• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

குரு பெயர்ச்சி பலன்கள் (04-10-2018 முதல் 28-10-2019)

siddharbhoomi by siddharbhoomi
September 25, 2018
in குரு பெயர்ச்சி
0
குரு பெயர்ச்சி பலன்கள் (04-10-2018 முதல் 28-10-2019)
31
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

மேஷ ராசி குரு பெயர்ச்சி பலன்கள் (04-10-2018 முதல் 28-10-2019)

(Mesha Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019)

அன்பார்ந்த மேஷ ராசி நேயர்களே

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.தங்களது ராசிக்கு 7ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 8 ஆம் இடத்திற்கு செல்கிறார். 8 ஆம் இடம் சுப ஸ்தானமாக கருதவதற்கில்லை. குரு பகவான் 12 ஆம் இடம் 2 ஆம் இடம் மற்றும் 4 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 2 ஆம் இடம் பண வரவினையும் குடும்ப சந்தோஷத்தையும் குறிக்கும். 4 ஆம் இடம் சுக ஸ்தானமாகும். 12 ஆம் இடம் விரய ஸ்தானம் ஆகும்.

 மேஷ ராசி – தொழிலும் வியாபராமும்:

கூடுமானவரை இக் காலக் கட்டத்தில் கூடுதல் பணியை தானாக முன் வந்து எற்றுக் கொள்ள வேண்டாம். ஏனென்றால் நடப்பு வேலைகளை முடிப்பதே சற்று சிரமமாகும். அநாவசியமாக சிலர் வீண் பழிகளை சுமத்தலாம். இது பொறுமையை சோதிக்கக் கூடிய ஒரு காலமாகும். வேலை மாற்றத்திற்கும் இடம் உண்டு.சோம்பேறித்தனத்தை முற்றிலும் தவிர்க்கவும். ஏனென்றால் மேலதிகாரிகள் தங்களை இக் காலக் கட்டத்தில் கூர்ந்து கவனிக்கக் கூடும். வியாபார நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்தும். குறித்த காலத்தில் வேலையே முடித்து தருவது சிரமமாகும். இதனால் மன அழுத்தம் உண்டாகும்.

மேஷ ராசி – பொருளாதாரம்:

இக் காலக் கட்டத்தில் எதிர்பாராத மராமத்து பராமரிப்பு செலவுகள் உண்டு. அவசரப்பட்டு முதலீடுகளில் இறங்க வேண்டாம். முதலீடு நிபுணர்களின் ஆலோசனை பெற்று பண முதலீடு செய்யவும். சொத்துக்கள் வாங்குவதற்கு இடம் உண்டு. எதற்கும் ஒரு முறைக்கு இரு முறை ஊர்ஜிதம் செய்து அதன் பின் முதலீடுகளை மேற்கொண்டால் மாத வரவு செலவு கணக்கில் பற்றாக்குறை இராது.

மேஷ ராசி – குடும்பம்:

கூடுமானவரை நட்புணர்வோடு உறவுகளை பராமரிக்கவும். வீட்டில் சற்று கடுமையான சூழல்களும் இந்த காலக்கட்டத்தில் இருக்கக் கூடும். உங்களுடைய சாணக்கியத்தனத்தால் மட்டுமே உறவுகளை பராமரிக்க முடியும். வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வதில் தனி கவனம் செலுத்தவும்.

மேஷ ராசி – கல்வி:

மாணவர்களிடையே தன்னம்பிக்கை மிகும். படிப்பில் நல்ல கவனமும் உண்டாகும். அயல் நாட்டு அழைப்புகளுக்கும் இடம் உண்டு. பொக்கிஷமான அறிவு விருத்திக்கு இடமுண்டு.

மேஷ ராசி – காதலும் திருமணமும்:

காதலர்களிடையே சிறு சிறு மனப் பிணக்கு ஏற்படலாம். கூடுமானவரை வெளிப்படையாக செயல்படுவது நல்லது. வாழ்க்கைத் துணைக்காக போதுமான நேரம் ஒதுக்கவும். இடையிடையே சிறு சிறு பயணங்கள் மேற்கொண்டு உறவுகளை வலுப்படுத்துவது நல்லது.

மேஷ ராசி – ஆரோக்கியம்:

உணவு நேரங்களில் வேளை தப்பாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் அஜீரணக் கோளாறுகள் தென்படுகின்றது. இயற்கை உணவுகளை அதிகமாக உட்கொள்வது நல்லது உடற்பயிற்சியை தவறாது மேற்கொள்ளவும். சரியான நேரத்தில் எடுக்கப்படும் மருத்துவ ஆலோசனைகள் பெரிய ஆபத்திலிருந்து காப்பாற்றும்.மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:

  • பணிகளில் தாமதம்
  • செலவுகள்
  • அஜீரணக் கோளாறுகள்
  • பொருளாதார இடர்பாடுமுன்னெச்சரிக்கை:
  • கடன் வாங்குவதை தவிர்க்கவும்.
  • எல்லாரிடமும் விட்டுக் கொடுத்து செல்லவும்.

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் கல்வி உபகரணங்களை ஏழை எளிய குழந்தைகளுக்கு தனாமாக கொடுப்பது நல்லது. தினந்தோறும் “ஓம் பிருகஸ்பதியே நமஹ” என்று பாராயணம் செய்யவும். ஆறு மாதத்திற்கு ஒரு முறையேனும் குரு பகவானுக்கு ஒரு ஹோமம் செய்யவும்.

