சொளவு
சொளவை மேல தூக்கும்போது கட்டைவிரல் தவிர மற்ற நாலு விரலையும் விட்டுப் பிடிக்கணும். சொளவு மேலபோயிட்டு வர்றதுனால தானியங்களும்,
இதோடு கலந்திருக்குற கல், குச்சிகள், தேவையற்ற கழிவுகள் ஒருபக்கமும், தானியம் ஒரு பக்கமும் தனித்தனியாப் பிரிஞ்சுடும்.
நாலஞ்சு தடவ தூக்கிப் பொடச்சதும் தானியத்தைப் பரசிப் பாத்தாலே உமி, சின்னச்சின்ன கற்கள், தூசுகள் தனித்தனியாத் தெரியும். உடனே பொறுக்கி எடுத்திடணும்.
வீட்டுல உலையை வெச்சுட்டு பொறுமையா பக்கத்து வீடுகளில் கதை பேசிக்கிட்டே அரிசி பொடைப்போம். பொடைச்சு முடிக்குறதுக்குள்ள தண்ணி கொதி வந்துடும்.
அப்புறம் அரிசியை போட்டு கொஞ்ச நேரத்துல வெந்துடும். அயலாரோட பேசுன மாதிரியும் இருக்கும். வேலையும் செஞ்ச மாதிரி இருக்கும்.
கல்யாணமாகி புருஷன் வீட்டுல காலெடுத்து வெச்ச அடுத்தநாளே, என் மாமியார் சொளவைக் கொடுத்து பொடைக்க கொடுத்திட்டாங்க. கிராமத்துல ஒரு பொண்ணு துணி துவைக்கிறது,
பக்கத்து கிராமங்கள்ல உள்ளவங்களுக்கும்தான் பொண்ணுகள கல்யாணம் செஞ்சு கொடுப்பாங்க. வீட்டு வேலைகளோட, தானியங்கள அறுவடை செய்யுற வேலைகளும் இருக்கும். ஒரே நாளில் ஒரு மூட்டையை பொடைச்சு முடிக்கிற பொண்ணாத்தான் பார்த்துக் கட்டிக்குவாக.










