நாம் உலகில் வாழும் பொழுது கடைப் பிடிக்க வேண்டிய நல்வினைகள் எவை என்பதை இறைவன் கருணை கூர்ந்து கட்டளை இட்டு சிவஞான சித்தியார் நூலில் அருளியுள்ளார். இந்த 16 நல்வினைகள் அறச் செயல் எனப்படும், அவை பின் வருமாறு…
1.ஒழுக்கம் : உயர்ந்த பண்பு உடையவரோடு பொருந்தி நடப்பது ஆகிய உலகத்தோடு ஒட்ட ஒழுகல்
2.அன்பு : யாரிடத்தும்/ சர்வ ஜீவராசிகள் இடமும் அன்பு உடைமை.
3.அருள் : கருணை உடைமை.
4.ஆசாரம் : வேதாமங்களில் விதித்த படி கடைப் பிடித்தல்.
5.உபசாரம் : அவரவர்க்கு தகுந்த படி செய்யும் உபசரிப்பு
6.உறவு : யாவரிடத்தும் நண்புடைமை
7.சீலம் : நற்குணம் உடைமை.
8.வழுக்கு : ஐம்பொறி அடக்கல், விரதம் காத்தல் இலாத்தவம் முதலிய குற்றம் இல்லாத தவம் உடைமை.
9.தானங்கள் : தக்கோர்க்கு உவகையோடு செய்யும் தானங்கள்.
10.வந்தித்தல் : தன்னைவிட மூத்தவர்களிடம் வழிபாடு உடைமை.
11.வணங்கல் : கடவுளை வணங்குதல்
12.வாய்மை : மெய்மை உடைமை.
13.அழுக்கு இலாத்துறவு : பிறர்மனை விழையாமை, வரைவின் மகளிர் விழையாமை முதலிய குற்றமற்ற ஆண் தகைமை உடைமை.
14.அடக்கம் : தீய வழியில் செல்லாமல் பொறிகளை அடக்கமுடன் இருப்பது.
15.அறிவு : தக்கன இவை, தகாதன இவை எனப் பகுத்து அறிதல்.
16.அர்ச்சித்தல் : தன்னின் மூத்தாரைப் பூசனை செய்தல் உடைமை.
இந்த 16 அறச்செயல்களை சிவஞான சித்தியார் சாஸ்த்திர நூலில் அருள்நந்தி தேவநாயனார் நமக்கு அருளுகிறார் கீழ் வரும் பாடலில்…
“ஒழுக்கம், அன்பு, அருள், ஆசாரம்,
உபசாரம், உறவு, சீலம்,
வழுக்கு இலாத் தவம், தானங்கள்,
வந்தித்தல், வணங்கல், வாய்மை
அழுக்கு இலாத் துறவு, அடக்கம்,
அறிவொடு அர்ச்சித்தல் ஆதி
இழுக்கு இலா அறங்கள் ஆனால்
இரங்குவான் பணி அறங்கள்!”











