ஸ்ரீ வேதகிரிஸ்வரர் திருக்கோவில் – குமிழி.
ஜன நெருக்கடி, இரைச்சலான போக்குவரத்து சத்தம், புகை, தூசி கலந்த அசுத்த காற்று, இயற்கையே இல்லாத தார் சாலை, கான்கரீட் கட்டிடங்கள் நிறைந்த சென்னை நகரத்தின் மிக அருகிலேயே மூன்று புறமும் மலைகள் சூழ, மரங்கள், செடிகள், கொடிகள் படர்ந்த அடர்ந்த காடு உள்ளது.

காக்கை, குருவி, குயில் இவைகளின் இனிய ஓசையை தவிர வேறு எதையும் கேட்க முடியாத வனம்.
சதுரகிரியை போல சாயலில் இயற்கையான வனத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ வேதகிரிஸ்வரர் ஆலயம்.
1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு கொண்ட ஆலயம்.
பல்லவ மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட லிங்க திருமேனி மட்டும் பழமையானது.
3 வருடங்களுக்கு முன் கோவில் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடைபெற்று புது பொலிவுடன் காணப்படுகிறது.











