• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

யாழ்ப்பாணம் மாசிலாமணி மங்களம்மாள் 

siddharbhoomi by siddharbhoomi
March 11, 2020
in பொது
0
யாழ்ப்பாணம் மாசிலாமணி மங்களம்மாள் 
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook
இந்தியவிடுதலைப்போராட்ட வீராங்கனை – யாழ்ப்பாணம் மாசிலாமணி மங்களம்மாள் 
பிறந்த நாள் இன்று 10 , மார்ச் (1884)

*மாசிலாமணி மங்களம்மாள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காந்தியவாதியும்,
இந்திய விடுதலைப் போராளியும் , சமூக சீர்திருத்தவாதியும், பெண்கள் முன்னேற்றத்துக்காக உழைத்த பெருமகளும் ஆவார்.

*யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் கல்வியில் முன்னணியில் திகழ்ந்த, வசதி படைத்த குடும்பம் ஒன்றில் பிறந்த இவர், இலங்கையிலும், இந்தியாவிலும் பல்வேறு சமூக, அரசியல் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

*மங்களம்மாளின் தாய்வழிப் பாட்டனார் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த கதிரவேலுப்பிள்ளை என்பவர்.

*19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் ஒரு வழக்கறிஞர். அக்காலத்தில் பி. ஏ பட்டம் பெறுவது யாழ்ப்பாணத்தில் மிக அரிதாக இருந்ததால், பி. ஏ. பட்டதாரியான இவரை மக்கள் பிஏ தம்பி என்றே அழைத்துவந்தனர்.

*இன்றும் யாழ்ப்பாணத்தில் அவர் வாழ்ந்த வீட்டுக்கு அருகில் உள்ள ஒழுங்கை ,
பி. ஏ. தம்பி ஒழுங்கை என அழைக்கப்படுகிறது.

*பி. ஏ. தம்பியின் ஆண் மக்களான செல்லப்பாபிள்ளை, பொன்னம்பலபிள்ளை, சின்னப்பாபிள்ளை ஆகியோர் இந்தியாவின் திருவிதாங்கூரில் உயர் பதவிகளை வகித்துவந்துடன், இந்தியாவின் சுதந்திர இயக்கத்திலும் பங்குகொண்டிருந்தனர்.

*பி. ஏ. தம்பியின் மகளுக்குப் பிறந்தவரே மங்களம்பாள்.

*1884ம் ஆண்டு மார்ச்சு (பங்குனி) மாதம் 10ம் நாள் இவர் குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாகப் பிறந்தார் மங்களம்மாள்.

*இவர் பள்ளிக்குச் சென்று கல்வி கற்றது குறித்துத் தகவல் இல்லை. யாழ்ப்பாணத்தில் அக்கால உயர்குடி இந்துக்களின் வழக்கப்படி பெண்ணான இவருக்கு வீட்டிலேயே கல்வி அளிக்கப்பட்டிருக்கக்கூடும். மாமனாரான பொன்னம்பலபிள்ளையின் ஒரே மகனான மாசிலாமணிப்பிள்ளையை மங்களம்மாள் திருமணம் செய்துகொண்டார்.

*மாசிலாமணிப்பிள்ளை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த “தேசாபிமானி” பத்திரிகையின் ஆசிரியராக இருந்ததுடன், இந்தியாவிலும், இலங்கையிலும் பல்வேறு பொதுப்பணிகளில் ஈடுபட்டவர்.

*திருமணத்துக்குப் பின் மாசிலாமணிப்பிள்ளை அக்காலத்தில் இந்தியாவில் வாழ்ந்துவந்ததால் மங்களம்மாளும் இந்தியாவுக்குச்சென்றார்.

*கணவரின் தூண்டுதலினால் மங்களம்மாள் காங்கிரசில் இணைந்து தீவிரமாக உழைத்தார்.
1924 இல் கோயில்பட்டியில் இடம்பெற்றகாங்கிரஸ்மாநாட்டில்  பெண்கள்அரங்குக்கு  இவரே தலைமைதாங்கினார்.

*1927ல் மகாத்மாகாந்தியின் முன்னிலையில் சென்னையில் நடந்த அகில இந்திய காங்கிரசு மாநாட்டிற்கான வரவேற்புக்குழுவில் இவரும் இருந்ததுடன், பெண்கள் அரங்கத்தில் வரவேற்புரையையும் நிகழ்த்தினார்.

*இந்தியாவில், 1926க்கு முன்னர் பெண்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கக்கூடாது என்ற தடை இருந்தது.

*இது நீக்கப்பட்டபின்னர் சென்னை மாநகரசபைக்கு இடம்பெற்ற தேர்தலில் நீதிக் கட்சித் தலைவரான நாயுடுவை எதிர்த்து, எழும்பூரில் மங்களம்மாளைக் காங்கிரசுக் கட்சி நிறுத்தியது.

*அத்தேர்தலில் மங்களம்மாள் வெற்றி பெறாவிட்டாலும், யாழ்ப்பாணத்துப்  பெண்மணி தமிழ்நாட்டுஅரசியலில் இந்த நிலையை அடைந்தது முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

*மங்களம்மாள் இந்தியாவில் இருந்த காலத்தில் 1923ல் பெண்களுக்கான “தமிழ்மகள்” என்னும் மாத இதழ் ஒன்றைத் தொடங்கி நடத்திவந்தார்.

*இவர் மீண்டும் யாழ்ப்பாணம் வந்த பின்னரும் தொடர்ந்து இந்த இதழ் 40 ஆண்டுகாலம்  வெளிவந்தது.

*இதன் பின்னர், பல்வேறு காரணங்களினால், காலாண்டு, அரையாண்டு இடைவெளிகளிலேயே வெளியிட முடிந்தாலும் 1971 ஆம் ஆண்டு, 87 வயதில் அவர் இறக்கும்வரை இவ்விதழை அவர் வெளியிட்டு வந்தார்.

*கடைசி இதழ் முற்றுப்பெறுமுன்னரே அவர் இறந்து விட்டாலும், அவ்விதழ் அட்டையில் அவரது படத்தையும், அவர் பற்றிய இரண்டு கட்டுரைகளையும் உள்ளடக்கி அவரது நினைவாக வெளியானது.

*மங்களம்மாள் மாசிலாமணிப்பிள்ளை இணையரின்யின் மூத்த மகள் , மகேசுவரிதேவி கலைப்புலவர் க நவரத்தினத்தை மணந்தவர் ,A First Book of Indian Music, Veena Tutor ஆகிய நூல்களை எழுதியவர்.

*யாழ்ப்பாணத்தில் பல்வேறு சமூகப் பணிகளிலும் , பெண்கள் முன்னேற்றத்திலும் அக்கறையுடன் பாடுபட்ட மாசிலாமணி மங்களம்மாள் தனது 87 ஆம் அகவையில் இயற்கை எய்தினார்.

*இந்தியா , இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் தன் அயரா உழைப்பால் முத்திரை பதித்தவர்.

*யாழ்ப்பாணத்து வீரத் தமிழச்சி , தியாகச்சுடர் “மாசிலாமணி ப்பிள்ளை மங்களம்மாளின் “புகழ் பாடி வீரவணக்கம் செலுத்துவோம்

Previous Post

ஒரு நிமிடம் கூட செலவலிக்காதீர்கள்.

Next Post

48 நிமிடத்தில் ஞானம் அடைவது எப்படி ?

Next Post
48 நிமிடத்தில் ஞானம் அடைவது எப்படி ?

48 நிமிடத்தில் ஞானம் அடைவது எப்படி ?

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

March 4, 2026
சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »