• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

இறைவா, நீர் அளித்துள்ள அனைத்திற்கும் நன்றி

siddharbhoomi by siddharbhoomi
January 17, 2019
in கதைகள்
0
இறைவா, நீர் அளித்துள்ள அனைத்திற்கும் நன்றி
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

இறைவா, நீர் அளித்துள்ள அனைத்திற்கும் நன்றி – நன்றியுணர்வின் சக்தி

அன்பார்ந்த நண்பர்களே,

வெகு நாட்கள் முன்பு நான் பாலை நிலத்தில் பரிதவித்து வாழ்ந்த ஒரு பறவையின் கதையைக் கேட்டேன். அப்பறவை பாலைவனத்தின் வெப்பத்தால் தன் உடலிறகுகள் அனைத்தையும் இழந்து உண்ணவும், பருகவும் எதுவுமின்றி தவித்துக் கொண்டிருந்தது.

தங்குவதற்கு ஒரு கூடு கூட இன்றி தன் வாழ்வை சபித்த வண்ணம் அல்லும் பகலும் வாழ்ந்து வந்தது.

ஒரு நாள் ஒரு வான தூதர் அப்பாலை நிலத்தை கடந்து செல்வதைக் கண்ட அப்பறவை அவரிடம், “எங்கு செல்கிறீர்கள்” என்று கேட்டது. “இறைவனைச் சந்திக்க செல்கின்றேன்” என்று அவரும் பதில் கூறினர். உடனே அப்பறவை,

“என்று என் துன்பங்கள் முடிவுறும் என்று இறைவனைக் கேட்டு சொல்லுங்கள்” என்று பறவை வான தூதரைக் கேட்டது. “கண்டிப்பாக கேட்டுச் சொல்கிறேன்” என்று வான தூதர் கூறிச் சென்றார்.

இறைவனை அடைத்த அத்தூதர் இறைவனிடம் அப்பறவையின் பரிதாப நிலையை விளக்கிக் கூறி எப்பொழுது அதன் துன்பம் முடிவுறும் என்று கேட்டார். “இன்னும் ஏழு பிறவிகள் அப்பறவை அது அனுபவிக்கும் துன்பத்தை அனுபவித்தாக வேண்டும்.

அதுவரை அப்பறவைக்கு எவ்வித இன்பமும் இல்லை” என்று இறைவன் பதில் கூறினார். இதைக்கேட்டால் ஏற்கெனவே சோர்வுற்றிருக்கும் அப்பறவை மேலும் மனமொடிந்து போய் விடுமே என்றெண்ணிய வான தூதர், “இதற்கொரு நல்ல தீர்வைக் கூறுங்கள் ஐயா” என்று இறைவனைப் பணிந்து வேண்டினார்.

இறைவன் மனமிரங்கி ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப கூறினால் நம்மை விளையும் என்று சொல்லி மந்திரத்தையும் கற்பித்தார். இறைவா, நீர் அளித்துள்ள அனைத்திற்கும் நன்றி என்பதுவே அந்த மாமந்திரம்.

இறைவன் கற்பித்த மந்திரத்தை வானதூதரும் அப்பறவைக்கு கூறிச் சென்று விட்டார். ஏழு நாட்களுக்குப் பின் அந்த வான தூதர் அப்பாலை நிலத்தைக் கடந்து சென்ற போது அந்த பறவை மிகுத்த ஆனந்ததுடன் இருப்பதைக் கண்டார். அதன் உடலிறகுகள் முளைத்திருந்தன.

அப்பாலை நிலத்தில் ஒரு சிறு செடி முளைத்திருந்தது. ஒரு சிறிய நீர்நிலையும் அங்கு இருந்தது. ஆனந்ததுடன் அங்குமிங்கும் மகிழ்வுடன் அப்பறவை அலைந்து திரிந்து கொண்டிருந்தது.

வான தூதருக்கோ மகா ஆச்சர்யம். ஏழு பிறவிகளுக்கு இன்பமே இல்லையென இறைவன் கூறினாரே!! இன்றெப்படி இது சாத்தியமென எண்ணி அதே கேள்வியுடன் இறைவனைப் பார்க்கச் சென்றார்.

