தஞ்சை திருவிடைமருதூரில் 1800 ஆம் ஆண்டு, புகைவண்டி நிலைய அதிகாரியாக பணிபுரிந்த
காசிநாதன் தீவிர சிவபக்த்தர். ரங்கராயரின் மகனாக பிறந்த காசிநாதனுக்கு, இந்த இயல்பான
வாழ்கை மீது அதிருப்தி ஏற்பட்டு, தமது வாழ்வுக்கு வேறு எதோ இலக்கு அல்லது அர்த்தம்
இருப்பதாக சொல்லிக்கொண்டே இருந்தார்.
நவசூத்திர வீட்டை நான் என்று அலையாமல் சிவசூத்திரத்தை தெரிந்தறிவது எக்காலம்? என்று தேட ஆரம்பித்தவருக்கு ஒரு குருவின் துணை தேவைப்பட்டது.
தெளிவுக்கான குருவைத் தேடியபோது தான், காசிநாதனுக்கு தாத்தாத்ரேய பீடத்தில் இருந்த அவதூத மௌன சுவாமிகளின் பிம்பம் மனதில் பிரகாசித்தது.
அவரைச் தரிசித்ததும் சட்டென தெளிவு வந்துவிட்டது. அன்றே அவரிடம் சிஷ்யனாக சேர்ந்து, துறவறம் பெற்று, சதானந்த பிரம்ம குருதேவதத் என்ற தீட்சா நாமத்துடன், புதிய வாழ்வைத் தொடங்கி சதாகாலமும் தியானத்திலேயே இருக்கலானார்.
சுவாமிகள் தியான வலிமையால் உச்சிக்கு கொண்டு வந்து அமுதம் பருகி, தாகம் தீர்த்து ஸ்ரீமத் சதானந்த சுவாமியாக சிவனை அறிந்த சித்தராக மாறி துயரப்படும் மக்களின் கஷ்டங்களை,
தன் ஆசியால் கழுவிவிடும் ஆத்மாவாக அவதாரம் பூண்டார்.
தஞ்சையிலிருந்து சென்னை வந்த சித்தர், கன்னிமரா ஹோட்டல் அருகே கூவம் பாலத்தின் மேல் உட்கார்ந்தபடி இருக்கையில், அந்த வழியாக சோகத்தோடு போன தலைமை காவலரை பார்த்து, “நாராயண” என்று அழைக்கிறார்.
அறிமுகம் ஏதும் இல்லாத, ஆண்டி கோலத்திலுருந்த இவருக்கு தன் பெயர் எப்படி தெரியும் என ஆச்சிரியத்தில், தயங்கியபடி “அய்யா என்னையா அழைத்தீர்கள்?” என கேட்கையில்,
“இன்றைக்குள் திருடர்களை பிடிக்காவிட்டால், உன் வேலைக்கு பாதகம் வரும் என்ற சோகத்தில்தானே இருக்கே? கூவம் ஆற்றங்கரை முட்புதரில், திருடிய நகைகளை பங்குபோட இருக்கின்றனர்.
நீ சக காவலருடன் போய் பிடி” என்றதும், காவலர் நாராயணனுக்கு சந்தோசம். அவர் வணங்கி சென்று திருடர்களை பிடித்தாராம்.
இவரே தற்போது உள்ள இடத்தில ஆசிரமம் அமைத்து கொடுத்தாராம். ஒருமுறை சுவாமிகள், நவகண்ட யோகத்தில் இருந்திருக்கிறார். இதை பார்த்த பதறிய மக்களுக்கு, ” நான் தியானத்தில் இருக்கும் பொழுது, குறைகளைச் சொல்ல,
ஆசி வாங்க வரும்பொழுது கைகளை தட்டி, ஓசை எழுப்பிவிட்டு அல்லது “ஓம் தத் சத்” என்று சொல்லிவிட்டு வரவேண்டும் என்றாராம்.
ஒருமுறை சித்திரை மாத வெயிலின் காரணமாக மழை இல்லாததால் மக்கள் சுவாமிகளிடம் வந்து தங்கள் நிலங்கள், பயிர்கள் விடுவதாக முறையிட்டனர். சுவாமிகளின் அருளினால் மழை பெய்து ஏரி, குளங்கள் நிறைந்தன.
1922 ஆம் ஆண்டு, தை மாதம் மகம் நட்சத்திரத்தில் ஜீவசமாதியான ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் சதாதானந்தபுரம்,பெருங்களத்தூர் ஆலயத்தில், சுவாமிகளின் 7 சிஷ்யர்களும் இங்கேயே அடக்கமாகியிருக்கிறார்கள் என்பது தனிச்சிறப்பு.
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்–
“சித்தர் பூமி” தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..!
உங்கள் நண்பர்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!
Mobile:+91-7305018180