 

ரிஷப ராசி குரு பெயர்ச்சி பலன்கள் (04-10-2018 முதல் 28-10-2019)

(Rishaba Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019)

அன்பார்ந்த ரிஷப ராசி நேயர்களே!

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.தங்களது ராசிக்கு 6 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 7 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 11 ஆம் இடம் 1 ஆம் இடம் மற்றும் 3 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 11 ஆம் இடம் விருப்பங்கள் நிறைவேறுவதையும் லாபத்தையும் குறிக்கும். 1 ஆம் இடம் தேக நலனையும் மன நலனையும் வெற்றி தோல்வியையும் குறிக்கும் 3 ஆம் இடம் தகவல் பரிமாற்றம் சிறு தூரப் பிராயணம் இவற்றை குறிக்கும்.

ரிஷப ராசி – தொழிலும் வியாபராமும்:

வெகு நாளாக எதிர்பார்த்த பதவி உயர்வு இக் காலக் கட்டத்தில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உடன் பணி புரிவோரிடம் சுமுக உறவு மேற்கொள்ள முடியும். தங்கள் திறமைகளை வைத்துக் கொண்டு உபரி வருமானம் சம்பாதிக்க வழி உண்டு. வியாபாரத்தில் முன்னுயர்வு தெரிகிறது. வியாபார விரிவாக்கத்திற்கு இடமுண்டு. கூட்டு முயற்சிகளுக்கு சரியான கூட்டாளியை கண்டுபிடித்து கூட்டு சேர்வது நல்லது.

ரிஷப ராசி – பொருளாதாரம்:

பொருளாதாரத் தேவைகள் பூர்த்தியாகும். அதே நேரத்தில் இக்காலக் கட்டத்தில் கூடுதல் செலவுகளும் தென்படுகின்றது. வரிகளை காலா காலத்தில் செலுத்துவது நல்லது. ஏனென்றால் அபராத கட்டணங்கள் கண்ணுக்கு தென்படுகின்றது. மருத்துவக் காப்பீடுகள் மேற்கொண்டு உடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுப்பது நல்லது.

ரிஷப ராசி – குடும்பம்:

குடும்ப உறவில் சுமுகம் தெரிகின்றது. தங்களது சிறப்பு முயற்சியால் வாழ்க்கைத் துணையின் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் ஒவ்வொருவரையும் சந்தோஷமாக வைத்துக் கொள்ள பிரத்தியேக முயற்சி உங்களிடம் உண்டு.

ரிஷப ராசி – கல்வி:

இது மேற் படிப்பிற்கு உகந்த காலம் ஆகும். தங்களது நண்பர்கள் தங்களது வழ்காட்டுதல்களை எதிர்பார்க்கலாம். குழுவாகப் படிப்பதன் மூலம் பல சந்தேகங்களுக்கு தீர்வு கிடைக்கும். வியாபார மேலாண்மை, அயல் நாட்டு வர்த்தகம், விஞ்ஞானம் போன்ற பாடங்களைப் பயில்வோர் ஏற்றம் காணுவர்.

ரிஷப ராசி – காதலும் திருமணமும்:

வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யமுண்டு. வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பு சிறந்த முறையில் இருக்கும். இது காதல் மலரக் கூடிய ஒரு காலம் ஆகும். காதல் உறவுகள் வலுப்படும். அதுவே திருமணத்தில் முடியக் கூடிய நல்ல நேரம் ஆகும்.

ரிஷப ராசி – ஆரோக்கியம்:

இக் காலக்கட்டத்தில் உடல் ஆரோக்கியம் பராமரிக்க முடியும். சிறு சிறு உபாதைகள் இருந்தாலும் சுலபமாக மீள முடியும். தீராப் பிணிகளுக்கு கூட இக் காலகட்டத்தில் ஒரு தீர்வு காண முடியும். மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:

  • காதலில் வெற்றி
  • திருமணம்
  • பதவி உயர்வு
  • பிணிகளிலிருந்து விடுதலை
  • பொருளாதார முன்னேற்றம்

பரிகாரம்:

“ஓம் குரவே நமஹ” என வியாழக்கிழமைகளில் 108 முறை ஜெபிக்கலாம். ஏழை எளியவர்களுக்கு பொருளாதார உதவி செய்யவும்.

 

மிதுன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் (04-10-2018 முதல் 28-10-2019)

(Mithuna Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019)

அன்பார்ந்த மிதுன ராசி நேயர்களே!

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசிக்கு 5 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 6 ஆம் இடத்திற்கு செல்கிறார். 6 ஆம் இடம் சுப ஸ்தானமாக கருதவதற்கில்லை. குரு பகவான் 1௦ ஆம் இடம் 12 ஆம் இடம் மற்றும் 2 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 1௦ ஆம் இடம் தொழிலையும் 12 ஆம் இடம் விரயம் மற்றும் அயல் நாட்டு பயணத்தையும் 2 ஆம் இடம் பண வரவு மற்றும் குடும்பத்தையும் குறிக்கும்.

மிதுன ராசி – தொழிலும் வியாபராமும்:

வேலைகள் குவியும். அதனால் வேலைகளை ஒப்புக் கொள்ளும் போதே நிதானமாக பார்த்து ஒப்புக் கொள்ளவும். உங்கள் வேலைக்கு அங்கீகாரம் உண்டு. ஆனால் அது மிகுந்த கால தாமதத்திற்குப் பிறகே நிகழும். வேலை நிமித்தமாக அயல் நாட்டு பயணங்களும் தெரிகின்றது. வியாபார முன்னேற்றத்திற்கு மிகுந்த பிரயத்தனங்கள் தேவைப்படும். அதிக வேலைப் பளுவால் செய்யும் பணியில் பரிமளிக்க முடியாமல் போகலாம் எனவே ஒப்புக் கொண்ட பணியை குறிப்பிட காலத்திற்குள் முடித்துக் கொடுப்பது நல்லது.

