நீங்கள் வாழப் பிறந்திருக்கிறீா்கள். வாழ்வை அனுபவித்து வாழவேண்டும்.
அதற்குத் தடையாக உள்ள கஷ்டங்களையும், பிரச்சனைகளையும், வேறுவிதமான
சூழல்களையும் நீக்கி,
எல்லாவற்றிலூம் சம்பூரணமாக வாழ வேண்டும் என்பதே பாபாவின் விருப்பம்.
பாபாவின் விருப்பம் உங்கள் வாழ்க்கையில் நடை முறைக்கு வரவேண்டும் என்றால்
பாபா உங்கள் மனதில் இருக்க வேண்டும்.
பாபா என் மனதில் இருப்பதை எப்படி அறிந்துக் கொள்வது எனக் கேட்கலாம்.
எந்த மனதில் அமைதியும் சாந்தமும் நிலவுகிறதோ,
எந்த மனம் எப்போதும் அன்பினால் நெகிழ்கிறதோ,
எந்த மனம் எப்பொழுதும் பொறுமை காக்கிறதோ,
எந்த மனம் அனைத்தையும் சகிக்கிறதோ அந்த மனத்தில் பாபா இருக்கிறார்.
சில நேரங்களில் கஷ்டம் கலங்கச்செய்யும், வேதனை திகைக்க வைக்கும்.
பிரச்சனைகள் மூழ்கடிப்பது போலத் தெரியும். ஆனால் திகைக்க கூடாது.
எதையும் முன் ஜென்மத்து வினை என எடுத்துக் கொண்டு,
இனி வரும் நாட்களில் நாம் நன்றாக இருப்பதற்காக இந்த நிலையை பாபா தருகிறாா் என ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மனநிலை மற்றும் மாறுதல்களுக்கு மவுனசாட்சியாக இருப்பவன் இறைவன்.
பாபா எனக்கு எதையும் செய்ய வில்லை எனக் கதறி அழுத நாட்கள் உண்டு.
அழுத நாட்கள் முடிந்துபோகும், ஆனந்தமான காலம் உங்களுக்காக காத்திருக்கிறது.
மரம் இலைகளை உதிர்க்க ஆரம்பித்து மொட்டையாகி நின்றால், மரம் பட்டுவிட்டது
என நாம் பதறுவதில்லை.
இது இலையுதிர்க் காலம், இனி வசந்த காலம் வரும் என்பதை நினைத்துக்
காத்திருப்போம்.
அப்படியே இந்த துன்ப நாட்கள் முடிவுக்கு வந்து உங்களுக்கு இன்பம் சேரப் போகிறது.
அன்றைக்கு நீங்கள் தகுதியாக இருப்பதற்காக இந்தக் கஷ்டம் என்ற பயிற்சி அளிக்கப்
படுகிறது.
பாபா எப்படி முழுமையானவரோ அப்படியே நீங்களும் முழுமையான தன்மை
உடையவர்கள்.
அவரே முழுமையை நோக்கி உங்களை அழைத்துச் செல்வார்.
ஓம் ஸ்ரீ சாய் ராம்…









