு மேல் உயரமுள்ள இம்மலைக்கு சரியான பாதை இல்லாததால் பொதுமக்கள் இறைவனை தரிசனம் செய்வது சிரமமாக உள்ளது. பற்பல பக்த்தர்களின் பெருமுயற்சியால் இம்மலையில் 1200 கருங்கல் படிகள் அமைக்கும் திருப்பணி தொடங்கப்பட்டுள்ளது.
நாகர்கோயிலில் இருந்து அம்மன் உபாசகரான மணிகண்டன் ஸ்தபதி அவர்கள் இப்பணியை மேற்கொண்டு வருகிறார் .வந்தவாசியை சேர்ந்த திரு அச்சுதன் அய்யா மற்றும் அடியார்கள் கண்ணும் கருத்துமாய் சிரமேற்கொண்டு இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.ஒரு படி 9 அடி நீளமும் ஒன்றரை அடி அகலமும் கொண்டு அமைக்க படுகிறது.










