உணர்ந்து கொள்ளலாம்
ஈடு இணையில்லாது விளங்கும் ஒன்றான கண்ணுக்குள் நின்றிருக்கும்
சோதி ஒளியை கண்ணாரப் பார்த்து அதிலேயே ஒன்றாய்
கலந்து நிற்பதே தியானம்,
இவ்வாறு சோதி ஒளியில் கலந்து அங்கேயே நின்று தியானத்தில் இருந்திட்டால் அவ்வெளிதனில் அமுததாரை பொங்கி பெருகும்,
காணும் அப்பொருளோடே கூடிநின்ற சோதி ஒளியில் கூடி
ஒன்றியிருந்து தியானம் செய்தால் எவராலும் எதனாலும்
செய்யப்படாத சுயம்பாக நின்ற பரம்பொருளை சுயமாகப் பார்த்து
உணர்ந்து கொள்ளலாம்..!
ஓம் நமசிவய – ஓம் சரஹணபவ.











