நவபுலியூர் யாத்திரையின் 5வது ஸ்தலமான காணாட்டமுள்ளுர்
இறைவன் : ஸ்ரீ பதஞ்சலி நாதர்
இறைவி : கண்ணார்குழலி எனும் கோலவளைகையம்மை, அம்புஜாகூp
ஸ்தல விருட்சம் : வெள்ளளெருக்கு
தலதீர்த்தம் : சூரிய புஷ்கரணி
காணாட்டமுள்ளுர் எனும் கானாட்டம்புலியூர், ஓமாம்புலியூருக்கு மிக அருகில் அமைந்துள்ளது. இத்திருத்தலம் ஆதிசேஷன் அவதாரமான ஸ்ரீ பதஞ்சலி முனிவரால் பெயர் பெற்றுள்ளது. இது இராகு பரிகாரதலமாகும்.
காட்டுமன்னார் கோயில் அருகிலிருக்கும் முட்டம் எனும் ஊரிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில்தான் உள்ளது. ஓமாம்புலியூரிலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலம் விக்ரம சோழனால் கட்டப்பட்டது. நவபுலியூரின் அடுத்துவரும் புலியூர் அனைத்துமே விக்ரம சோழனால் கட்டப்பட்டதாகும். பதஞ்சலி முனிவரின் சிலாரூபம் இங்கு உள்ளது.
நாகதோஷ பரி;கார ஸ்தலம். பதஞ்சலி முனிவர் பூஜித்து, பகவான் காட்சி கொடுத்த தலம். சுந்தரழூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலம். சித்திரை மாதம் 1-ம் தேதியன்று சூரியபகவான் வணங்கும் தலம். கார்த்திகை நட்சத்திரம், சிம்ம ராசி, சிம்ம லக்கத்தில் உள்ளவர்கள் வழிபடவும் சிறப்பு வாய்ந்த தலமாகும்.
தொடர்புக்கு: ஜெயசந்திரன் குருக்கள் – 97903 33377
நாளை நவபுலியூர் யாத்திரையின் 6வது ஸ்தலமான சிறுபுலியூர் பற்றி பார்க்கலாம்…











