இந்த புனிதமான, ஆசீர்வாதமான, அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என்னுடைய இரு குழந்தைகளுக்கும்(வயதான தள்ளாடிய அப்பா, அம்மா) நான் மிகவும் சந்தோஷமாக மனநிறைவுடன் பணிவிடை செய்தேன்.
அப்போது அவர்கள் கண்களில் கண்ணீர் வரும், என்னை கஷ்டப்படுத்துகின்றார்கள் என நினைத்து. அவர்கள் கண்ணீரை துடைக்க எனக்கு அழுகை வந்து விடும்.
இப்போதும், இதை எழுதும் போது என் கண்ணீரை அடக்க முடியவில்லை, கண்கள் குளம் ஆகின.

நண்பர்களே, இந்த வாய்ப்பு கிடைத்தால், தவற விட்டுவிடாதீர்கள். நீங்களே செய்யுங்கள், வேலைக்கு ஆள் வைத்து அல்ல.
இதை விட பெரிய ஆசீர்வாதம் இவ்வுலகில் வேறு இல்லை.










