• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

இரத்த அழுத்தம் ஓர் விளக்கம்

siddharbhoomi by siddharbhoomi
October 2, 2018
in மருத்துவம்
0
இரத்த அழுத்தம் ஓர் விளக்கம்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook
இரத்த அழுத்தம் ஓர் விளக்கம்

(1) சிஸ்டாலிக் அழுத்தம்

(2) டயஸ்டாலிக் அழுத்தம்

முதலில் குறிப்பிட்டிருக்கும் சிஸ்டாலிக் அழுத்தம் இதயம் சுருங்கும் போது இரத்தக் குழாய்களில் ஏற்படும் அழுத்தத்தை குறிக்கிறது.

இரண்டாவது அளவான டயஸ்டாலிக் அழுத்தம், இதயம் ரிலாக்ஸாகி பழைய நிலைமைக்கு வரும்போது இரத்தக் குழாய்களில் உள்ள அழுத்தத்தைக் குறிக்கிறது.

இரத்த அழுத்தம் 120/80 என்ற அளவினைக் கொண்டு கணக்கிடப்படுகின்றது.

120 என்பது Systolic அதாவது அதிகபட்சம் என்று அர்த்தம்.

80 என்பது Diastolic குறைந்த பட்சம் என்று பொருள்

இரத்த கொதிப்பு வர சரியான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், ஒருசில காரணத்தினால் உயர் இரத்த அழுத்தம் வரலாம் என்று கருதப்படுகின்றது.

இரத்த அழுத்தத்திற்கான காரணமாக கருதப்படுவது.

1. புகைபிடித்தல்

2. உடல் பருமன் அல்லது அதிக உடல் எடை

3. உடல் உழைப்பு குறைவு

4. அளவிற்கு அதிகமாக மது அருந்துவது

5. மன அழுத்தம்

6. முதுமை வயோதிகம் காரணமாக

7. மரபு வழி

8. நாட்பட்ட சிறுநீரக நோய்கள்

9. தைராய்டு குறைபாடு

10. சரியான தூக்கமின்மை

உயர் இரத்த அழுத்த நிலைகள்

Normal: 120/80

Prehypertension: 129-139/80-89

Stage 1: 140-159/90-99

Stage 2: 160/100

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 150/90 மேல் இருக்கும் பட்சத்தில் உயர் இரத்த அழுத்தமாக கருதப்படும்.

இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்பு

1. மாரடைப்பு

2. இருதயத்துடிப்பில் கோளாறு

3. இருதயம் பெரிதாகுதல்

4. பக்கவாதம்

5. மூளையில் இரத்த கசிவு

6. இரத்த நாளங்களில் நோய்கள்

7. சிறுநீரக செயலிழப்பு அல்லது பாதிப்பு மற்றும்

8. கண்களில் பாதிப்பு போன்றவை.

இரத்த அழுத்தம்(BP)
இரத்த அழுத்தம்
2 வகைப்படும்

1.HIGH BP,

2.LOW BP

√ 1.HIGH BP

இந்த நோய் தனி நோய் இல்லை பெரும்பாலும் ஏதாவது ஒரு நோயின் வெளிப்பாடாகத்தான் இருக்கும். அல்லது வேறு நோய்க்கு மருந்து எடுத்து அதனால் வந்த எதிர் விளைவாக இருக்கலாம். வேறு எந்த நோயும் இல்லாதவர்க்கு இந்த நோய் நிச்சயம் இருக்காது. அல்லது வேறு உடல் பிரச்சனை இருந்து அதை நிவர்த்தி செய்தால் இந்த நோயும் பூர்ண குணம் ஆகி விடும்.

√ 2.LOW BP

இது பெரும்பாலும் ஊட்டசத்து பற்றாக்குறை காரணமாகவே ஏற்படுகிறது. மேலும் பசித்தும் பட்டினி கிடப்பது, அதீத உடல் உழைப்பு, மன உளைச்சல், இரத்த சோகை போன்ற காரணங்களை நிவர்த்தி செய்தால் இந்த நோய் பூரணமாக குணம் அடையும்.

இந்த இரண்டு நோய்களும் பூரணமாக குணம் ஆக்ககூடிய நோய்கள் தான் இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

இரத்தக் கொதிப்பிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் முறைகள் என்னென்ன?

