நவபுலியூர் யாத்திரையின் 6வது ஸ்தலம். சிறுபுலியூர்
சிறுபுலியூர் புதன் பரிகாரதலமாகும். மயிலாடுதுறை, கொல்லுமாங்குடி வழியாக இத்தலத்தை அடையலாம். மயிலாடுதுறையிலிருந்து(மாயாவரம்) சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்த கோயில் சிறுபுலியூரின் வெகு அருகில் இருக்கும் நாடாகுடி என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது. வியாக்ரபாத முனிவரும் பதஞ்சலி முனிவரும் நவபுலியூர் யாத்திரையை இணைந்தே நடத்தி இருக்கிறார்கள்.
மிகவும் வயோதிக நிலையில் அவர்கள் சிறுபுலியூரை அடையும் போது இருட்டிவிடுகிறது. இவ்விடத்தில் அவர்கள் அரங்கனை நினைத்து இயலாமையால் மோட்ச மந்திரத்தை ஜபிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். சிதம்பரத்திலிருந்து எம்பெருமான் வழித்துணைநாதராக எழுந்தருளி அவர்கள் ஸ்ரீரங்கத்தை அடைய இன்னும் தூரமிருப்பதை உணர்த்துகிறார்.
இறைவன்: வழித்துணைநாதர் எனும் மார்க்கபந்தீஸ்வரர்
இத்தலம் மிகச்சிறிய தலமாகும். ஸ்ரீரங்கத்திலிருந்து அரங்கனும் பாலரங்கனாக இங்கு எழுந்தருளி இவ்விரு முனிவருக்கும் தரினம் அருளியதால,; சிறுபுலியூர் 108 திவ்ய தேசத்தில் ஒன்றாக ஆயிற்று.
எருக்கத்தம்புலியூரிலிருந்து சிதம்பரம், மாயாவரம், கொல்லங்குடி வழியாக சுமார் 85 கி.மீ. பயண தூரத்தில் உள்ளது.
தொடர்புக்கு: சங்கர் குருக்கள் – 97915 14671
நாளை நவபுலியூர் யாத்திரையின் 7வது ஸ்தலம் பற்றி பார்க்கலாம்…