இறைவனிடம் கேள்வியைக் கேட்ட போது அவர் கூறிய பதில் இதுவே: “ஆம். ஏழு பிறவிகளுக்கு அப்பறவைக்கு எவ்வித மகிழ்வும் இல்லையென்ற விதி இருந்தது உண்மைதான். ஆனால்இறைவா, நீர் அளித்த அனைத்திற்கும் நன்றி என்ற மந்திரத்தை அப்பறவை எல்லா சூழலிலும் மாறி மாறி  இறைவனைப் பணிந்து வேண்டியது. நிலைமை மாறியது. பாலையின் சுடுமணலில் விழுந்த போது நன்றி சொன்னது. வெப்பத்தில் வருந்தி பறக்க முடியாது தவித்த போதும் நன்றி சொன்னது.

சூழல் எதுவாயினும் நன்றி சொன்னது. எனவே ஏழு பிறவியின் ஊழ்வினைப் பயன் ஏழு நாட்களில் கரைந்து மறைந்தது” என்று இறைவன் பதில் கூறினார்.

இக்கதையைக் கேட்ட போது என் உடலில் என்னையறியாது ஒரு சக்தி பரவியது.

என் சிந்தனையிலும், உணர்விலும், வாழ்வை நோக்கும் கோணத்திலும், வாழ்வை ஏற்றுக்கொள்வதிலும் ஒரு மாபெரும் மாற்றம் விளைந்தது.

நானும் அந்த மாமந்திரத்தை என் வாழ்வில் உபயோகிக்க ஆரம்பிதேன். நான் சந்திக்கும் எல்லா சூழல்களிலும்

இறைவா, நீர் அளித்துள்ள அனைத்திற்கும் நன்றி

என்று உளமார கூற ஆரம்பித்தேன்.

அதுவரை நான் பார்த்திராத கோணத்தில் பார்க்க அந்த மந்திரம் உதவியது.

உதாரணமாக என் தலை வலித்தது எனில் என் உடலின் வேறு பாகங்கள் அனைத்தும் வலியின்றி ஆரோக்கியமாக இருந்தமைக்கு நன்றி சொன்னேன்.

அப்பொழுது என் தலைவலியின் துன்பம் குறைந்து காணப்பட்டது. என் உறவுகள், பொருளாதாரம், அன்பு வாழ்வு, சமுதாய வாழ்வு, வியாபாரம், நண்பர்கள், வேலையாட்கள், உடன் பணியாற்றுவோர் …. என் சூழ்நிலைகள் அனைத்திலும்..
நன்றி, நன்றி, என்று எல்லா நேரங்களிலும் உளமார கூறினேன்.

இந்த கதையை என் மனைவி மற்றும் குழந்தைகளிடம் பகிர்ந்து கொண்டேன். அவர்களது வாழ்விலும் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்தது.

இந்த எளிமையான மாமந்திரம் என் வாழ்வில் மாபெரும் மாற்றங்களை விளைவித்தது. நான் நன்மையை உணர ஆரம்பித்தேன். நான் எவ்வளவு மகிழ்ச்சியாகவும், என் வாழ்வு எவ்வளவு நன்மையாகவும் இருக்க முடியும் என்பது தெளிவாக தெரிந்தது.

நன்றியுணர்வு எவ்வளவு சக்தி மிக்கது என்பதையும், அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் இச்செய்தியை பகிர்வதன் நோக்கம் ஆகும். நம் வாழ்வை நன்றியுணர்வு திருத்தி அமைக்க முடியும்.

நன்றியுணர்வை ஊட்டும் ஒரு எளிய வார்த்தை, ஒரு எளிய சிந்தனை நமது ஊழ்வினையின் பாரத்தை கரைத்து மறையச் செய்யும் சக்தியுடையதாக இருகின்றது.

இந்த மந்திரத்தை அறியாமல்தான் பிறவி மேல் பிறவியாக கர்ம வினையைச் சுமந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இந்த மாமந்திரத்தை தொடர்ந்து மனதினுள் உச்சரித்து வருவோமெனில் வாழ்வில் மாற்றங்களை உருவாக்கி உணர்வோம்.

கீழ்கண்ட அழகான வரிகளைக் கூறி இச்செய்தியை நிறைவு செய்கின்றேன்.

இறைவா, நீர் அளித்துள்ள அனைத்திற்கும் நன்றி – நன்றியுணர்வின் சக்தி

Previous Post

அமைதி

Next Post

ஆத்மா மட்டுமே ஆண்டவனை அடைந்தது

Next Post
ஆத்மா மட்டுமே ஆண்டவனை அடைந்தது

ஆத்மா மட்டுமே ஆண்டவனை அடைந்தது

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »