மேஷம்
உங்கள் ராசிக்கு ஐந்தாம் அதிபதியான சூரியன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார்
உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் படித்து முடித்துவிட்டு வேலை தேடுபவர்களுக்கு
வேலை கிடைக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீடு
நிலம் போன்றவற்றில் முதலீடுகள் அதிகரிக்கும். 22ஆம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு
வருகிறார் பூர்வீக சொத்துகள் கிடைக்கும். டென்சன் அதிகரிக்கும் குறைத்துக்கொள்வது நல்லது.
பேச்சில் இனிமையை கடைபிடியுங்கள். உங்கள் ராசிக்கு 3,6க்குடைய புதன் உங்கள் ராசிக்கு
ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் 6ஆம் தேதி பத்தாம்
இடத்திற்கு வருவதால் படித்த படிப்புக்கு தக்கவாறு வேலை கிடைக்கும். ஷேர் மார்க்கெட்
முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும் 24ஆம் தேதிக்கு மேல் தாய் மாமனுக்காக செலவுகள்
அதிகரிக்கும்.
குரு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத பண வரவு உண்டாகும், மனக் குழப்பத்தை
தவிர்க்கவும். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண் உறவினர்களால் மனகஷ்டம்
உண்டாகும்15ஆம் தேதிக்கு மேல் ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் எல்லா பிரச்சினைகளுக்கும்
தீர்வு கிடைக்கும்.
உங்கள் ராசிக்கு 10,11க்கு அதிபதியான சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார்
பரம்பரையாக செய்துவரும் சிறப்படையும், மூத்த சகோதரர்களால் நன்மை உண்டாகும். ராகு
உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் நன்கு கவனமாக படிக்க வேண்டும்.
கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செய்யும் முயற்சிகள் அனைத்தும்
வெற்றியடையும். இந்த மாதம் தினசரியும் சூரியனை வணங்கி வேலைகளை தொடங்கினால்
வெற்றி நிச்சயம். தை 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை சந்திராஷ்டமம் இருப்பதால்
கவனமாக இருக்கவும். இரண்டு நாட்கள் மவுன விரதம் இருப்பது நல்லது.