மிதுன ராசி – பொருளாதாரம்:

அனாவசிய செலவுகள் காணப்படுகின்றது. அதே நேரத்தில் கடன்களை திரும்ப செலுத்த இந்த காலக் கட்டம் கை கொடுக்கும். நண்பர்கள் மூலம் பொருளாதார உதவி பெற வாய்ப்பு உண்டு. பெரிய அளவில் பொருளாதார முன்னேற்றம் காண்பது சற்று சிரமம்.

மிதுன ராசி – குடும்பம்:

குடும்ப உறவுகளை சுமாராக பராமரிக்க முடியும். உறவுகளில் விரிசல்கள் காணப்படுகின்றது. குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதற்கு சற்று நேரம் ஒதுக்குவது நல்லது. குடும்ப பொறுப்புகளை ஏற்க தாங்கள் தயங்கக் கூடும். இதனால் சில சச்சரவுகள் வர வாய்ப்புள்ளது. இந்நிலையினை தவிர்க்கவும்.

மிதுன ராசி – கல்வி:

கல்வியில் வெற்றி காண அதிக பிரயத்தனம் தேவைப்படும். வீண் உணர்வுகளுக்கு இடம் கொடுக்காமல் நடைமுறை சாத்தியங்களைப் பார்த்து படிப்பில் திட்டங்களை வகுப்பது நல்லது. மறைந்திருந்த திறமைகள் வெளிப் படக் கூடிய காலமிது. வீண் பிடிவாதங்களை தவிர்த்தாலே நல்ல பலன்களைப் பெற முடியும்.

மிதுன ராசி – காதலும் திருமணமும்:

காதல் உறவுகள் ரம்மியமாக இல்லை. சொன்னது ஒன்று புரிந்து கொண்டது ஒன்று என்ற விதமாக உறவுகள் அமையும். வீண் குழப்பங்கள் காணப்படுகின்றது. நல்ல புரிதலுக்கு மிகுந்த பொறுமை தேவை. திருமண வாய்ப்புகள் தாமதப்படலாம். திருமண உறவுகளை தீர்மானிப்பதில் தாமதப் போக்கு தெரிகின்றது.

மிதுன ராசி – ஆரோக்கியம்:

உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் தேவை. உடலில் சிறு உபாதைகள் இருந்தால் கூட அதனை அலட்சியப் படுத்த வேண்டாம். உடனுக்குடன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:

  • கூடுதல் வேலைப் பளு
  • நிதி உதவி பெறுதல்
  • குடும்ப உறவில் மனப்பிணக்கு
  • வெற்றிக்கு அதிகப் பிரயத்தனங்கள்
  • திருமண ஏற்பாடுகள் தாமதமாகுதல்
  • உடல் உபாதைகள்
  • முன்னெச்சரிக்கை:
  • நடைமுறை சாத்தியங்களை பார்த்து பொறுப்புகளை எற்றுக் கொள்ளவும்
  • பெரிய அளவிலான கடன்களை தவிர்க்கவும்
  • உடனுக்குடன் மருத்துவ ஆலோசனைகளைப் பெறவும்
  • குடும்ப உறவில் கூடுதலாக பொறுப்பு எடுத்துக் கொள்ளவும்

 

பரிகாரம்:

முடிந்தால் வியாழக்கிழமைகளில் ஒரு பொழுது உணவை கடைபிடிக்கலாம்.

 

சிம்ம ராசி குரு பெயர்ச்சி பலன்கள் (04-10-2018 முதல் 28-10-2019)

(Simha Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019)

அன்பார்ந்த சிம்ம ராசி நேயர்களே!

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசிக்கு 3 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 4 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 8ஆம் இடம் 10 ஆம் இடம் மற்றும் 12 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 8 ஆம் இடம் வம்சாவழி சொத்துக்களையும் எதிர்பாராத செலவினங்களையும் தொல்லைகளையும் குரிப்பிடும். 1௦ ஆம் இடம் பதவி மற்றும் அந்தஸ்தை குறிப்பிடும். 12 ஆம் இடம் வீண் விரயங்களையும் பிரச்சினைகளையும் நஷ்டங்களையும் குறிக்கும்.

சிம்ம ராசி – தொழிலும் வியாபராமும்:

இந்த காலக் கட்டத்தில் வீண் பழிகளை சுமக்க நேரலாம். கூடுதல் வேலைப் பளு தெரிகின்றது. கவனச் சிதறலால் தொழிலில் தவறுகள் ஏற்படலாம். அதனை தவிர்க்கவும். வியாபாரத்தில் உள்ளோர் வியாபார நடவடிக்கைகளை கை விட வேண்டாம். ஆனால் புதிய முயற்சிகளை மட்டும் சிறிது காலத்திற்கு ஒத்திப் போடலாம்.

சிம்ம ராசி – பொருளாதாரம்:

பொருளாதாரம் சுமாராக இருக்கும். நிதி உதவி பெறுவதை பெருமளவில் குறைக்கவும். ஏனென்றால் பணம் திரும்ப செலுத்துவதில் சிரமம் தெரிகின்றது. தான தர்ம செலவுகள் தெரிகிறது . ஆடம்பர செலவுகளும் தான் உண்டு.இதோடு ஆன்மீக பயணங்களும் செலவுகளை கொண்டு வரும்.

