நீங்க ஒரு கெஸ்ட் ஆ ஒரு வீட்டுக்கு போனா.
1. பூ பழங்கள் ஸ்நாக்ஸ் ஏதோ ஒண்ணு வாங்கிட்டு போங்க. சின்ன பிள்ளைகளுக்கு சாக்லேட் கூட.. அது நல்லா இருக்கும்.
2. போனதும் வெளியே பார்க்க பெரிய வீடோன்னு நினைச்சேன் உள்ள வந்தா சின்ன வீடா தெரியுது. அப்படி ன்னு வீடை குறை சொல்ல ஆரம்பிச்சிடாதீங்க. அவங்க அவங்க சக்திக்கு தான் வீடு இருக்கும்.
3. நீங்க சுத்த பைத்தியமா இருக்கலாம். எல்லாரும் அப்படி இருப்பாங்க ன்னு எதிர்பார்க்காதீங்க. துணி எல்லாம் மடிச்சு வைக்கலியா அப்படி அப்படியே கிடக்குதே ன்னு ஆரம்பிக்காதீங்க.
4. அப்பறம் முக்கியமான விஷயம் சாப்பிடும் போது அது பிடிக்காது இது பிடிக்காது என்று வைப்பதற்கு முதலிலேயே சொல்லிடுங்க முடிந்த வரை வேஸ்ட் பண்ணாதீங்க சாப்பாட்டை.
5. ரசம் இல்லை யா தயிர் இல்லை யா அது இல்லை யா இது இல்லை யா என்று சங்கடப் படுத்தாமல், கூட வந்த மச்சானுக்கு கறி எடுத்தா.. வறுவல் எடுத்தா.. என்று பக்கத்து இலை பாயாசமாக தனக்கு வாங்கி அயிட்டத்தை காலி பண்ணாமல் அமைதியாக போட்டதை சாப்பிட்டு கெளம்புங்க.
6. சொன்ன ஆள் மட்டுமே போங்க. எக்ஸ்ட்ரா வா அஞ்சு பத்து பேர் தப தப ன்னு போய் சர்ப்ரைஸ் கொடுக்கிறோம் பேர்வழி ன்னு சாப்பாடு ரெடி பண்ணவங்க சாப்பாட்டையும் வழித்து சாப்பிட்டு வீட்டுக்காரவங்கள பட்டினி போட்டு வந்துறாதீங்க.
7. அப்பறம் சாப்பாடு நேரத்துக்கு இன்ஃபார்ம் பண்ணாம போகாதீங்க. நீங்க சாப்பாட்டுக்காக போகலன்னாலும் வீட்டுக்காரவங்களுக்கு அய்யோ எதுவும் போட முடியலயே என்று ரொம்ப வருத்தமா இருக்கும் நல்ல மனசுக்காரங்களா இருந்தாங்க னா.











