ஒரு ஜென் துறவியிடம் ஒருவன் வந்து “நான் மிகவும் துன்பத்தில் இருக்கிறேன். இதிலிருந்து விடுதலை பெற்று புத்தராக மாற ஆசைப்படுகிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான்.
தன் சீடர்கள் உதவியுடன் அவனை மடத்தை விட்டு வெளியேற்றினார். அவனை ஓட ஓட விரட்டியடித்தார்கள்.
பக்கத்திலிருந்த ஒருவர் ஜென் துறவியை கேட்டார்.
இது ரொம்ப அதிகம். நியாயமான கேள்வியைத் தானே கேட்டான். சாதாரண மதத் தன்மையுள்ள கேள்வி தானே இது. ஆர்வமாக கேட்டிருக்கிறான்.
நீங்கள் நடந்து கொண்டது நியாயமே இல்லை” என்று வாதிட்டார்.
அதற்கு ஜென் துறவி ” அவன் கேட்டது மிகவும் முட்டாள்தனமானது. அதற்காகவே அவனை விரட்டியடித்தேன். ஏனெனில் அவன் புத்தராகத்தான் இருக்கிறான். அதற்காக அவன் ஏதும் முயற்சி செய்தால், அதை அவன் இழந்து விடுவான்.
நாங்கள் எதற்காக அவனை விரட்டினோம் என்பதை அவன் புரிந்து கொண்டால் அவன் சகல முயற்சிகளையும் விட்டு விடுவான். முயற்சி செய்து அடைவதற்கு அது ஒன்றும் உலகப் பொருள் அல்ல அவன் எப்படி இருக்கிறானோ அப்படி இருந்தால் போதும் அவ்வளவுதான் ” என்றார்.
பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் உள்ளர்த்தம் அற்புதமானது.
அறிவே தெய்வமாக நம்முள்ளே உணராமல் வெளியில் அலைந்து என்ன பயன்?
அகம் பிரம்மாஸ்மி என்ற தத்துவமே இதன் உள்ளடக்கம்….
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்-
சித்தர் பூமி தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..!
உங்கள் நண்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!
+91-7305018180