சிம்ம ராசி – குடும்பம்:

குடும்ப உறவுகள் சுமாராக இருக்கும். தாங்கள் தான் அதிகமாக பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கும். பிரதிபலனை எதிர்பார்க்க முடியாது. உறவுகளில் சிறு சிறு விஷயங்களால் விரிசல்கள் ஏற்பாடும். அதனை பொருட்படுத்த வேண்டாம்.

சிம்ம ராசி – கல்வி:

மேற்கொண்ட கல்வியை குறித்த காலத்தில் முடிக்க முடியும். எல்லோரிடமும் சுமுக உறவு பராமரிக்கவும். அவ்வப்போது தங்களது துறையில் ஏற்படும் முன்னேற்றங்களை அறிந்து கொண்டு செயல்படவும்.

சிம்ம ராசி – காதலும் திருமணமும்:

திருமணம் தாமதமாகலாம். முக்கிய முடிவுகள் மேற்கொள்வதில் அவசரப்பட வேண்டாம். ஒவ்வொரு விஷயங்களையும் வாழ்க்கைத் துணையுடன் விவாதித்து பின் முடிவெடுக்கவும்

சிம்ம ராசி – ஆரோக்கியம்:

சரியான உணவு முறையினால் நல்ல ஆரோக்கியம் பேணலாம். பெரும் ஆபத்து ஏதுமில்லை. தியானமும் உடற்பயிற்சியும் மிகவும் நல்லது.

மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:

  • கூடுதல் வேலைப் பளு
  • வீண் பழிகள் ஏற்படுதல்
  • கடனை திரும்ப செலுத்துவதில் சிரமம்

 முன்னெச்சரிக்கை:

  • முடிவுகளை எடுப்பதில் அவசரப்பட வேண்டாம்.
  • பிரதிபலனை எதிர்பாராது கடமைகளைச் செய்யவும்.

 பரிகாரம்:

ஆறு மாதத்திற்கு ஒரு முறையேனும் குரு ஹோமம் பண்ணவும்.

 

கன்னி ராசி குரு பெயர்ச்சி பலன்கள் (04-10-2018 முதல் 28-10-2019)

(Kanni Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019)

அன்பார்ந்த கன்னி ராசி நேயர்களே!

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.

தங்களது ராசிக்கு 2 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 3 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 7 ஆம் இடம் 9 ஆம் இடம் மற்றும் 11 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 7 ஆம் இடம் திருமண பந்தத்தை குறிக்கும். 9 ஆம் இடம் உயர் கல்வி, வெளிநாட்டுப் பயணம் மற்றும் ஆன்மீகத்தை குறிக்கும். 11 ஆம் இடம் லாபம் மற்றும் விருப்பங்கள் நிறைவேறுவதைக் குறிக்கும்.

கன்னி ராசி – தொழிலும் வியாபராமும்:

தொழிலில் சவால்கள் தென்படுகின்றது. வேலையே கதி என்று இருந்தால் வெற்றி காணலாம். தங்களது ஆளுமை, புதிய பணிகளை தங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். தகவல் தொடர்பில் கவனமாக இருக்கவும். மிகுந்த பிரயத்தனத்தினால் உற்பத்தி திறன் காணலாம்.

கன்னி ராசி – பொருளாதாரம்:

பொருளாதாரத்தில் திடீர் உயர்வு உண்டு. ஆனால் ஆடம்பர செலவுகளுக்கும் பஞ்சமில்லை. நண்பர்களுக்கு கொடுத்த பழைய கடனை திரும்ப பெற முடியும்.

கன்னி ராசி – குடும்பம்:

ஒவ்வொன்றுக்கும் குடும்ப நபர்கள் தங்களது உதவியையே எதிர்பார்ப்பர். வார்தைகளை கட்டுப்படுத்துவது நல்லது. குடும்ப சூழலில் அதிகமான சந்தோஷ தருணங்கள் இல்லை.

கன்னி ராசி – கல்வி:

தகவல் தொடர்பு, ஊடகம், சமூக சேவை போன்ற பாடங்களை படிப்பவர்கள் வெற்றி காண்பர். எல்லா விஷயங்களையும் சுலபமாக கிரகித்துக் கொள்ள முடியும். கல்வியில் வெற்றி பெற சரியான திட்டங்கள் தேவை.

கன்னி ராசி – காதலும் திருமணமும்:

அவசர முடிவுகள் வேண்டாம். கூடுமானவரை வாழ்க்கைத் துணையின் தேவைகளை புரிந்து கொண்டு நடந்து கொள்ளவும்.

கன்னி ராசி – ஆரோக்கியம்:

வெகு நாளைய உடல் உபாதைகளுக்கு இந்த காலக்கட்டத்தில் நிவாரணம் உண்டு. அனைத்துப் பழ வகைகளையும் பருவத்திற்கு ஏற்றார் போல உட்கொள்ளவும்.

மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:

  • வீண் செலவுகள்
  • கூடுதல் வேலைப் பளு
  • நீண்ட நாளைய கடன் தொகை வசூலாகுதல்
  • கல்வியில் முன்னேற்றம்

முன்னெச்சரிக்கை:

  • அதிக பிரயத்தனம் தேவைப்படும்.
  • பொருளாதாரத்தில் அதிக கவனம் தேவை.
  • ஆடம்பர செலவுகளைக் குறைக்கவும்.

