ராகி கூழ் | Ragi Koozh Summer Special
கேழ்வரகில்(ராகி )உடலுக்கு நன்மை தரும் அமினோ அமிலங்களும், கால்சியம், இரும்புச்சத்து, நியாசின், தையமின், ரிபோஃப்ளோவின் ஆகியவையும் உள்ளன. உடலின் நைட்ரஜன் அளவைச் சமப்படுத்தவும், சேதமடைந்த திசுக்களைச் சரிசெய்வதற்கும் கேழ்வரகு முக்கிய உணவாக விளங்குகிறது.
ரத்தச்சோகை உள்ளவர்கள், ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு இது அற்புதமான மருந்து. பாலூட்டும் தாய்மார்கள் இதைக் குடித்துவந்தால், பால் சுரப்பு அதிகரிக்கும். மோருடன் கலந்து இந்தக் கூழை அருந்தும்போது, உடலைக் குளிர்ச்சியாக்கும்; உடலுக்கு வலுவையும் தரும். சத்தான கேழ்வரகு கூழ் (ராகி கூழ் )எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!
வெயில் கால உணவு வகைகளில் ராகி கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டிய பொருள். வெயில் வெப்பத்தைத் தனிக்க உடல் சூட்டை கட்டுப்படுத்த கேழ்வரகு பெரும் பங்கு வகிக்கிறது. அதனால்தான் வெயில் காலம் என்றாலே கேழ்வரகு கூழ் குடிக்கும் வழக்கம் உண்டு. வெயில் காலங்களில் குறையக்கூடிய நோய் எதிர்ப்புச் சக்தியும் கேழ்வரகில் அதிகம் . இப்படி பல நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் : இதில் பாலிஃபினோல்ஸ் (Polyphenols) மற்றும் ஃபைபர் (Fiber) அதிகம் . இன்சுலினை அதிகரிக்கக் கூடிய க்ளைசெமியா (Glycemia) அமிலத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய தன்மை அதிகம். நிரிழிவு நோய் உள்ளவர்கள் கேழ்வரகு தினமும் உண்டால் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
மினரல்கள் அதிகம் : பொட்டாசியம் (Potassium), பாஸ்பரஸ் (Phosphorus), இரும்பு (Iron) போன்ற மினரல் சத்துகள் அதிகமாக நிறைந்துள்ளது. இதனால் ஹீமோகுளோபின் (Hemoglobin) சுரத்தல் அதிகமாகும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அனீமியா நோய்க்கு இது நல்ல உணவு.
புற்றுநோய்க் கிருமிகளை கட்டுப்படுத்தும்: கேழ்வரகில் ஆண்டி ஆக்ஸிடண்ட் (Antioxidants) அதிகமாக இருப்பதால் செல்களை தாக்கக் கூடிய கிருமிகளை கட்டுப்படுத்தும். முகம் விரைவில் முதுமைத் தோற்றத்தை அடைவதையும் கட்டுப்படுத்தும். செல்களை புத்துயிருடன் வைத்துக் கொள்ள உதவும்.
இதயத்தின் துடிப்பை சீராக்கும் : இதில் பொட்டாசியம், (Potassium) மெக்னீசியம் (Magnesium) அதிகம் நிறைந்துள்ளதால், இதய நரம்புகளின் செயல்படுகளை பராமரித்து சீரான நிலையில் வைத்துக்கொள்ள உதவும். இதயத்திற்கு ஏற்படும் கோளாறுகளையும் கட்டுப்படுத்த உதவும்.
கொழுப்புகளைக் கரைக்கும் : இதில் நிறைந்திருக்கும் நார் சத்து மற்றும் அமினோ ஆசிட் த்ரியோனைன் (Amino acid threonine) கல்லீரல் வெளியிடும் கொழுப்பை கரைத்து சுத்திகரிக்க உதவுகிறது. இதனால் கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் எடையும் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது.
எலும்புகளுக்கு உறுதி அளிக்கும் : இதில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளின் உறுதித் தன்மைக்கு உத்திரவாதம் அளிக்கிறது. இதனால் மூட்டு வலி, முட்டி வலி, எலும்பு முறிவு போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு கேழ்வரகு ஊட்டுவது நல்லது.











