• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

திருப்பதிசாரம் ”திருவாழ்மார்பன்” திருக்கோயில்

siddharbhoomi by siddharbhoomi
February 3, 2019
in கோயில்கள்
0
திருப்பதிசாரம் ”திருவாழ்மார்பன்” திருக்கோயில்
2
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

திருப்பதிசாரம் ”திருவாழ்மார்பன்” திருக்கோயில்

நாகர்கோவிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரத்துல இருக்கும் “திருப்பதிசாரம்”ன்ற ஊரில்

அருள்பாலிக்கும் அருள்மிகு ”திருவாழ்மார்பன்” திருக்கோயில்.

இது ”திருவெண்பரிசாரம்”ன்னும் அழைக்கப்படுது.

இக்கோவில் 3000 வருடங்கள் பழமை வாய்ந்தது ன்னும் ராமாயண கால பழமை

வாய்ந்ததுன்னும் சொல்றாங்க. இது 108 வைணவ திவ்விய தேசங்களுள் ஒண்ணாம்.

இந்தகோவிலில் ராஜகோபுரம் இல்லை.  நுழைவாயிலின் மேலே ஸ்ரீதேவி- பூதேவி சமேத

நாராயணன்,  ராமன், லட்சுமணன், கருடாழ்வார் மற்றும் நம்மாழ்வார் ஆகியோரது  சிற்ப

உருவங்கள் இருக்கு. பார்க்க அழகாவும் இருக்கு.

கோவிலுக்கு உள்ளே நுழைந்ததும் கொடி மரம். அடுத்து ஆனந்த மண்டபம். இங்கு,  ராமன்

மற்றும் கருடாழ்வார் சந்நிதிகள் எதிரெதிரே இருக்கு.

ஸ்ரீராம பட்டாபிஷேகம் முடிந்து இலங்கை திரும்பும் வழியில் இங்கு வந்த விபீஷணன், சோமலட்சுமி தீர்த்தத்தில் நீராடி, திருவாழ்மார்பனை வழிபட்டாராம் .

அத்துடன்  ராம பட்டாபிஷேகத்தை மீண்டும் காணும் பாக்கியத்தைத் தருமாறும் பெருமாளிடம் வேண்டினாராம்.

அதை ஏற்று விபீஷணருக்கு,  ராமனாக நின்ற கோலத்தில் காட்சி தந்தாராம் திருவாழ்மார்பன்! எனவே, இங்கு  ராமரின் எதிரில் அனுமனுக்குப் பதிலாக கருடாழ்வார் சந்நிதி கொண்டுள்ளார்.

தவிர, விஷ்வக்சேனர் மற்றும் நம்மாழ்வார் ஆகியோர் சந்நிதிகளும் உள்ளன .அவைகளை போட்டோ எடுக்க அனுமதியில்லை.

திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளிலும்,  செல்வச்செழிப்புடனும்     இருக்க  இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்றாங்க.

இந்தத் தலத்தில் எம்பெருமானின் மார்பிலேயே உறைவதால், தாயார் கமலவல்லி நாச்சியாருக்குத் தனிச் சந்நிதி கிடையாது.

இங்குள்ள மற்றொரு சிறப்பம்சம் திருவள்ளுவர் சந்நிதி. உள்ளே மனைவி வாசுகி மற்றும் சீடர்கள் புடை சூழக் காட்சித் தருகிறார் திருவள்ளுவர். திருக்குறள் இயற்ற, அப்பனாக இருந்து வள்ளுவருக்கு அருளியவர் ஆதலால் திருவாழ்மார்பனுக்கு, ‘திருக்குறளப்பன்‘ என்ற பெயரும் உண்டு.

திருப்பதி பெருமாளுக்கு நேர்த்திக்கடன் செய்ய வேண்டிக் கொண்டவர்கள் , திருப்பதிக்கு போக முடியாத சூழலில் அதை இத்தல பெருமாளுக்கு  செய்யலாமாம். அதற்குதான் இதற்கு ”திருப்பதியினுடைய சாரம் என்பதால் ”திருப்பதிசாரம்”ன்னு பேர் வந்துச்சாம்.

இரண்யகசிபுவை கொன்ற நரசிம்மரின் உக்கிரம் தணிந்த பாடில்லை. தன் நாயகரை நெருங்க இயலாமல் தவித்த மகாலட்சுமி, தவத்தில் ஆழ்ந்தாள். அப்போதும்  நரசிம்மரின் உக்கிரம் குறைய வில்லை. தேவர்களும் செய்வதறியாது திகைத்தனர்.

அப்போது சிறுவன் பிரகலாதன் பயமின்றி பக்தி பரவசத்துடன் பெருமாளின் கீர்த்தனைகளைப் பாட… சினம் தணிந்தார்  நரசிம்மர். பிறகு, திருமகள் தவம் புரியும் இந்தத் தலம் வந்து, ‘திரு‘வாகிய அவளை தன் மார்பில் ஏற்று, திருவாழ்மார்பனாக அருள் புரிந்தார்.

எனவே, இத் தலம் ”திருப்பதிசாரம்” ஆனதாகவும் ஒரு வரலாறு உண்டாம்.

