வால்மீகி முனிவர், திருவான்மியூர்
வால்மீகி அல்லது வால்மீகி முனிவர்என்பவர். இந்தியாவின்பழம் பெரும் இரண்டு இதிகாசங்களில் ஒன்றான, இராமாயணம் எனும் இதிகாசத்தை இயற்றியவர் ஆவார்.வால்மீகி ஒரு வழிப்பறி கொள்ளையனாக இருந்தவர்.
ஒருமுறை நாரதரைக்கொள்ளையிட முயன்றபோது, நாரதரின் வேண்டுகோள்படி நாரதரைக் கட்டிவைத்துவிட்டு, வீடு சென்று, யாருக்காக தாம் கொள்ளைத் தொழிலை மேற்கொண்டாரோ அந்தஉறவினரிடமெல்லாம்,
தனது தொழிலால் தனக்கு சேரும் பாவங்களிலும் அவர்கள் பங்குகொள்வரா என வினவ, அவர்களது மறுப்புரையைக் கேட்டு,
’இதுதான் உலகம், யாருக்காகக் கொள்ளை அடித்தேனோ அந்த நெருங்கிய உறவினர்கள் கூட என் விதியில் பங்கேற்கப்போவதில்லை’ என்று உணர்ந்து முனிவரிடம் சரண் புகுந்து,
அவரதுவார்த்தைப் படி இறைவழிபாட்டில் ஈடுபட்டார்.
எல்லாவற்றையும் துறந்து தியானம் செய்த இளைஞன் நாளடைவில் தன்னைச்சுற்றிலும் கறையான் புற்று கட்டியதும் அறியாமல் பல ஆண்டுகள் தன்னை மறந்ததியானத்தில் ஆழ்ந்தான். கடைசியில் ’ஓ முனிவனே எழுந்திரு!’ என்ற குரல் அவனைஎழுப்பியது.
அவனோ, ’நான் முனிவனல்ல, கொள்ளைக்காரன” என்று திகைத்து பதில்கூற, ’இனி நீ கொள்ளைக்காரனும் அல்ல, உனது பழைய பெயரும் மறைந்து விட்டது.வால்மீகி – கறையான் புற்றிலிருந்து தோன்றியவர் என்று வழங்கப்படுவாய்’
என்றுஅக்குரல் கூறியது.திருவான்மீகியூர் என்று இருந்து பின் மருவி திருவான்மியூர் என்றுவழங்கப்படலானது. மேலும் இங்கு வான்மீகி முனிவருக்குத் தனிக்கோயிலும்அமைந்துள்ளது.










