நாடு சிதறுண்டால் சமூகம் நிலைக்காது. தனது நாடு நல்ல நிலையில் இருக்க வேண்டுமானால் தனி நபர்களும் ஒரு சில தியாகங்களைச் செய்ய முன் வர வேண்டும்.
இதுவே ராஷ்டிர தர்மம் அல்லது தேசிய தர்மம் எனப்படுகிறது. மனித இனம் இன்றேல் நாடும் இல்லை.ஆகவே மனித இனம் நிலைபெற வேண்டுமென்றால் தனி நபரின் ஒத்துழைப்பு அவசியம் தேவை. இதற்காக அவர்கள் கடைபிடிக்க வேண்டிய வை மானவ தர்மத்தின் கீழ் வருகிறது.
இதற்கும் தன்னைத் தியாகம் செய்ய வேண்டியது அவசியமாகிறது. மேலே கூறப்பட்டவை அனைத்தும் நடுவில் ஒரு மனிதனை வைத்து அவனைச்சுற்றி வரையப்பட்ட வட்டங்களைப் போன்றது. அந்த மனிதன் தான் தர்மங்களைக் கடைபிடிப்பவன்.
ஒரு முன் மாதிரியான இந்துவானவன் எல்லா வகையான தர்மங்களையும் கடைபிடிக்கக் கடமைப் பட்டவன். உண்மையில் இது மிகவும் கடினமான காரியமே. ஆனாலும் உயர்ந்த குறிக்கோளை நோக்கிப் பயணம் செய்யும் வாழ்க்கைதான் பெருந்தன்மையுடையதும் அர்த்தமுடையதுமாகவும் அமையும்.
இந்த எல்லா வகையான தர்மங்களின் அடிப்படையே பொதுவாகத் தன்னைத் தியாகம் செய்தல் என்பதாகிறது.தன்னைத்தியாகம் செய்யாமல் தனி மனிதன் வாழ முடியாது. இவ்வாறு தன்னைத்தியாகம் செய்வது என்பது உண்மையில் தன்னை வலுவூட்டிக் கொள்வதாகவும் பத்திரமாகத் தன்னைப் பாதுகாப்பதுமாக அமையுமே அன்றி தன்னைப் பறி கொடுப்பதாக ஆகாது.











