ஐப்பசி மாத ராசி பலன்கள்-2019(18-10-2019 to 16-11-2019)
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல விசயங்கள் நடைபெறும். இந்த மாதம் திடீர் திருப்பங்களும் எதிர்பாராத நன்மைகளும் ஏற்படும். திறமைகள் பளிச்சிடும். வரவும் செலவும் சமமாக இருக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். உறவினர்கள் நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
கடினமான உழைப்பு தேவைப்படும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு கை நிறைய சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு அதிக சம்பளத்துடன் இடமாற்றம் கிடைக்கும். மாத பிற்பகுதியில் உடல் ஆரோக்கியம் பாதிக்கும். வயிறு உபாதைகள் ஏற்படும். காரணமான உணவுகளை தவிர்க்கலாம். கந்த சஷ்டி விரதம் இருந்து திருச்செந்தூர் சென்று முருகனை வணங்க நன்மைகள் நடக்க
ரிஷபம்
ஐப்பசி மாதம் உங்களுக்கு பணம் பலவழிகளில் வரும். உங்களின் தேவைகள் பூர்த்தியடையும். குருவின் பார்வையால் சந்தோஷம் அதிகரிக்கும் வேலைகளை சிறப்பாக செய்வீர்கள். சில நேரங்களில் பாராட்டுக்கள் கிடைக்கும். பெண்களுக்கு ஆரோக்கியம் அதிகமாகும் உற்சாகமடைவீர்கள். ஐப்பசி 12ஆம் தேதிக்கு மேல் சுக்கிரன் உங்க ராசியை பார்க்கிறார். பொன் நகைகள் வாங்கலாம்.
கணவன் மனைவி இடையே நீடித்த புகைச்சல் தீரும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் தேவை. சிறு தடங்கல்கள் வரலாம். காதல் வயப்படும் காதல் இது. ஜாக்கிரதையாக இருங்க. சில தொடர் தொந்தரவுகள் ஏற்படும் என்பதால் உங்களுடைய கவனம் படிப்பில் மட்டுமே இருப்பது அவசியம். வெள்ளிக்கிழமைகளில் தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள் கந்த சஷ்டி விரதம் இருங்கள்.
மிதுனம்
ஐப்பசி மாதத்தில் பிரச்சினைகள் தீரும் காலம் இதுவாகும். மாமனார் வகையில் நல்ல உதவி கிடைக்கும். பேச்சில் கவனம் தேவை. மாத இறுதியில் செவ்வாய் பெயர்ச்சியாகி ஐந்தாம் வீட்டிற்கு வரும் போது நல்லது செய்வார். அரசு உத்யோகத்தை எதிர்பார்க்க வேண்டாம். புதிய முயற்சிகள் பலிக்காது எனவே இருக்கிற வேலையை விட்டுட்டு புதிதாக முயற்சி எதுவும் செய்ய வேண்டாம்.
மாணவர்கள் சிறப்பாக படிப்பீர்கள். உயர்கல்வியில் பிரச்சினை இருக்காது. நன்றாக கவனம் செலுத்தவும். இந்த மாதம் வேலைக்கு முயற்சி எதுவும் செய்ய வேண்டாம். காரணம் சூரியன் நீசமாக இருக்கிறார். குரு பெயர்ச்சிக்குப் பின்னர் பாதிப்புகள் தீரும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிணக்குகள் தீரும். கணவன் மனைவி உறவில் அன்பும் பாசமும் அதிகரிக்கும். எதிலும் அகலக்கால் எதிலும் வைக்க வேண்டாம். இந்த மாதம் லட்சுமி நரசிம்மரை வணங்க நன்மைகள் நடைபெறும்.
கடகம்
உங்களுக்கு லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். திருமண தடைகள் நீங்கும். திருமணத்திற்கும் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல விசயங்கள் தேடி வரும். இதுநாள் வரை தடைகள் ஏற்பட்டிருந்தாலும் நீங்கும். வெளிநாடு செல்லக்கூடிய யோகம் தேடி வருது. ராசிக்கு 2க்கு உடைய சூரியன் நான்காம் வீட்டில் இருந்து உங்க ராசிக்கு பத்தாம் வீட்டினை பார்க்கிறார்.
சூரியன் நீசமாக இருந்தாலும் சில நன்மைகள் நடைபெறும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியிருந்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். காவல்துறை, ராணுவ துறையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். பணவரவு இந்த மாதம் சரளமாக இருக்கும். அதே நேரம் செலவுகளும் கூடுதலாகவே இருக்கும். வீட்டில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி அமைதி ஏற்படும். மேலும் நற்பலன்கள் நடக்க லட்சுமி நரசிம்மரை ஞாயிறு கிழமை பிரதோஷ நேரத்தில் வணங்கவும்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு ஐப்பசி மாதம் அற்புதமான மாதமாக அமையப்போகிறது. கஷ்டங்கள் முடிவுக்கு வரும் காலம். இந்த மாதம் திருமண யோகங்கள் கைகூடி வரப்போகிறது. குழந்தை பாக்கியம் கிடைக்கப் போகிறது. குருவின் பார்வை சேர்க்கையும் உங்களுக்கு சாதகமாக இருக்கப் போகிறது.
