தமிழ்மாதங்கள் ஒவ்வொன்றில் பௌர்ணமி வருகையில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பொதுவாக தமிழ்மாதங்களில் வருகின்ற பௌர்ணமி சில நட்சத்திர நாட்களில் வருமென கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பு சில நேரங்களில் தவறுகிறது.
- சித்திரை மாதம் – சித்திரை நட்சத்திரம்
- வைகாசி மாதம் – விசாக நட்சத்திரம்
- ஆனி மாதம் – மூல நட்சத்திரம்
- ஆடி மாதம் – உத்திராட நட்சத்திரம்
- ஆவனி மாதம் – அவிட்ட நட்சத்திரம்
- புரட்டாசி மாதம் – உத்திரட்டாதி நட்சத்திரம்
- ஐப்பசி மாதம் – அசுவினி நட்சத்திரம்
- கார்த்திகை மாதம் – கிருத்திகை நட்சத்திரம்
- மார்கழி மாதம் – திருவாதிரை நட்சத்திரம்
- தை மாதம் – பூச நட்சத்திரம்
- மாசி மாதம் – மக நட்சத்திரம்
- பங்குனி மாதம் – உத்திரம் நட்சத்திரம்











