நம் உடலை அறிவோம் ஆரோக்கியம் பெறுவோம் தொடர் – 2
சித்தர் பூமியின் வாசக அன்பர்களுக்கு வணக்கம். இந்த தொடரில் நாம் பார்க்க இருப்பது நமக்கு
ஏன் சளி பிடிக்கிறது. சளி பிடித்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம்.
இந்த உலகத்தில் நம்பர் ஒன் மருத்துவர் யார் தெரியுமா? நம் உடல்தான்.
இவர் ஒருவர்தான் அனைத்து துறைகளிலும் வல்லுனர் என்பதை மனதில் நன்றாக பதிய
வைத்துக்கொள்ளுங்கள். இவரால் குணப்படுத்த முடியாத நோய்களே கிடையாது (விபத்துக்களால் ஏற்படும் காயங்கள் தவிர்த்து). நம் மருத்துவரின் மகிமை தெரியாத நாம்தான் வெளியில் உள்ள மருத்துவரை அணுகி சளித் தொந்தரவிலிருந்;து தற்காலிக நிவாரணம் பெறுகிறோம்.
தொடர்ந்து சளித் தொல்லையால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருந்த நீங்கள் வெளி மருத்துவரை அணுகியவுடன் எப்படி சளித் தொல்லையிலிருந்து விடுபட்டீர்கள் என்பதை ஒரு உதாரணத்துடன் பார்க்கலாம். நம் வீட்டின் மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டி உள்ளது.
அதில் நாம், மின் மோட்டார் மூலம் தண்ணீரை நிரப்புகிறோம். என்ன நிகழ்கிறது தண்ணீர்; நிரம்பியவுடன் தொட்டியிலிருந்து தண்ணீர் வெளியேறுகிறது. ஏனெனில் அதன் கொள்ளளவு அவ்வளவுதான்.
அதன் கொள்ளளவைத் தாண்டும் பொழுது அவை வெளியேறுகிறது இதற்காக நாம் கவலைப்படாத போது, நம் உடலில் தேங்கி உள்ள அதி;கப்படியான குப்பை வெளியேறும் போது மட்டும் ஏன் நடக்கக் கூடாத ஒன்று நடந்து விட்டதாக எண்ணிக்கொண்டு அதை தடுக்க நினைக்கிறோம் என்பது தான் படித்த படிக்கதாத மக்களின் அறியாமையாக உள்ளது.
இந்த உண்மையை புரிந்து கொள்ளாத நாம் என்ன செய்கிறோம் தெரியுமா?
உடனே அருகிலுள்ள மருத்துவரை அணுகி பிரச்சனையை தெரிவிக்க, மருத்துவரும் அதன் உண்மை தன்மை அறியாமல் அவற்றை நிறுத்த மருந்து கொடுத்து இருமலை நிறுத்தி விடுகிறார்.
இதானல் வெளியேற வேண்டிய குப்பைகள் வெளியேறாமல் உள்ளேயே தங்கி விடுகிறது. இதன் விளைவு, ஆஸ்துமா சைனஸ் வீசிங் டி.பி கேன்சர் என நோயை அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.
அன்பர்களே நமது சுவாச உறுப்பான நுரையீரலில் குப்பைகள் சேரும் பொழுது நமது உடலிலுள்ள மருத்துவர் முதலில் அதை தும்மல் மூலம் வெளியேற்ற முயற்சி செய்வார். எனவே நாம் நன்றாக தும்புவதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
தும்மல் மூலம் குப்பைகள் சரியாக வெளியேறாத பட்டத்தில் மூக்குச் சளி மூலம் வெளியேற்ற முயற்சி செய்வார், எனவே நாம் சளி வெளியேற நம் உடலுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
அதுவும் முடியாத பட்டத்தில் இருமல் மூலம் நெஞ்சு சளியை வெளியேற்ற முயற்சிப்பார் இந்த தருணத்தில் நம் முன்னோர்கள் சொல்லி வைத்த சின்ன வெங்காயம்,
தூதுவளைக்சீரை, துளசி, கற்பூரவல்லி, மிளகு, முட்டைக்கோஸ் போன்றவற்றை உணவுடன் சேர்ந்துண்ண படிப்படியாக சளி வெளியேறி உடல் சளியிலிருந்து பூரணமாக குணமாகும்.
தயவுசெய்து சளி இருமலுக்கு மாத்திரை மருந்து மூலம் தடை போடாதீர்கள். சளி என்பது நமது நுரையீரலை சுத்தப்படுத்த நமது உடல் செய்யும் ஒரு இயற்கை மருத்துவம் ஆகும்.
அதை ஆனந்தமாக வரவேற்று அதற்கு ஒத்துழைப்பு கொடுங்கள் ஆரோக்கியமாக வாழுங்கள். நம் உடலை அறிவோம் ஆரோக்கியம் பெறுவோம் நன்றி அனபர்களே,
அடுத்த தொடரில் சந்திப்போம்…










