மனிதனின் எண்ணத்தையும் மீறி சிலநேரங்களில் கால சக்தி வேலை செய்வதுண்டு. எனவே, எது நடந்தாலும் அதை ஏற்கும் வகையில், மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் எப்போதும் சமாதானத்தையும், சகிப்புத்தன்மையையும் நமது லட்சியங்களாக கொள்ள வேண்டும்.
கடந்து போன நாட்களும், செயல்களும் மீண்டும் வருவதில்லை. எனவே, கடந்த கால வாழ்க்கையைப் பற்றி சிந்திக்க கூடாது.
அறிவு தான் அரசன். மனமும், இந்திரியங்களும், உடம்பும் அறிவுக்கு அடங்கி வாழ வேண்டும்.
ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும், ஓராயிரம் தோல்விகள், துயரங்கள், இழப்புகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் இருக்கத்தான் செய்யும்.
சாதித்தே தீருவேன் என்று சபதம் போடு. குறைகளும்,தடைகளும் கூட கொடுக்கும் ஒத்துழைப்பு.
மாற்ற முடியாததை மாற்ற நினைக்காதே; மாற்ற முடிந்ததை மாற்றாமல் விடாதே! மாற்றக்கூடியது எது, மாற்ற முடியாதது எது என்பதில் விவேகம் காட்டு.
ஓர் எறும்பைப் பாருங்கள். அதற்கு என்ன எதிர்காலம் இருந்துவிட முடியும்? இருந்தாலும் அது சும்மா இருக்கிறதா? நீங்கள் அதன் வழியை தடைபடுத்தினால் அது அடுத்த வழியை அமைத்துக் கொள்கிறது. தோல்வியே இல்லாத பயணம்; நமக்கு மட்டுமென்ன வழியா இல்லை?