பரிகாரம்:

ஏழை எளியவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கலாம்.

 

துலாம் ராசி குரு பெயர்ச்சி பலன்கள் (04-10-2018 முதல் 28-10-2019)

(Thulam Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019)

அன்பார்ந்த துலாம் ராசி நேயர்களே

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.தங்களது ராசியில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 2 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 6 ஆம் இடம் 8 ஆம் இடம் மற்றும் 1௦ ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 6 ஆம் இடம் ரோகத்தையும் சத்ருக்களையும் குறிக்கும். 8 ஆம் இடம் இடையூறுகள் மற்றும் சிரமங்களையும் 1௦ ஆம் இடம் தொழிலையும் கவுரவத்தையும் குறிக்கும்.

துலாம் ராசி – தொழிலும் வியாபராமும்:

தொழிலில் முன்னுயர்வு உண்டு. மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிட்டும். வியாபார நடவடிக்கைகள் ஆதரவு அளிக்கும் வகையில் இருக்கும். புதிய திட்டங்கள், புதிய முதலீடுகள் ஆகியவற்றிற்கு இடமுண்டு.

துலாம் ராசி – பொருளாதாரம்:

வருமானம் உயரும். முதலீடுகளை கூட்டி கொண்டு செல்லலாம். நீண்ட கால முதலீடுகள் நற்பலன் அளிக்கும் காலமிது. பொருளாதாரம் வலுக்கும்.

துலாம் ராசி – குடும்பம்:

குடும்ப சூழல் திருப்தி அளிக்கும். குடும்பப் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.குடும்ப நபர்களுக்கு தங்களால் ஆலோசனைகளை வழங்க முடியும். அவர்களும் கேட்கும் நிலயில் இருப்பர்.குழந்தைகளால் சந்தோஷம் உண்டு.

துலாம் ராசி – கல்வி:

மேற்படிப்பிற்கான பிரயாணங்கள் உண்டு.கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். பிரயத்தனங்களுக்கு நற்பலன் உண்டு.

துலாம் ராசி – காதலும் திருமணமும்:

உறவில் பரஸ்பர அன்பு உண்டு. திருமண பந்தங்கள் வலுக்கும். கேளிக்கைகளுக்கு இடமுண்டு. தகவல் பரிமாற்றத்தால் பிறரின் அன்பினைப் பெற முடியும்.

துலாம் ராசி – ஆரோக்கியம்:

நீண்ட நாட்களாக இருந்து வந்த உபாதைகளிலிருந்து விடுதலை உண்டு. எதையும் சுலபமாக எடுத்துக் கொள்ளும் தன்மையால் ஆரோக்கியம் கெடாது. பழ வகைகள் அதிகம் சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை வளர்க்கவும்.

மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:

  • வருமான உயர்வு
  • உடல் உபாதைகளிலிருந்து நிவாரணம்
  • புதிய முதலீடுகள்
  • உறவுகளில் அனுசரணை

பரிகாரம்:

ஓம் நமோ வாசஸ்பதியே என 108 முறை ஜெபிக்கவும்.

ஏழை எளியவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கலாம்.

 

விருச்சிக ராசி குரு பெயர்ச்சி பலன்கள் (04-10-2018 முதல் 28-10-2019)

(Viruchigam Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019)

அன்பார்ந்த விருச்சிக ராசி நேயர்களே!

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசிக்கு 12ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் தங்கள் ராசிக்குள் பிரவேசிக்கிறார். குரு பகவான் 5ஆம் இடம் 7 ஆம் இடம் மற்றும் 9 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 5 ஆம் இடம் புத்திர ஸ்தான பாக்கியத்தையும் 7 ஆம் இடம் திருமண உறவுகளையும் 9 ஆம். இடம் சகல பாக்கியங்களையும் குறிக்கும்.

விருச்சிக ராசி – தொழிலும் வியாபராமும்:

வேலையில் கூடுதல் பிரயத்தனம் தேவைப்படுகின்றது. வியாபரம் சுமாராக செல்லும். இடமாற்றமும் தென்படுகின்றது.

விருச்சிகராசி – பொருளாதாரம்:

சுற்றத்தார் மற்றும் நண்பர்கள் மூலம் பொருளாதார உதவி கிடைக்கும். முதலீடுகளிலிருந்து பண வரவு உண்டு. நிதி திட்டங்களை தீட்டி, செலவுகளை மேற்கொள்ளவும்.

விருச்சிக ராசி – குடும்பம்: குடும்ப சூழல் திருப்தி அளிக்கும். குடும்ப நபர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். குடும்ப நபர்களிடமும் ஆதரவாக இருக்க முடியும். பொறுப்புகளையும் கடமைகளையும் மனமுவந்து செய்ய முடியும்.

விருச்சிக ராசி – கல்வி: கூட்டாகக் கல்வி பயில்வதில் ஆர்வம் உண்டாகும். மற்றவர்களின் சந்தேகங்களை தீர்க்கக் கூடிய திறன் இருக்கும். நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். விரும்பிய பாட திட்டத்தில் சேர முடியும்.

விருச்சிக ராசி – காதலும் திருமணமும்: உங்களுடைய சுய முடிவுகள் சுமூக உறவிற்கு வழி வகுக்கும். விட்டுக் கொடுத்தலால் நல்லுறவு பேண முடியும். வீண் குழப்பங்களை தவிர்க்கவும். ஏனென்றால் இது எதிராளியையும் பாதிக்கும்.