பாதிப்புகளும் கஷ்டங்களும் குறையும். கணவன் மனைவி இடையே ரொமான்ஸ் உணர்வுகள் அதிகரிக்கும். இந்த மாதம் வேலைக்காக புதிதாக எந்த முயற்சியும் செய்ய வேண்டாம். காரமான உணவுகளை சாப்பிட வேண்டாம். கால நேரத்தோடு சாப்பிடுங்க இல்லாவிட்டால் அல்சர் வந்து விடும். கோபமாக பேசாதீங்க. வம்பு வழக்கில சிக்க வைத்து விடும். புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு போங்க நல்லதே நடக்கும்.
கன்னி
இந்த மாதம் வெற்றியை தேடித் தரும் மாதம் . குரு பெயர்ச்சியால் இந்த மாதம் உங்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். நான்காம் வீட்டிற்கு போய் சனி கேது உடன் அமரப்போவதால் நன்மைகள் அதிகம் நடக்கும். திருமணம் பேச்சுவார்த்தைகள் கை கூடி வரும். திருமணம் முடிந்து பிள்ளை பாக்கியத்திற்காக காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். படிப்பில் அமோகமாக இருக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் தேவை.
இந்த மாதம் படித்து முடித்தவர்களுக்கு அப்ரண்டிஸ் கிடைக்கும். பயிற்சி முடித்து காத்துக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். இந்த மாதம் இருக்கிற வேலையை விட்டு விட்டு புதிய வேலைக்கு முயற்சி செய்ய வேண்டாம். ஏனெனில் இருக்கிற வேலையிலேயே புரமோசன் கிடைக்கும். புதிய தொழில் எதுவும் இந்த மாதம் ஆரம்பிக்க வேண்டாம். மனதில் தைரியத்தோட இருங்க உடல் நல பிரச்சினைகள் தானாவே சரியாகும். ஸ்ரீரங்கம் காவிரியில் போய் புனித நீராடுங்கள். கந்த சஷ்டி விரதம் இருந்து முருகப்பெருமான் கோவிலுக்கு போய் கந்த சஷ்டி கவசம் படிங்க நல்லது நடக்கும்.
துலாம்
ராசியில் சூரியன் இருப்பதால் பேச்சில் கவனம் தேவை. மாத இறுதியில் செவ்வாயும் ராசிக்கு வருகிறார். ஏழாம் வீட்டை கிரகங்கள் பார்ப்பதால் கணவன் மனைவி பிரச்சினை ஏற்படும் பேச்சில் கவனமாக இருங்க. விட்டுக்கொடுத்து போங்க. கணவன் மனைவி பஞ்சாயத்துக்கு யாரையும் கூப்பிடாதீங்க சிக்கலை அதிகப்படுத்தி பிரிச்சி விட்டுருவாங்க.
உஷ்ணம் தொடர்பான நோய்கள் எட்டிப்பார்க்கும் என்றாலும் வேகம் குறைந்தே காணப்படும். தொழில் ஆரம்பிக்கிறேன்னு அகலக்கால் வைக்காதீங்க. ஆடம்பர பொருட்களை வாங்கதீங்க. அவசியமான பொருள் மட்டும் வாங்குங்க. இந்த மாதம் அதிகமாக கடன் வாங்கதீங்க கவலையில தள்ளி விட்டுரும். ஆதித்ய ஹிருதயம் படிங்க.
விருச்சிகம்
உங்க பிரச்சினைக்கும் கஷ்டங்களுக்கும் விடிவுகாலம் வரப்போகிறது. கஷ்டங்கள் குறையும். ஏழரை சனி கஷ்டத்தை கொடுத்து வந்தது. இனி கஷ்டங்கள் நீங்கும் காலம் வந்துவிட்டது. புதிய வருமானம் வரும் கடன்கள் அடைபடும். சொந்த வீடு வாங்கும் யோகம் வந்து விட்டது. இரண்டு ஐந்துக்கு உடைய குரு உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டிற்கு போவதால் பிரச்சினைகள் நீங்கும்.
கணவன் மனைவி பிரச்சினை நீடிக்கிறது. காரணம் இரண்டாம் வீட்டில் சனி கேது இருக்கிறது. குரு இடப்பெயர்ச்சியாகி சனியோடு இணைவதால் உரசல்கள் நீங்கும். சந்திராஷ்டம நாட்களில் எச்சரிக்கையாக இருங்க. நல்லதே நடக்கும் தீபாவளிக்கு பின்னர் கந்த சஷ்டி விரதம் இருந்து சஷ்டி கவசம் படிங்க பாதிப்புகள் குறைந்து நல்லது நடக்கும்.
