நிரதிசையானந்தர், கஜபதி லாலா தெரு, திருவல்லிக்கேணி
சுவாமிகளின் இயற்பெயர் முனுசாமி முதலியார். சுவாமிகள் பெரும் வணிகராகவும், செல்வந்தராகவும் மற்றும் இறைநாட்டம் உடையவராக திகழ்ந்தார்.

சுவாமிகள் தனது குருவான சாங்கு சித்த சிவலிங்க நாயனாரை பணிந்து தன்னை ஆட்கொண்டருளுமாறு வேண்டி நின்றதனால், ஐயன் அவர்கள் தனது சீடரை சோதித்த பிறகு தனது சீடராக ஏற்று கொண்டார்.
சுவாமிகள் குருவருளால் தனது பொருட்செல்வத்தை துறந்து கிடைத்தற்கரிய அருட்செல்வத்தை -ஆத்ம ஞானத்தை பெற்றார்.

ஐயன் அவர்கள் தனது சீடருக்கு நிரதிசையானந்தர் என்று திருநாமத்தை சூட்டினார். 1900ஆம் ஆண்டு ஐயன் சாங்கு சித்தசிவலிங்க நாயனார் சம்மதியுற்ற பின்னரும் சுவாமிகள் குருவின் சன்னதியில் இருந்து பூசை செய்து குருவுக்கு பாமாலைகள் புனைந்து வந்தார்.
சுவாமிகள் ஆன்மப் பசியுற்றோர்க்கு ஆன்ம ஞானத்தை போதித்து அருளினார்கள். பின்னர் 1911ஆம் வருடம் பங்குனி மாதம் பௌர்ணமி அன்று நிர்விகல்ப சமாதி அடைந்தார். அன்றுமுதல் இன்று வரை தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.