விருச்சிக ராசி – ஆரோக்கியம்: சிறு சிறு பிரச்சினைகளுக்கு கவலைப் பட்டால் உடல் ஆரோக்கியம் கெடும். தேகத்திற்கு அவ்வப்போது ஒய்வு தேவை என்று உணரவும். உணவு வேளைகளை தப்பாதிருக்கவும். தியானம் யோகா போன்ற பயிற்சிகள் மன நலன் காக்கும். மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:

  • கூடுதல் பிரயத்தனம்
  • குடும்ப நபர்களுடன் அனுசரணை
  • நிதி உதவி
  • விரும்பிய பாட திட்டத்தில் சேருதல்

பரிகாரம்:

ஓம் பிரகஸ்பதியே நமஹ என்று 108 முறை ஜெபிக்கவும்.

தனுசு ராசி குரு பெயர்ச்சி பலன்கள்  (04-10-2018 முதல் 28-10-2019)

(Dhanusu Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019)

அன்பார்ந்த தனுசு ராசி நேயர்களே!

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார். தங்களது ராசிக்கு 11ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 12 ஆம் இடத்திற்கு செல்கிறார். 12 ஆம் இடம் சுப ஸ்தானமாக கருதுவதற்கில்லை. குரு பகவான் 4 ஆம் இடம் 6 ஆம் இடம் மற்றும் 8 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 4 ஆம் இடம் சுக ஸ்தானமாகும். 6 ஆம் இடம் சத்ரு மற்றும் ரோகத்தையும் 8 ஆம் இடம் இடர்பாடுகள் மற்றும் சிரமங்களையும் குறிக்கும்.

தனுசு ராசி – தொழிலும் வியாபராமும்:

பணிபுரியும் இடத்தில வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வேண்டாத சிந்தனைகள் தலை தூக்கும். வேலைகள் தாமதமாகும். உற்பத்தித் திறன் குறையும். எனவே மிக எச்சரிக்கையுடன் செயல்படவும்.

தனுசு ராசி – பொருளாதாரம்:

செல்வ நிலை திருப்தி அளிக்கவில்லை. செலவுகளுக்கு பஞ்சமில்லை. வரவை விட செலவு தான் அதிகம். சுப செலவுகளும் உண்டு. வேண்டாத பொருட்களை வாங்க வேண்டாம். வீட்டுச் செலவுகள் கூடிக்கொண்டே போகும். வீட்டில் உள்ள நபர்கள் ஒவ்வொருவரும் அவரவர் பங்கிற்கு புது செலவுகளை கொண்டு வருவர்.

தனுசு ராசி – குடும்பம்:

குடும்ப நபர்கள் அவர்களது பொறுமையின்மையை உங்களிடம் காட்டுவர். அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சிந்தனையிலும் முடிவிலும் அதிக தடுமாற்றங்கள் உண்டு. இதனை முழுவதுமாக தவிர்க்கவும்.

தனுசு ராசி – கல்வி:

அயல் நாட்டில் கல்வி பயில இது உகந்த காலமாகும். விரும்பிய பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்கப் பெறும். பிறரை சார்ந்து இராது நீங்களே முடிவுகளை மேற்கொள்வது நல்லது.

தனுசு ராசி – காதலும் திருமணமும்:

வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்கள் அதிகம். அபிப்பிராய பேதமும் ஏற்படும். அபிப்பிராயங்களை சொல்லும் பொழுது ஜாக்கிரதையாக தெரிவிக்கவும். தகவல் பரிமாற்றம் சாதகமாக இல்லை. எனவே தகவல்கள் சரியாகப் புரிந்து கொள்ளப்படுகிறதா என்று உறுதி செய்யவும்.

தனுசு ராசி – ஆரோக்கியம்:

அதிக வேலைப் பளுவால் களைப்பு உண்டாகும். மூட்டு வலி காணப்படுகின்றது. துரித உணவுகளை தவிர்க்கவும்.இரத்த அழுத்தம் மிகுந்து காண வாய்ப்பு உள்ளது.

மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:

  • அதிக செலவுகள்
  • அபிப்பிராய பேதங்கள்
  • உடல் களைப்பு
  • தொழில் முடக்கம்
  • சுப செலவுகள்

பரிகாரம்:

ஆறு மாதங்களுக்கு ஒரு முறையேனும் குரு பகவானுக்கு ஹோமம் செய்யவும்.

மகர ராசி குரு பெயர்ச்சி பலன்கள் (04-10-2018 முதல் 28-10-2019)

(Makara Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019)

அன்பார்ந்த மகர ராசி நேயர்களே!

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.

தங்களது ராசிக்கு 1௦ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 11 ஆம் இடத்திற்கு செல்கிறார்.குரு பகவான் 3 ஆம் இடம் 5 ஆம் இடம் மற்றும் 7 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 3 ஆம் இடம் சிறு தூரப் பிரயாணம், தகவல் தொடர்பு இவற்றை குறிக்கும். 5 ஆம் இடம் குழந்தைகள், ஊக வாணிபம், ஆன்மீக ஈடுபாடு இவற்றி குறிக்கும்.7 ஆம் இடம் திருமணபந்தம், வியாபார கூட்டாளிகளை குறிக்கும்.

