திருமணம் முடித்த ஒவ்வொரு ஆணும் , பெண்ணும் கவலைப்படாதீர்கள்.
♥ கணவன் சரி இல்லையே என்ற கவலையா??? பெண்களே
கவலைப்படாதீர்கள்! உங்கள் தாயாரும் ஒரு கட்டத்தில் அப்படி கவலைப்பட்டவர்தான்..
கணவனை திருத்தும் திறமை உங்களுக்கு உண்டு என நினையுங்கள்…
♥ மனைவி சரி இல்லை என்ற கவலையா? ஆண்களே கவலைப்படாதீர்கள்! எந்த ஆணுக்கும் 100% விருப்பமான மனைவி கிடைத்ததில்லை… மனைவியை புரிந்துகொண்டு நடக்கும் மனம் வேண்டும் என நினையுங்கள்.
♥பிள்ளை சொன்ன பேச்சு கேட்காமல் இருக்கிறானே என்ற கவலையா?
கவலைப்படாதீர்கள்! உங்கள் கஸ்ட்டங்களை பிள்ளைகளிடம் மறைக்காமல் வெளியே தெரியும்படி கஸ்ட்டத்தை உணர்த்துங்கள்.
♥சொந்த வீடு இல்லையே என்ற கவலையா??? கவலைப்படாதீர்கள்! இறுதியில் நம்மோடு வரப்போவது எதுவும் இல்லை என நினைத்து வாழும்வரை மகிழ்ச்சியாக வாழுங்கள்.
♥தீராத நோய் என்ற கவலையா?
கவலைப்படாதீர்கள்! மனதில் எந்த நோயும் இல்லை என சந்தோசப்படுங்கள் சுகமடைவீர்கள்.
♥பெற்றோர்கள் சரி இல்லை என்ற கவலையா? கவலைப்படாதீர்கள்! நாளைய பெற்றோராக நீங்கள் எப்படி வாழவேண்டும் என்ற பாடமாக அதை எடுங்கள்.
♥படிச்ச படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை என்ற கவலையா? கவலைப்படாதீர்கள்!
இன்றைய உலக பணக்காரர்கள் 90% மானவர்கள் படித்த வேலை கிடைக்காது கிடைத்த வேலையை செய்தவர்களே.
♥உடன் பிறந்தோரே துரோகம் செய்கின்றனரா ? கவலைப்படாதீர்கள்!
யாரும் உங்களுடன் கூடப்பிறக்கவில்லை என நினைத்துவிடுங்கள்.
♥திருமணம் ஆகவில்லையே எனக்கவலைப்படுகிறீர்களா? உங்களுக்கான சிறந்த துணை காத்திருக்கிறது என நினையுங்கள்.. விரைவில் சிறந்த துணை அமையும்.
♥கஷ்டத்தில் இருப்பவர்களை காப்பாற்றினால் அவர்கள் முதுகில் குத்திவிட்டார்களா?
கவலைப்படாதீர்கள்! உங்களின் கஷ்டகாலம் அவர்களோடு போய்விட்டது என நினையுங்கள்.
♥ உம்மீதும்,குடும்பத்தார் மீதும் அவதூறு சொல்லி துன்புறுத்துகிறார்களா?
கவலைப்படாதீர்கள்! உலகின் பல சிறந்த மனிதர்கள் மிக கேவலமான துன்புறுத்தலை எதிர்கொண்டவர்கள் தான்.
♥மனிதர்கள் அப்படித்தான்! எல்லாம் கிடைத்தவர் இங்கு எவருமில்லை!
சோதனைக்கு அப்பாற்பட்டவர் இங்கு யாருமில்லை! ஒவ்வொரு நன்மையும் சோதனை என்ற போர்வை போர்த்தித்தான் வரும்!. எனவே மற்றவர்களுடன் ஒப்பிடாமல், நமக்கு இறைவன் அருளியதை பொருந்திக் கொண்டு வாழ்வோமாக.
♥ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு குறையுடனே படைக்கப்பட்டுள்ளான். எல்லாம் பெற்றவர் இவ்வுலகில் எவரும் இல்லை.