”திருவெண்பரிசாரம்”ன்னு ஏன் பேர் வந்துச்சுன்னு கேள்வி கேட்டதுக்கு, ”பரி‘ என்றால் குதிரை. ஒரு முறை குலசேகர மன்னனின் பட்டத்துக் குதிரை (வெண் குதிரை) காணாமல் போய் விட. அதை, இந்தத் தலத்தின் சோமலட்சுமி தீர்த்தக் கரையில் கண்டடைந்தாராம்.

எனவே, இந்தத் தலத்துக்கு திருவெண்பரிசாரம் என்று பெயர் (திருவாழ்மார்பனை தரிசித்த மன்னர் குலசேகரன், திருக்குளப் படித்துறை உட்பட கோயிலுக்கும் பல்வேறு திருப்பணி செய்துள்ளாராம்).

வெண் குதிரையுடன் பகவான் எடுக்கப் போகும் கல்கி அவதாரத்தின் சாரமாக திகழும் தலம் ஆதலால், ‘திருவெண்பரிசாரம்‘ எனப் பெயர் வந்ததாகவும் அங்கிருந்த பெரியவர் விளக்கம் கூறினார். 

ஆனந்த மண்டபத்தை அடுத்து மூலவர் சன்னதி.  மூலவரான ”திருவாழ்மார்பர்ன்” நான்கு கைகளுடனும், சங்கு சக்கரமேந்தி அபய ஹஸ்தத்துடன், அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார்.
ஒன்பது அடி உயரமுள்ள இவ்விக்ரகம் “கடு சர்க்கரை யோகம்’ என்ற கூட்டினால் உருவாக்கப்பட்டதாம் (கல்லும், சுண்ணாம்பும் சேர்ந்து செய்யப்பட்ட உருவத்தின் மேல், கடுகும் சர்க்கரையும் சேர்ந்த ஒருவித பசையினால் பூசப்படும் முறைக்கு கடுசர்க்கரை யோகம் என்று சொல் வார்களாம்)
அதனால் மூலவருக்கு  அபிஷேகமோ, அரளிப்பூ மாலை சார்த்துவதோ கிடையாதாம் புனுகு மட்டுமே சார்த்தப்படுகிறதாம். உற்சவருக்கே அபிஷேகம் நடைபெறுமாம் இந்தத் தலத்தில் எம்பெருமானின் மார்பிலேயே உறைவதால், தாயார் கமலவல்லி நாச்சியாருக்குத் தனிச் சந்நிதி கிடையாது

கோவிலின் வெளிபிரகரத்தை வலம்வந்து,  மூலவருடைய கோபுர தரிசனம் முடிந்து, ஆனந்த மண்டபத்தின் கலை வேலைப்பாடுகளையும், தூண்களில் உள்ள சித்திரங்களையும், அனுமன் சிலையையும் வணங்கி

இந்த நரசிம்ம மூர்த்தியை வழிபட்டு,அருள் பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் ”திருவாழ்மார்பன்”. இத்தல மூலவர் நரசிம்மரின் பெயரையே தனதாக்கிக் கொண்டவர். இவரின் மகள், உடையநங்கைக்கும்,  திருக்குறுங்குடியை சேர்ந்த ”காரி” என்பவருக்கும் திருமணம் நடந்தேறியது.
இல்லறம் இனிதே நடந்தது. ஆனால், குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. இருவரும் குழந்தை வரம் வேண்டி இந்தத் தலத்தில்41 நாட்கள் விரதம் அனுஷ்டித்தனர்.
இதன் பலனாக அவர்கள் பெற்றெடுத்த குழந்தையே நம்மாழ்வார்.தமிழர் முறைப்படி மகப்பேறுக்காக தாய் வீடான திருவண்பரிசாரத்துக்கு அனுப்பப்பட்டாள்.
வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பவுர்ணமி திதியில் நம்மாழ்வார் இவ்வுலகிலே அவதரித்தாராம திருப்பதிசாரம் நம்மாழ்வாரின் அவதார தலமாகவும், ஆழ்வார் திருநகரி அவர் ஞானம் பெற்ற ஸ்தலமாகவும் சொல்லபடுகின்றன .
சைவ- வைணவ ஒற்றுமைக்குஎடுத்துக்காட்டாக இந்தக் கோவில் விளங்குது. இதன் மேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில், பழையாற்றங்கரையில் உள்ள தலம் ஜடாயுபுரம்.  ராவணனால் வெட்டப்பட்ட ஜடாயுவின் இறக்கை விழுந்த பூமி.
 
 இங்கு, ஜடாயுக்கு மோட்சம் அளித்த  ராமபிரான், ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம். இந்த சிவலிங்கத் திருமேனிக்கு ‘ராமலிங்க ஸ்வாமி‘ என்று பெயர்.
வருடந்தோறும் சித்திரை இக்கோயிலில் திருவிழா நடைபெறுமாம்.இதன் 5-ஆம் நாளன்று நடைபெறும் வெள்ளி கருட சேவை மற்றும் ‘அத்தான்- மைத்துனன் (சிவன்- திருமால்) சந்திப்பு வைபவம் சிறப்பாக நடை பெறுமாம். 
Previous Post

இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது

Next Post

அமாவாசையும் வாழைக்காயும்

Next Post
Amavasan and banana

அமாவாசையும் வாழைக்காயும்

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »