இறைவன் ஈசன் தன்னை வழிபடுபவர்கள் மற்றும் வழிபடாதவர்கள் என இரண்டாக பிரிக்கிறார்.
மேலும், செம்மையான மனம் இல்லாதவர்கள் இறைவனை வழிபட மாட்டார்கள் என்று இடித்துரைக்கிறார்.
இறைவனை வழிபடும் பக்தர்களை நான்காக பிரிக்கிறார்.
1. தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு மட்டும் இறைவன் ஈசனை வழிபடும் பக்தர்கள்.
2.தேவைக்கான பணம்,பதவி கிடைக்க , உத்யோகம் அமைய, நினைத்த காரியங்கள் நினைத்த படியே நிறைவேற ஆபத்திலிருந்தும், நோய்களிலிருந்தும் மற்றும் துயரங்களிலிருந்தும் தங்களை காத்துக் கொள்வதற்கு மட்டும் பகவானை வழிபடும் பக்தர்கள்.
3. இறைவன் ஈசனை அடைய வேண்டும் எனும் நோக்கில் பகவானை வழிபடும் பக்தர்கள்.
4. இறைவன் ஈசனை அறிந்து கொள்ள சாதனை செய்யும் ஞானி பக்தன்.
இந்த ஞானி பக்தனே அனைத்து பக்த்ர்களில் உயர்வானவன் என்று பகவான் ஞானியை புகழ்கிறார்.
பக்தியின் மேன்மை பகவானின் மாயையை யாராலும் வெல்ல முடியாது.
இறைவன் ஈசனை சரணாகதி அடைந்து பக்தி செலுத்துபவன் மாயையை (அறியாமையை) கடக்க இறைவன் ஈசன் அருள் புரிகிறார்.
எவரேவர் எந்த நோக்கத்துடன் இறைவன் ஈசனிடம் பக்தி செலுத்துகிறார்களோ அவரவர்களின் கோரிக்கையை நிறைவேற்றுகிறார்.
இறைவன் ஈசனுக்கு எந்த பக்தனிடத்திலும் விருப்பு – வெறுப்பு இல்லை.
மேலும் இறைவன் ஈசனை அறிவது எளிதல்ல, இறைவன் அனைத்தையும் அறிபவன்.
ஆனால் சீலர்கள் இறைவன் ஈசனை அறிய இயலாது.
பிறந்தவுடன் இருமை எனும் விருப்பு – வெறுப்புகளுடன் உள்ளான்.
இது சீல இயற்கை குணமாகும். பிறகு எவர்கள் இந்த விருப்பு – வெறுப்பு எனும் இருமையிலிருந்து விடுபட்டு,
அத்யாத்மம், அதிதெய்வம், அதியக்ஞம்,
அதிபூதம் எனும் தத்துவங்களை அறிந்தவர்கள்
என்னிடம் பக்தி செலுத்தி மோட்சம் எனும் (வீடுபேறு) அடைகிறார்கள்.










