காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
திருக்குறள்.
பெருஞ் செல்வம் என்பது ஒருவருக்கு , “மன அடக்கமே “!
மனத்தின் விரைவே மரணம்.
மன வீச்சின் குறைவே ஆயுள்.
சொல்லில் விளங்க வைக்க முடியாத செல்வம் , மனம் பேசாதிருத்தல்.
அதுவே “மௌன யோகம். ”
அதைவிட உயிருக்கு உய்வு தரக்கூடியது (மரணமிலாத் தன்மை) இங்கு இல்லை.
குண்டுச் சட்டிக்கு உள்ளேயே குதிரை ஓட்டத் தெரிந்தவன் நீண்ட ஆயுளோடு இருப்பான். அதற்கு குருவின் துணை வேண்டும்.
குதிரை — பரி . பரி என்பது வாசியைக் குறிக்கும் சொல். அதைக் கவனிக்கத் தெரிந்தவர் பரிபாஷை அறிந்தவர்.
இந்த உலக விஷயங்களை நிறையத் தெரிந்து வைத்துக் கொண்டவன் விரைவில் மரிப்பான்.
மனமென்னும் மாடு அடங்கில் தாண்டவக் கோனே முத்தி வாய்த்தது என்று எண்ணேடா தாண்டவக் கோனே.
அதுவே ஆக்கம் என்னும் இறை நிலையை அடைய ஒரே வழி.