மகர ராசி – தொழிலும் வியாபராமும்:

தொழிலில் முன்னேற்றம் காணலாம். புதிய வேலை வாய்புகள் உருவாகும். குறித்த காலத்தில் பணிகளை முடிக்க முடியும். நிலுவைப் பணிகள் கணிசமாகக் குறையும். வியாபார முன்னேற்றம் காணலாம். புதிய சிந்தனைகளை அமல் படுத்த முடியும்.

மகர ராசி – பொருளாதாரம்:

பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றம் காணலாம். செலவுகளை கணிசமாக குறைக்க முடியும். நெடு நாளைய முதலீடுகள் நற்பலன்களை கொடுக்கும். ஆன்மீக செலவுகள் காணப்படுகின்றது.

மகர ராசி – குடும்பம்:

குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். தகவல் பரிமாற்றம் நல்ல முறையில் இருக்கும். குழந்தைகளுடன் குதூகலமுண்டு. சுற்றத்தாருடன் அபிப்பிராயங்களை பகிர்ந்து கொள்ளும் போது நடுநிலையாக செயல்படவும்.

மகர ராசி – கல்வி:

ஆர்வமான பிரிவில் அறிவு விருத்தி பெற முடியும். படிப்பில் கவனமுண்டு. நல்ல அக்கறை உண்டு. ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் சிறந்த முறையில் இருக்கும். எல்லாவற்றையும் விளையாட்டாக எடுத்துக்கொள்ளாமல் இருந்தால் இன்னும் உற்பத்தி திறன் அதிகரிக்கும். திட்டங்களை வகுத்து பாடங்களை படிப்பது நற்பலன்களை கொடுக்கும்.

மகர ராசி – காதலும் திருமணமும்:

ஆவலும் ஆர்வமும் அதிகரிக்கக் கூடிய காலம் இது. சிறு சிக்கல்கள் இருந்தால் கூட அதை தீர்த்தால் தான் நிம்மதி என்று யத்தனிக்கும் காலமிது. திருமண உறவுகள் வலுப்படும்.காதலர்களிடையே பரஸ்பர அன்பு உண்டு. திருமண வாய்ப்புகளும் வந்து சேரும்.

மகர ராசி – ஆரோக்கியம்:

நல்ல ஆரோக்கியம் பராமரிக்க முடியும். ஊக்கமும் ஆக்கமும் மிகும். அழகு பரிமளிக்கும். ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டாலே போதுமானது.

மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:

  • பதவி உயர்வு
  • பொருளாதார முன்னேற்றம்
  • சுமூக உறவு
  • குடும்பத்தில் குதூகலம்
  • நல்ல ஆரோக்கியம்.
  • திருமணம் கைகூடுதல்

பரிகாரம்:

நற்பலன்கள் அதிகரிக்க வியாழக்கிழமைகளில் “ஓம் பிருகஸ்பதியே நமஹ” என்று 108 முறை ஜபிக்கவும்.

 

கும்ப ராசி குரு பெயர்ச்சி பலன்கள் (04-10-2018 முதல் 28-10-2019)

(Kumba Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019)

அன்பார்ந்த கும்ப ராசி நேயர்களே!

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.

தங்களது ராசிக்கு 9ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 1௦ ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 2 ஆம் இடம் 4 ஆம் இடம் மற்றும் 6 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 2 ஆம் இடம் பண வரவினையும் குடும்ப சந்தோஷத்தையும் குறிக்கும். 4 ஆம் இடம் சுக ஸ்தானமாகும். 6 ஆம் இடம் பிணிகளையும் எதிரிகளையும் குறிக்கும்.

கும்ப ராசி – தொழிலும் வியாபராமும்:

பணிகளை கவனமாக மேற்கொள்வது நல்லது. கவனச் சிதறலினால் பணிகளில் சிரமங்களை சந்திக்க நேரலாம். உடன் பணிபுரிவோருடன் தர்க்கங்களை தவிர்க்கவும். தானுண்டு தன வேலையுண்டு என்று இருப்பது நன்று. அவ்வாறு இருந்தால் தான் உறப்த்தித் திறன் காண முடியும்.

கும்ப ராசி – பொருளாதாரம்:

ரொக்கப் பரிமாற்றங்களில் முன் ஜாக்கிரதையாக இருக்கவும். செலவுகளை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும். அதிகமாக மருத்தவ செலவுகள் காணப்படுகின்றது. அனாவசிய செலவுகளை தவிர்க்கவும். மொத்தத்தில் பொருளாதாரம் சுமார்.

கும்ப ராசி – குடும்பம்:

குடும்ப உறவுகளில் அதிருப்தி நிலவலாம். வீண் சண்டை சச்சரவுகளுக்கு இடமுண்டு. குழந்தைகளைப் பற்றிய விசாரம் ஏற்படலாம். தாயாரின் உடல் நலம் பற்றிய கவலை காணப்படும். அதிகமாக விட்டுக் கொடுத்து உறவுகளை பராமரிக்க நேரும்.

கும்ப ராசி – கல்வி:

கல்வியில் வெற்றி பெற அதிக பிரயத்தனங்கள் தேவை. மேற்கல்வி வாய்ப்புகள் தென்படுகின்றது. சுய முடிவு எடுப்பது சிறந்தது. நண்பர்களை கல்ந்தலோசிப்பதால் சற்று தடுமாற்றம் ஏற்படலாம்.

கும்ப ராசி – காதலும் திருமணமும்:

வாழ்க்கைத் துணை சதா ஏதாவது ஒரு காரணம் கண்டுபிடித்து சண்டை சச்சரவுகளை துவக்கலாம். எனவே கூடுமானவரை வாக்குவாதங்களை தவிர்க்கவும். உறவுகளை பராமரிக்க அதிக பொறுமை தேவை. திருமண வாய்ப்புகள் வலுவாக இல்லை.

