வீட்டில் அதிர்ஷ்டம் மற்றும் லக்ஷ்மி கடாட்சம் பெறுக எந்த ராசிக்காரர்கள் எந்த கடவுளை வணங்க வேண்டும்?
ஒருவர் தனது ராசிக்கு ஏற்ற கடவுள்களை வணங்கி வந்தால், நினைக்கும் காரியம் வெற்றி பெறும்.
மேஷம்:
மேஷ ராசியை ஆளும் கிரகம் தான் செவ்வாய். இந்த செவ்வாய் கிரகத்தின் பலத்தை அதிகரிக்க, மேஷ ராசிக்காரர்கள் சிவனை வணங்க வேண்டும்.
ரிஷபம்:
ரிஷப ராசியை ஆளும் கிரகமும் சுக்கிரன் தான். எனவே ரிஷப ராசிக்காரர்கள், லட்சுமி தேவியை வணங்க, அதிர்ஷ்டம் கொட்டுவதோடு, நேர்மறை ஆற்றலும் அதிகரிக்கும்.
மிதுனம்:
மிதுன ராசியை ஆளும் கிரகம் புதன். ஆகவே இந்த புதனின் சக்தியை கூட்டுவதற்கு, மிதுன ராசிக்காரர்கள் ஸ்ரீமன் நாராயணனை வணங்க வேண்டும். இதனால் வாழ்வில் எப்போதும் வெற்றிக் கிட்டும்.
கடகம்:
கடக ராசியை ஆளும் கிரகம் சந்திரன். இந்த சந்திரனின் வலிமையை அதிகரிக்கும் கடவுள் கௌரி அம்மன். அமைதி மற்றும் இரக்கத்தின் உருவகமான கௌரி அம்மனை கடக ராசிக்காரர்கள் மிகுந்த பக்தியுடன் வணங்கினால், அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.
சிம்மம்:
சிம்ம ராசியை ஆளும் கிரகம் சூரியன். சூரியனின் வலிமையை அதிகரிப்பதற்கு சிம்ம ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்க வேண்டும். எந்நேரமும் சிவனின் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டு இருந்தால், வாழ்க்கையில் நல்ல நிலையை அடையலாம்.
கன்னி:
கன்னி ராசியை ஆளும் கிரகம் புதன் ஆகும். புதனின் சக்தியை கூட்டுவதற்கு, ஸ்ரீமன் நாராயணனை வணங்க வேண்டும். இதனால் அனைத்திலும் வெற்றிகள் மற்றும் வாழ்வில் அதிர்ஷ்டம் கொட்டும்.
துலாம்:
துலாம் ராசியை ஆளும் கிரகம் சுக்கிரன். இந்த சுக்கிரனின் பலத்தை அதிகரிக்க லட்சுமி தேவியை வணங்க வேண்டும். இதனால் அவருக்கு அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் கொட்டும்.
விருச்சிகம்:
செவ்வாய் கிரகம் தான் விருச்சிக ராசியை ஆள்கிறது. எனவே இந்த ராசிக்காரர்கள் சிவனை தொழுது வந்தால், செவ்வாய் கிரகத்தின் வலிமையை அதிகரிக்கலாம்.
தனுசு:
தனுசு ராசியை ஆளும் கிரகம் குரு ஆகும். குருவின் பலத்தை அதிகரிக்க சிவனின் அவதாரமான தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும். எனவே பயனுள்ள விளைவுகளைப் பெற தனுசு ராசிக்காரர்கள் தட்சிணாமூர்த்தியை வணங்க வேண்டும்.
மகரம்:
மகர ராசியை ஆளும் கிரகம் சனி. இந்த கிரகத்தின் வலிமையை சிவபெருமான் அதிகரிப்பார். ஆகவே மகர ராசிக்காரர்கள் சிவபெருமானை வணங்கினால் அனைத்து வளங்களையும் பெறலாம்.
கும்பம்:
கும்ப ராசியை ஆளும் கிரகமும் சனி தான். செவ்வாயின் பலத்தை அதிகரிக்க சிவபெருமானை வணங்க வேண்டும். அதிலும் தூய மனத்துடன், மனதார சிவனை தரிசித்து வந்தால், எதிலும் நன்மை கிட்டும்.
மீனம்:
மீன ராசியை ஆளும் கிரகம் குரு. எனவே மீன ராசிக்காரர்கள் தட்சிணாமூர்த்தியை அன்றாடம் வணங்கி வர, நல்ல பலன் கிடைக்கும்.