தனுசு
பணவரவு அதிகமாக இருக்கும் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன் வாங்கி கடனை அடைக்காதீங்க. தனுசு ராசிக்கு குரு வரும் காலத்தில் நல்லது நடக்கும், ஆடம்பரம் வேண்டாம். கணவன் மனைவி குடும்ப பிரச்சினையில் கவனமாக இருங்க. கணவன் மனைவி கொஞ்சம் விட்டுக்கொடுத்து போங்க ராசியில் உள்ள சனி கேதுவை ராகு பார்க்கிறார்.
வாக்குவாதங்கள் வேண்டாம். குரு பெயர்ச்சியாகி ராசிக்கு வரும் நேரத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் தீரும். சந்திராஷ்டமம் காலத்தில் கவனமாக இருங்க. வேலையில் இடம்மாறுதல் வரும். சுப விரைய செலவுகள் ஏற்படும். குடும்ப கஷ்டங்கள் காணாமல் போகும். மாணவர்களுக்கு நல்லதே நடக்கும். சனி பிரதோஷத்தில் சிவன் கோவிலுக்கு போங்க நல்லது நடக்கும்.
மகரம்
பத்தாம் வீட்டில் கிரகங்களின் சஞ்சாரத்தால் வேலைப்பளு கூடும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருங்க. வீண் வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். செலவு கட்டுக்கடங்காமல் போகிறதே என்ற கவலை வேண்டாம். உங்க சொத்துக்களை கவனமாக பார்த்துக்கங்க. கணவன் மனைவி உறவில் பிரச்சினையில்லை சந்தோஷமாக உற்சாகமாக பொழுதை கழிப்பீர்கள். கடன்களை அடைக்கும் காலம் வருது.
குழந்தைகளின் நலனின் அக்கறை தேவை. வீண் ஆடம்பரம் வேண்டாம். தேவையான செலவுகளை கட்டுப்படுத்துங்கள். யாருக்கும் பணம் கடன் வாங்கி கொடுக்காதீங்க. வண்டி வாகனங்களில் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டாம். அரசு வேலையில் இருப்பவர்கள் உங்க வேலையை கவனமாக பாருங்க. வாழ்க்கை துணையை தேர்வு செய்வதில் கவனமாக இருங்க. இந்த மாதம் மருத்துவ செலவுகள் நிறைய வரும் கவனமாக இருங்க. ஜாமீன் கையெழுத்து யாருக்கும் போட வேண்டாம்.
கணவன் மனைவி வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். கண் பிரச்சினை, உளவியல் ரீதியான பிரச்சினைகள் எட்டிப்பார்க்கும். செவ்வாய் கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வணங்க நல்லது நடக்கும்.
கும்பம்
ஐஸ்வர்யம் பெருகும் லாப ஸ்தானத்தில் குருவருவதால் நன்மைகள் அபரிமிதமாக நடக்கும். கஷ்டங்களுக்கும் கவலைகளுக்கும் விடிவுகாலம் வரப்போகுது. மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். மாத மத்தியில் குரு பெயர்ச்சியாகி பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்க்கிறார் ஏழாம் வீட்டையும் குரு பார்ப்பதால் திருமணம் கை கூடி வரும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
செவ்வாய் எட்டாம் வீட்டில் இருப்பதால் வண்டி வாகனத்தில் கவனமாக இருங்க. வேகமாக போகாதீங்க. ராசி நாதன் சனிபகவான் மாத பிற்பகுதியில் குரு பெயர்ச்சிக்குப் பின்னர் அபரிமிதமான நன்மைகளை செய்வார். இல்லத்தரசிகளின் மகிழ்ச்சி கூடும். புதிய வேலையும் புரமோசனும் நடக்கும். மாணவர்களுக்கு மகிழ்ச்சியும் சுபங்களும் நடைபெறும் மாதம். குல தெய்வ கோவிலுக்கு போங்க நல்லது நடக்கும்.
மீனம்
செய்யும் தொழிலில் நன்மைகள் அதிகம் நடக்கும். லாபம் அதிகம் கிடைக்கும். அரசு வேலைகள் கிடைக்கும். கடன்கள் அதிகமாக இருக்கும். உங்க உடம்பையும் பத்திரமாக பார்த்துக்கங்க. இல்லத்தரசிகளுக்கு உற்சாகமான மாதம். குரு பெயர்ச்சிக்குப் பிறகு உடம்பில் புது தெம்பு வரும்.
குழப்பங்கள் தீரும் பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகள் விசயத்தில் ஜாக்கிரதையும் விழிப்புணர்வும் தேவை. தனியாக எங்கேயும் அனுப்பாதீங்க. தீபாவளி நாளில் லட்சுமி குபேர பூஜை பண்ணுங்க ஐஸ்வர்யம் பெருகும். கஷ்டங்கள் வந்தாலும் கவலைப்படாமல் இருங்க கந்த சஷ்டியில் சூரனை சம்ஹாரம் செய்யும் முருகன் கவலைகளை போக்குவார்.