கும்ப ராசி – ஆரோக்கியம்:

அஜீரணக் கோளாறுகள் மற்றும் வயிற்று வலி தென்படுகின்றது. உணவு விஷயத்தில் முன் ஜாக்கிரதையாக இருக்கவும். உடல் உபாதைகளை தவிர்க்க முன் ஜாக்கிரதையாக இருத்தலும் கவனமாக இருத்தலும் மிகவும் முக்கியம் ஆகும்.

மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:

  • வேலையில் கவனச் சிதறல்
  • கடும் முயற்சி
  • உறவில் உரசல்
  • அனாவசிய செலவுகள்
  • மருத்துவ செலவுகள்

முன்னெச்சரிக்கை:

  • கவனமாக பணிகளை மேற்கொள்ளவும்
  • தாயாரின் உடல் நலத்தில் அக்கறை தேவை
  • அதிக பிரயத்தனங்கள் தேவைப்படும்.
  • அபிப்பிராய பேதத்தின் போது தர்க்கங்களை தவிர்க்கவும்.

பரிகாரம்:

ஏழை எளியவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கலாம்.

 

மீன ராசி குரு பெயர்ச்சி பலன்கள் (04-10-2018 முதல் 28-10-2019)

(Meenam Rasi Guru Peyarchi Palangal Tamil 2018 to 2019)

அன்பார்ந்த மீன ராசி நேயர்களே!

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி குரு பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு இடம் பெயர்கிறார்.

தங்களது ராசிக்கு 8 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 9 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 1 ஆம் இடம் 3 ஆம் இடம் மற்றும் 5 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். 1 ஆம் இடம் வெற்றி தோல்வியையும் ஆளுமையையும் 3 ஆம் இடம் இளைய சகோதரம், சிறு தூரப் பிரயாணம் மற்றும் தகவல் தொடர்பையும் 5 ஆம் இடம் புத்திர பாக்கியம் ஊக வாணிபம், பூர்வ புண்ணியம் இவற்றையும் குறிக்கும்.

மீன ராசி – தொழிலும் வியாபராமும்:

இக் காலகட்டத்தில் வருமானம் உயரும். சார்நிலை அலுவலரின் ஒத்துழைப்பினால் வேலையினை குறித்த காலத்தில் முடிக்க முடியும். பொதுவாக தொழிலில் வளர்ச்சி காணும் காலம் இது. அயல் நாட்டு பயணங்களுக்கு இடம் உண்டு.

மீன ராசி – பொருளாதாரம்:

அனாவசிய செலவுகள் தவிர்க்கப்படும். ஊக வாணிபம் கூட கை கொடுக்கும். பொருளாதார முன்னேற்றம் இருக்கும். எதிர்காலத்தை உத்தேசித்து சிறு சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்யும் எண்ணம் உருவாகும்.

மீன ராசி – குடும்பம்:

குடும்பத்தில் குதூகலம் உண்டு. குடும்பத்தாரின் அனுசரணையைப் பெற முடியும். பாசிடிவான எண்ணங்கள் குடும்ப முன்னேற்றத்திற்கு கை கொடுக்கும். சமூக நிகழ்வுகளில் பங்கேற்க முடியும். அவசர முடிவுகளை தவிர்க்கவும்.

மீன ராசி – கல்வி:

மேற்கொண்ட கல்வியை இனிதே முடிக்க முடியும். ஆசிரியர் விரிவுரையாளருடன் நல்லுறவு உண்டு. எல்லாப் பணிகளுமே சுலபமாக முடியும். பொது அறிவு விருத்தி ஆகும்.

மீன ராசி – காதலும் திருமணமும்:

சிறு சிறு உரசல்கள் இருந்தாலும் அவைகளை களைந்து உறவுகளை வலுப்படுத்த முடியும். விட்டுக் கொடுக்கும் மனோபாவம் உண்டாகும். திருமணம் குறித்து தெளிவாக இருந்தால் இக்காலகட்டத்தை பயன்படுத்தி திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

மீன ராசி – ஆரோக்கியம்:

இக்காலக் கட்டத்தில் ஆரோக்கியம் பேண முடியும். எனினும் அஜீரணக் கோளாறுகளை தவிர்க்க, உணவு வேளைகளை தப்பாதிருக்கவும். நிறைய பழம் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும்.

மொத்தத்தில் இந்தக் கோட்சாரமானது கீழ் கண்ட பலன்களை அளிக்கும்:

  • வருமான உயர்வு
  • வெளிநாட்டுப் பயணம்
  • குடும்பத்தில் சுப நிகழ்வுகள்
  • கல்வியில் முன்னேற்றம்
  • நல்ல ஆரோக்கியம்

பரிகாரம்:

வியாழக்கிழமைகளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யவும். ஓம் பிரகஸ்பதியே நமஹ என வியாழக்கிழமைகளில் 108 முறை ஜெபிக்கவும்.

Previous Post

சமையல் புத்தகம் 

Next Post

‘நம் பிராப்தம் இதுதான்’

Next Post
‘நம் பிராப்தம் இதுதான்’

‘நம் பிராப்தம் இதுதான்’

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025

சித்தர் வழி, சித்தர் வழி, சித்தர் வழி பாடல் – வெளியீடு சித்தர் பூமி 4K: உடனே கேளுங்கள்!

December 2, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »