சுவாமிமலை இயற்கையான மலை அன்று. ஏராளமான கருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட ஒரு மாடக்கோயில்தான் சுவாமிமலை. மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கில் கருங்கற் கோயில்கள் இருப்பது பிரமிப்பூட்டும் விந்தைகளில் ஒன்றாகும்.
இங்கு மூன்றாவது பிரகாரம் மலையடிவாரத்தில் உள்ளது. இரண்டாம் பிரகாரம் கட்டுமலையின் நடுப்பாகத்திலும் முதற் பிரகாரம் கட்டுமலையின் உச்சியில் சுவாமிநாதப் பெருமானைச் சுற்றியும் அமைந்துள்ளது.
தெற்கு நோக்கிய இராஜகோபுரம் ஐந்து நிலைகள் உடையது. பெரும்பாலும் பக்தர்கள் கிழக்குப்புற மொட்டைக் கோபுரத்தின் வழியாகவே திருக்கோயிலுக்குள் நுழைகின்றனர். ஏனெனில் நுழைந்தவுடன் வல்லப கணபதியின் தரிசனம் கிடைக்கிறது.
மலைக்கோயிலின் கீழ்த்தளத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், விநாயகர் சோமாஸ்கந்தர் ,விசுவநாதர் , விசாலாட்சி , வள்ளி தெய்வானை முருகன் பிரம்மா நவகிரக சன்னதி பைரவர் தட்சிணாமூர்த்தி ஆகியோரின் சன்னதிகள் அமையப் பெற்றுள்ளன.
சுவாமிநாதனைக் காண நாம் அடுக்கு அறுபது படிகளை கடந்து மேலே ஏறிச் செல்ல வேண்டும். அறுபது தமிழ் வருடங்களின் பெயர்களைத் தாங்கி நிற்கும் அறுபது படிகளும் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன.
மேல்தளத்தில் முதலில் நமக்குக் காட்சி தருபவர் கண்கொடுத்த கணபதி என்ற விநாயகர் ஆவார். இவர் செட்டி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணிக்குக் கண்பார்வையை அருளியதால் “கண் கொடுத்த கணபதி” என்று பெயர் பெற்றதாக செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றும் , இவரை வணங்கும் பக்தர்களுக்கு நல்ல கண் பார்வையை அருளி வருகிறார்.
மேலே சென்றால் முதல் நிலை பிராகாரத்தில் வலுவாக வலது இடது இரண்டு தோரபாலகரர்கள் இடது பக்கத்தில் இடும்பன் சன்னதி வலது பக்கத்தில் அகத்தியர் அருள்பாலிக்கிறார்
மயில் வாகனம் நடுவில் இருக்க நேராக ஓம் என பிரணவ மந்திரத்தின் சரணவண பவ அப்பனுக்கு பாடம் கற்பித்த தகப்பன் சுவாமி சுவாமிநாதாசுவாமி திருகாட்சிகளை கண்டறியலாம்.










