முரண்பாடே முழுமை – முழுமையே அமைதி
இன்று ஒன்றை சொல்வேன் !
நாளை வேறு ஒன்றை சொல் வேன் ,
நாளை மறுநாள் மற்றொன்றை சொல் வேன் .
அது ஒரு விஷயமே அல்ல….
என்னுடைய பேச்சு மாறு படலாம் ஆனால் நான் மாறு படுவதில்லை.
ஏனெனில் நான் இன்று ஒன்றைச் சொல்லும் போது நீங்கள் மெளனமாவீர்கள்.
நாளை சுத்தமாக வேறுபட்ட ஒன்றை கூறும் போதும் நீங்கள் மெளன மாவீர்கள்.
நாளை மறுநாள் முற்றிலும் மாறுட்ட எதையாவது கூறும் போதும் மெளனமாகி போவீர்கள்.
நான் சொல்வது அனைத்தையும் நானே மறுத்து பேசலாம்.
ஆனால் நீங்கள் மெளனமாக இருக்க வேண்டும் என்பதில் எந்த மாறுதலும் இல்லை.
ஓஷோ











