அம்மா – மூன்றெழுத்து..!
அப்பா – மூன்றெழுத்து..!
தம்பி – மூன்றெழுத்து..!
தங்கை – மூன்றெழுத்து..!
மகன் – மூன்றெழுத்து..!♥
மகள் – மூன்றெழுத்து..!
காதலி – மூன்றெழுத்து..!
மனைவி – மூன்றெழுத்து..!
தாத்தா – மூன்றெழுத்து..!
பாட்டி – மூன்றெழுத்து..!!
பேரன் – மூன்றெழுத்து..!
பேத்தி – மூன்றெழுத்து..!
இவை அனைத்தும் அடங்கிய
உறவு – மூன்றெழுத்து..!
உறவில் மேம்படும்,
பாசம் – மூன்றெழுத்து..!
பாசத்தில் விளையும்
அன்பு – மூன்றெழுத்து..!
அன்பில் வழியும்
காதல் – மூன்றெழுத்து..!
காதலில் வரும்
வெற்றி – யும் மூன்றெழுத்து..!
தோல்வி – யும் மூன்றெழுத்து..!
காதல் தரும் வலியால் வரும்
வேதனை – மூன்றெழுத்து..!
வேதனையின் உச்சகட்டதால் வரும்
சாதல் – மூன்றெழுத்து..!
சாதலில் பறிபோகும்
உயிர் – மூன்றெழத்து..!
இது கவிதை – என்றால் அதுவும் மூன்றெழுத்து..!
இது அருமை – என்றால் அதுவும் மூன்றெழுத்து..!
மொக்கை – என்றால் அதுவும் மூன்றெழுத்து..!
கமெண்ட்ஸ் எப்படி வருமோ
என்ற கவலை – யும் மூன்றெழுத்து..!
மூன்று – உம் மூன்றெழுத்தே..!
வாழ்க – இவை அனைத்தும் அடங்கிய
தமிழ் – உம் மூன்றெழுத்தே..!
நட்பு – என்ற மூன்றெழுத்தில் இணைந்து படித்த,
அனைவருக்கும் நன்றி – என்பதும் மூன்றெழுத்து..!










