எது நரகம்? சொர்க்கம்
சொர்க்கலோகம் எங்கே உள்ளது என்று யாரைக்கேட்டலும் சொர்க்கலோகம் மேலே உள்ளது என்று எளிதில் கூறிவிடுவார்கள். அனைவருக்கும் சொர்க்கம் என்பது ஒரு நாள் நிச்சயம் ஆனால் எப்பிறவியில் என்பதுதான் அவரவர் வாழும் வாழ்க்கையைப் பொருத்தே நிகழும்.
சொர்க்கலோகம் என்றால் அன்பு கருணை தயவு மன்னித்தல் என ஒரே வகையான தெய்வீக குணாதிசயங்களை கொண்டவர்கள் ஒன்றாக இருக்கும் இடமாகும்.
அதாவது தேவர்கள் இருக்கும் இடமாகும் இதுவே சொர்க்கலோகம் தேவலோகம் ஆகும்.
இந்த லோகத்தில் நாம் அனைவருக்கும் ஒரு இடம் கண்டிப்பாக உண்டு. அதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் இறைக் குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் இந்த பூலோகத்தின் மீதுள்ள பற்று முற்றிலுமாக அறுபட வேண்டும். முதல் படியிலுள்ள காலை எடுத்தால்தான் இரண்டாவது படிக்கட்டுக்கு நாம் செல்ல முடியும். முதல் படியில் ஒரு காலும் இரண்டாம் படியில் காலும் வைத்துக்கொண்டும் வாழ இயலாது.
இங்கே முதற்படி என்று நான் குறிப்பிடுவது நாம் வாழும் இந்த பூலோக வாழ்க்கையாகும்.
இரண்டாம் படி என்று நான் குறிப்பிடுவது சொர்க்கலோகமாகும். சொர்க்கலோகம் சென்றவர்களுக்கு மீண்டும் இப்பூமியில் பிறப்பு நிகழாது. அவர்கள் ஜீவ விடுதலை பெற்று இறைவனோடு கலந்து விடுகிறார்கள்.
நரகம்:
நரகம் எங்கே உள்ளது என்று யாரைக் கேட்டாலும் அதுவும் மேலே உள்ளது ஆனால், அங்கே அரக்கர்கள் நம்மை எண்ணெய் சட்டியில் போட்டு வறுத்தெடுப்பார்கள் என்று ஒரு கதையைக் கூறுவார்கள்.
உண்மையிலே நரகம் எது? அது எங்கே உள்ளது? என்று பார்ப்போம்
பலதரப்பட்ட குணாதிசயங்களை கொண்ட மக்கள் வாழும் இடமே நரகமாகும்.
அதாவது நாம் வாழும் இந்த பூமியே நரகமாகும் (இந்த பூமி நரகம் கிடையாது. ஆனால், பலதரப்பட்ட குணங்களைக் கொண்ட மனிதர்கள் இந்த பூமியில் வாழ்வதால் இது நரகமாகிறது) ஏனெனில்
இந்த பூமியில் தான் இன்பம் துன்பம் ஏற்றம் இறக்கம் போட்டி பொறாமை பசி பட்டினி மகிழ்ச்சி கவலை பொய் பித்தலாட்டம் கொலை கொள்ளை என அனைத்து பிரச்சனைகளையும் உள்ளடக்கிய இடமாகும்.
இந்த பூமி பந்தானது ஒரு புனித குளமாகும். இறைவன் மனிதனுக்கு பிறவிகளைக் கொடுத்து புனிதனாக்கி அவனோடு ஐக்கியப்படுத்திக்கொள்ள நினைக்கிறான். ஆனால் மனிதன்தான்
இறைவன் கொடுத்த இந்த அரிய மானிடப் பிறப்பை முறையாக பயன்படுத்த தவறி. மீண்டும் இந்த பூமியிலேயே பிறந்து இன்ப துன்பங்களை அனுபவிக்கிறான்.
சொர்க்கம் நரகம் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால். சொர்க்கம் இன்பமயமானது. நரகம் இன்பம் துன்பம் இரண்டும் கலந்தது. நன்றி









