எமது ஆத்ம குருவான சிவவாக்கிய பொருமானை நான் குருவாக கொண்டதற்க்கு பெரு மகிழ்வும், சிவத்தை அடையும் வழியும் கிடைத்ததற்க்கும் என்ன கைமாறு செய்வேனோ… அடியேன் அறியவில்லை.
சிவாயநம
சிவத்தின் உண்மை வாக்கியம் எமது ஆத்ம குருவின் சிவவாக்கியம். இதனை அன்பர்கள் உணர்ந்து புறத்தேடலை விடுத்து அகத்தேடலில் பயணிக்க வேண்டும் என்று வேண்டுவது எமது கடமையே.
அற்புதமான ஓர் சூத்திரத்தின் பொருளை ஆழ்ந்து காணலாம்.
சிவாயநம
நெட்டெழுத்து வட்டமொன்று நிறைந்தவல்லி யோனியும்,
நெட்டெழுத்து வட்டமென்று நின்றதொன்று கண்டிலேன்
குற்றெழுத்தில் உற்றதென்று கொம்புகால் குறித்திடில்
நெட்டெழுத்தில் வட்டம்ஒன்றில் நேர்படான் நம்ஈசனே
சிவாயநம
ஆழ்ந்த விளக்கம்: வீட்டிற்க்கு புறத்தே இருந்து வீட்டினுள் இருக்கும் பொருளினைப்பற்றி கேட்டால் அறிய இயலுமோ அது போல் தான் இந்த சூத்திரத்தின் தன்மையும். புறத்தே நோக்க எழுத்தை சார்ந்த ஆத்ம கருத்தை கூறுவது போல் இருக்கலாம் ஆனால் உண்மையில் எழுத்தினைப் பற்றி கூறவில்லை எமது ஆத்ம குருவான சிவவாக்கிய பெருமான். அவர் இந்த சூத்திரத்தில் கூறியதாவது கருவினில் இருக்கும் பிண்டத்தைப் பற்றியும் அந்த பிண்டத்துள் உள்ள உயிரினைப் பற்றியும் அந்த உயிரினுள் உள்ள சிவத்தைப் பற்றியும் மிக மிக ஆழ்ந்து கூறியுள்ளார் எமது ஆத்ம குரு சிவவாக்கிய பொருமான்.
சிவாயநம
சொல் என்பது அருவமாகவும் எழுத்து என்பது அந்த அருவத்தின் உருவமாகவும் உள்ளது. தற்பொழுது வரை அதாவது நாம் அறிந்த வரை
உயிர் – அருவம் (நாம் காணாததால்),
உடல் – உருவம்,
சிவம் – அருவருவம் (சற்று நாம் உணர்வதால்).
நெட்டெழுத்து – உயிர் மற்றும் மெய் உடல்
குற்றெழுத்து – சீவன்
கொம்புகால் – ஊன்று கோல் மனம்
வல்லி – பெண்
யோனி – உற்பத்தி ஸ்தானம்
அதி அற்புதமான சூத்திரத்தின் படி
பெண்ணின் கருப்பையில் (உற்பத்தி ஸ்தானம்) சுக்கிலமும் சுரோணிதமும் இணைந்து வட்ட வடிவமாக அதாவது முட்டை வடிவாக இருந்து உருவம் வளரும். உயிர் அந்த உருவில் தங்கி உருவம் ஆகும் அப்படி சுக்கிலமும் சுரோணிதமும் இணைந்து முட்டை வடிவமாக உள்ளதை யாரும் கண்டதில்லை. முட்டை வடிவமாக இருந்த அந்த பிண்டம் உருபெற்று வளர்ந்து வெளிவந்த பின் அந்த பிண்டமான தேகத்துள் உள்ள சீவனையும் அந்த சீவனுக்குள் ஒளிந்துள்ள சிவத்தையும் அறிய இயலாது, என்று தனது மனதினை ஒன்று படுத்தி சிவத்தை அறிய வேண்டி தன் சீவனை அறிய முற்படுபவர்கள்ளால் சிவமான அந்த ஈசனை இந்த பிண்டத்ததால் காண இயலாது என்கிறார் எமது ஆத்ம குருவான சிவவாக்கிய பொருமான்.