மருந்து உட்கொள்வது மட்டுமின்றி நமது வாழ்க்கை முறையில் சில நல்ல மாற்றங்களை செய்து கொள்வதினாலும் நாம் இரத்தக் கொதிப்பிலிருந்து விடுபடலாம்.

1) உணவில் உப்பு சேர்ப்பதைக் குறைத்துக் கொள்ளல்:

உப்பு அதிகமாக இருக்கும் பண்டங்களான ஊறுகாய், அப்பளம், கருவாடு, மற்றும் அதிக உப்பு சேர்க்கப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கப்படும் முந்தரி, சிப்ஸ், பாப்கார்ன் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.

2) பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் உணவில்

அதிக அளவில் சேர்த்துக் கொள்வது இரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும்.

3) மனதை ரிலாக்ஸ் செய்யும் முறைகள்:

யோகா மற்றும் தியானம்(Meditation) ஆகியவற்றை எந்த பரபரப்பும் இன்றி தவறாமல் செய்தால் இரத்தக் கொதிப்பு பெருமளவு குறையும்.

4) உடற்பயிற்சி:

தினமும் தவறாமல் மிதமான உடற்பயிற்சி செய்வது அவசியம். தினமும் 30 நிமிடங்கள் வாக்கிங் போவதோ, 20 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவதோ அல்லது நீச்சல் அடிப்பதோ சரியான உடற்பயிற்சி முறைகள். இவை உடற்பருமனையும் குறைப்பதால் இரத்த அழுத்தம் குறையும்.

5) புகை பிடித்தல், அளவுக்கதிகமாக மது அருந்துதல் முதலிய பழக்கங்களை அறவே நீக்குவதால்

இரத்தக் கொதிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

6) தவறாமல் குடும்ப டாக்டரிடம் சென்று இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ளுதல்:

நம் நாட்டில் சமீபகாலமாக 30 வயதுக்குக் குறைவான இளைஞர்களுக்குக் கூட இரத்தக் கொதிப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே 20 லிருந்து 40 வயது வரை உள்ளவர்கள் வருடத்துக்குக் இரண்டு முறையாவது பா¢சோதனை செய்து கொள்வது அவசியம்.

40 வயதைக் கடந்தவர்கள் மூன்று மாதத்துக்கு ஒருமுறை இரத்த அழுத்தத்தை சோதித்துக் கொள்வது அவசியம். குறிப்பாக, குடும்பரிதியாக உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக தங்களை மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்வது மிக மிக அவசியம்.

உயர் இரத்த அழுத்தம் (இரத்த கொதிப்பு) என்பது சமீபகாலமாக மக்களில் அநேகம் பேரை பாதிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. பலருக்கு எந்த விளைவுகளும் ஏற்படுத்தாமல், எந்த அறிகுறியும் காட்டாமல், ஆபத்தான கட்டத்தை நோக்கி உள்ளே அது பூதாகாரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆரோக்கியமான மனிதராகவே நாம் நடமாடிக் கொண்டிருக்க ஒரு நிலையில் திடீரென்று இரத்தக் கொதிப்பு தன் கோர முகத்தைக் காட்டும் போது, நாம் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறோம். இதன் வெளிப்படையான அறிகுறிகளை கண்டுபிடிப்பது கடினம் என்பதாலும், மெதுவாக எல்லா முக்கிய உறுப்பு மண்டலங்களையும் பாதிப்பதாலும் இதனை ஒரு அமைதிக் கொலையாளி
(Silent Killer) என்று அழைத்தால் அது மிகையாகாது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்பாடுடன் வைத்துக்கொள்ள சில வகை உணவுகள்

வாழைப்பழம்:

இரத்த அழுத்தம் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமெனில், தினமும் ஒரு வாழைப்பழத்தை உட்கொள்ள வேண்டும்.

ஏனெனில் வாழைப்பழத்தில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், அவை சிறுநீரகத்தில் இரத்தத்தை சுத்திகரிக்கும் போது, இரத்தத்தில் உள்ள சோடியத்தை வடிகட்டிவிடும் மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக செல்ல உதவும்.

தர்பூசணி:

கோடையில் கிடைக்கும் தர்பூசணி புத்துணர்ச்சி கொடுப்பது மட்டுமின்றி, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். ஏனெனில் தர்பூசணியில் நார்ச்சத்து, லைகோபைன்
(Lycopene), வைட்டமின் ஏ மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்துமே இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

ஆரஞ்சு:

ஆரஞ்சு பழத்திற்கு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது. எனவே தினமும் ஒரு ஆரஞ்சு பழத்தையோ அல்லது ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸோ குடித்து வந்தால், இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் வைட்டமின் சி உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

பசலைக்கீரை:

பசலைக்கீரையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் அதிகமாகவும் உள்ளது. இவை அனைத்துமே இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், சீராக பராமரிக்கவும் உதவும்.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு:

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பொட்டாசியம் வளமாக நிறைந்துள்ளது. ஆகவே சர்க்கரைவள்ளிக் கிழங்கை அவ்வப்போது உட்கொண்டு வந்தால், அவை இரத்தத்தில் உள்ள சோடியத்தின் அளவைக் குறைத்து, இரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்கும்.

திராட்சை ஜூஸ்:

தினமும் 2 டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள பாலிஃபீனால்ஸ்(Polyphenols) இரத்த நாளங்களை தளரச் செய்து, இரத்த ஓட்டத்தை சீராக வைக்கும். மேலும் இதில் கலோரிகள் இல்லாததால், இதயமும் ஆரோக்கியமாக செயல்படும்.

கேரட்:

ஆண்கள் கண்டிப்பாக தினம் ஒரு கேரட்டை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும், இவை கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும். கேரட்டில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

பூண்டு:

பூண்டு இரத்த அழுத்தம் லேசாக இருக்கக்கூடிய நோயாளிகளுக்கு பூண்டு நல்ல மருந்து. அதிலும் பூண்டிலுள்ள அல்லிசின், உடலில் நைட்ரிக் ஆக்ஸைடு கூடுவதற்கு உதவி செய்கிறது. அதன் விளைவாக இரத்த குழாய்களின் தசைகளை ஓய்வெடுக்க வைப்பதால், இதய விரிவாக்கம் மற்றும் இதயச் சுருக்க இரத்த அழுத்தமும் குறைந்து கட்டுப்பாட்டில் இருக்கும்.

நோனி:

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இருதய நோயைக் குணப்படுத்த பயன்படுகிறது. இதில் உள்ள ஸ்கோபோலேடீன் இரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது. எனவே இரத்த அழுத்தம் குறைகிறது என்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இவை உடலில் நைட்ரிக் ஆக்ஸைடை உற்பத்தி செய்கிறது. இதனால் இரத்தக் குழாய்கள் எளிதாக விரிவடைகின்றன.
நோனி இருதய செல்களுக்கு அதிக மக்னீசியத்தை அளித்து அதன் செயலை ஒழுங்குபடுத்துகிறது. மார்புச்சளி நோயைக் குணப்படுத்த உதவுகிறது.

கருப்பு ஏலக்காய்:

உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு கருப்பு ஏலக்காய் மிகச்சிறப்பான பொருள். அதுவும் ஒரு டம்ளர் சுடுநீரில் கருப்பு ஏலக்காய் பொடி சேர்த்து கலந்து தினமும் குடித்து வருவதன் மூலம், உயர் இரத்த அழுத்த பிரச்சனையில் இருந்து எளிதில் விடுபட முடியும்.

மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுயமாக கடைகளில் மருந்து வாங்கிச் சாப்பிடாதீர்கள்.

நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.

நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்-

சித்தர் பூமி தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..!

உங்கள் நண்பர்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!

+91-7305018180

Previous Post

திண்டுக்கல் ஸ்ரீமத் ஓத சுவாமிகள்-113 வது மகா குருபூஜை!

Next Post

அருகம்புல்லும் பிள்ளையாரும்!

Next Post
அருகம்புல்லும் பிள்ளையாரும்!

அருகம்புல்லும் பிள்ளையாரும்!

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

மாசி சுக்ல பக்ஷ சஷ்டி விரதம் & வழிபாடு

மாசி சுக்ல பக்ஷ சஷ்டி விரதம் & வழிபாடு

March 5, 2026
ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

March 4, 2026
சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »