• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

பரமஹம்ஸ யோகானந்தரின் யோக ஆற்றல்.

siddharbhoomi by siddharbhoomi
September 17, 2018
in ஆன்மிகம்
0
பரமஹம்ஸ யோகானந்தரின் யோக ஆற்றல்.
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

பரமஹம்ஸ யோகானந்தரின் யோக ஆற்றல்.

‘ஆட்டோபயாகிராபி ஆஃப் எ யோகி’ என்ற உலகப் பிரசித்தி பெற்ற நூலை எழுதிய

பரமஹம்ஸ யோகானந்தர் (1893-1952) 1952ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி மஹா சமாதி

அடைந்தார்.

அவரது உடல் இருபது நாட்கள் கழித்து மார்ச் 27ம் தேதி வெங்கல மூடியிட்ட

பேழையில் வைக்கப்பட்டது. அதுவரை அந்த உடலில் எந்த வித மாற்றமும் இல்லை.

லாஸ் ஏஞ்சலீஸைச் சேர்ந்த ஃபாரஸ்ட் லான் மெமோரியல் பார்க்கின் மார்ச்சுவரி

டைரக்டர் ஹாரி டி ரோ, “பரமஹம்ஸ யோகானந்தரின்

இறந்த உடலில் சிதைவுக்கான எந்த வித அறிகுறிகளும் தோன்றாதது எங்கள்

அனுபவத்திலேயே மிகவும் அசாதாரணமான ஒன்றாக விளங்குகிறது.

உடல் தோலிலோ அல்லது திசுக்களிலோ எந்த வித மாற்றமும் இல்லை! இது போன்று மாறாமல் இருக்கும் ஒரு உடல் எங்கள் சவக் கண்காணிப்பு வரலாறிலேயே இல்லாத இணையற்ற ஒரு சம்பவம்! நாளுக்கு நாள் எங்கள் வியப்பு கூடிக் கொண்டே போனது” என்று குறிப்பிடுகிறார்!

பரமஹம்ச யோகானந்தா தன் உடலை விடும்பொழுது, அவர்முன் 700 பேர்
இருந்தனர். அமெரிக்காவில், போஸ்டன் நகரில், அவர் மஹாசமாதி அடைந்தார். தான் உடலை விடும் முன்பே, ‘நான் உடலை விடப்போகிறேன்’ என்று அவர் அறிவித்திருந்ததால், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் என பலரும் அங்கே வந்து
அமர்ந்திருந்தனர். வந்தவர்களுடன் சிறிது நேரம் பேசியிருந்துவிட்டு, ‘இப்போது என்
உடலை நான் விடப்போகிறேன்’ என்று சொல்லி, பத்மாசனத்தில் அமர்ந்து, தன்
உடலை நீத்தார்.

மருத்துவர்கள் எத்தனை சோதனை செய்தாலும் அவர்களுக்கு புலப்படாத ஒரு
விஷயமிது. ஏனெனில், மருத்துவ அறிவியலைப் பொருத்தவரை, உடலில்
ஏதேனும் சிதைவு ஏற்பட்டு, உடல் இயங்க முடியாத நிலையில் மட்டுமே உயிர் பிரியும்
என்று நம்பப்படுகிறது. இதயமோ, நுரையீரலோ, வேறு எதோ ஒன்று கெட்டுப்போனால் உயிர் நீங்கும் என்பது அவர்களது நம்பிக்கை. நன்றாக, ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர், ‘இப்போது நான் போகப்போகிறேன்’ என்று சொல்லிவிட்டு, தன் உடல் நீப்பதை அவர்கள் எங்கும் பார்த்திருக்கவில்லை.

அதுமட்டுமில்லை, பரமஹம்ச யோகானந்தா
உடலை விடும்போது, ‘இந்த உடல் 33
நாட்களுக்கு அழிந்து போகாது. நீங்கள்
அப்படியே வைத்துக் கொள்ளலாம்’ என்று
சொல்லிவிட்டு உடலை நீத்தார். உடலில்
தேவையான அளவிற்கு ‘வியானப்
பிராணா’வை அவர் தக்கவைத்துச் சென்றதால், அத்தனை நாட்களுக்கு உடல் நன்றாக இருக்கும். இதைச் செய்வதற்கு அவருக்கு எவ்வித அவசியமும் இல்லை. ஆனால், அவர் உயிரோடு இருக்கும்போது, காரண அறிவை மட்டுமே பயன்படுத்தும் மனிதர்கள் பலர், அவருக்கு அதிகளவில் தொல்லைகள் தந்தனர்.
அதனால் போகும்போது, அவர்களுக்கு
கொஞ்சம் விளையாட்டுக் காட்டிவிட்டுச்
செல்லலாம் என்று அவர் முடிவு செய்தார்.

காரண அறிவை மட்டுமே பயன்படுத்தி
அவரைப் பற்றி இல்லாததை எல்லாம் பேசிய
விஞ்ஞானிகளுக்கு, புரியவைத்துப் போகலாம் என்றெண்ணி, 30 நாட்கள் உடல் அப்படியே இருக்கும், அனைத்து சோதனைகளையும் நன்றாக செய்யுங்கள் என்று சொல்லி, உடலை விட்டுப் போனார் அவர்.
ஒவ்வொரு யோகியும் தன் உடம்பை கை
விடும் நிலை தனித்துவமானது. மகா சமாதி
என்றழைகப்படும்.
கபீர் மறைந்த இடத்தில வெறும் ரோஜா
பூக்களே இருந்தன.

ரமணர் மறைந்த பொழுது ஒரு ஒளி தோன்றி
திருவண்ணமலையில் மறைந்தது.
பிரம்பு கூடைக்குள் புகுந்து கடற்கரையோர
சிறுவர்களுக்கு விளையாட்டு காட்டிய
பட்டினத்தார் அந்த கூடைக்குள்ளிருந்தே
மறைந்து போனார். அடையாளம் அழித்து
பூரணமான அவரின் அடையாளமாக, அவர்
இருந்த இடத்தில ஒரு சிவ லிங்கம்
இருந்தது….

ரமண மஹரிஷியிடம் பரமஹம்ஸ
யோகானந்தரின் கேள்வி ?
‘ஆடோபயாகிராபி ஆஃப் தி யோகி’– என்ற
உலகப் பிரசித்தி பெற்ற நூலை எழுதியவரும்
கிரியா யோகத்தை அமெரிக்காவிலிருந்து
உலகெங்கும் பரப்பியவருமான பரமஹம்ஸ
யோகானந்தர் ரமண மஹரிஷியை
(29-11-1935 அன்று) சந்தித்தார்.மக்களிடம்
ஆன்மீக முன்னேற்றத்தை எப்படி எழுப்புவது
என்ற அவர் சந்தேகத்திற்கு
ஒவ்வொருவருடைய ஆன்மீக முனேற்றத்திற்கு தக்கபடி அவரவருக்கேற்றபடி குறிப்புகளை
வழங்க வேண்டும் என்று தெளிவு படுத்தினார் ரமணர். துன்பத்தைப் போக்க யோகம் மதம் ஆகியவை உதவுமா என்ற அவர் கேள்விக்கும் அவை துன்பத்தைப் போக்க உதவும் என்று தெளிவு படுத்தினார்.

நான் ஏந்தவித. ஆன்மீக. முன்னேற்றமும்
அடைய முடியதாபடி தவறுகளின் வலையில் மிகவும் ஆழ்ந்து சிக்கியுள்ளேன்,’ என்று ஒரு சீடர் பரமஹம்ஸரிடம் வேதனையுடன் மனம்
திறந்தார்.,”எனது தீய பழக்கங்கள்., நான்
அவற்றை எதிர்த்துப் போராடும் எனது
முயற்சிகளில் நான் சோர்ந்து போகும்
அளவிற்கு வலிமை வாய்ந்தவையா ?

குருதேவர் கூறினார்,:
தீய பழக்கங்களுடன் போராடுவதற்கு
இன்றைய தினத்தைக் காட்டிலும்,நாளை
நீங்கள் அதிக சாமர்த்திசாலியாக முடியுமா,?
நேற்றைய தவறுகளுடன் இன்றைய
தவறுகளை ஏன்சேர்த்துக்கொள்ளவேண்டும்?
எப்பொழுதாவது நிங்கள்இறைவன் பக்கம்
திரும்பத்தான் வேண்டும்.
ஆகவே இப்பொழுதே அதைச்செய்வது மிக்க
நன்றுஅல்லவா? உங்களையே அவனுக்கு அளித்துவிட்டு ,”இறைவன்,பொல்லாதவனோ, அல்லது நல்லவனோ,நான் உனது குழந்தை.நீ தான் என்னைப்பேணிக் காக்க வேண்டும்.’எனக் கூறுங்கள்.

நீங்கள் முயற்சி செய்துகொண்டே இருந்தால்
நீங்கள் முன்னேற்றமடைவீர்கள. முயற்சியை
ஒருபோதும் கைவிடாத ஒரு பாவியே
ஞானியாவான்..

பரிட்சையில் பாஸ் செய்ய வைத்த குருநாதர்
யோகானந்தருக்கு படிப்பில் சிறிதும் ஆர்வம்
இருக்கவில்லை. ஆனால் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி
ஒரு பட்டப்படிப்பு அவசியம் என்று வலியுறுத்தி படிப்பை யோகானந்தர் நிறுத்தி
விடாமல் பார்த்துக் கொண்டார். கல்லூரிப்
படிப்பு ஆன்மிகத்திற்கு சம்பந்தம் இல்லாமல்
இருந்ததால் அப்படிப்பு வேம்பாக
யோகானந்தருக்கு கசந்த போதிலும் குருவின் வற்புறுத்தலுக்காகக் கல்லூரிக்குப் போய் வந்தார்.
யோகானந்தர் அடிக்கடி குரு தங்குமிடத்திற்குப் போய் ஒருசில நாட்கள் தங்கி சேவை செய்து விட்டு வருவார். ஒரு முறை ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி தன் ஆசிரமத்தில் ஒரு ஆன்மிக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த நிகழ்ச்சிக்கு பக்தர்கள் நாட்டின் பல
பாகங்களில் இருந்தும் வந்திருந்தார்கள்.
அதிகாலை ஆரம்பித்து இரவு வரை பஜனை,
ஆன்மிகச் சொற்பொழிவு, சங்கீதம் முதலான
நிகழ்ச்சிகள் இருந்தன. அதில் எல்லோரும்
உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள்.
அத்தனை பேருக்கும் சமையல், பரிமாறுதல்,
உபசரிப்பு வேலைகள் எல்லாம்
யோகானந்தருக்கும், மற்ற சீடர்களுக்கும்
இருந்தன. சமையலும், பாத்திரங்கள்
கழுவுவதுமாகவே முழு நாள் வேலை
இருந்ததால் யோகானந்தரால் அந்த
நிகழ்ச்சிகளில் கூடக் கலந்து கொள்ள
முடியவில்லை. ஆனாலும் தனக்குக்
கொடுக்கப்பட்டிருந்த வேலையை
யோகானந்தர் மகிழ்ச்சியாகவே செய்தார்.

வெளியூரில் இருந்து வந்தவர்கள் எல்லாம்
தங்கள் ஊருக்கு பஸ்களிலும் ரயில்களிலும்
செல்லக் கிளம்பிய பிறகு களைத்துப் போய்
யோகானந்தர் படுக்கச் சென்றார்.
ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியும் படுத்து விட்டார்.
ஆனால் சில நிமிடங்களிலேயே அவர் எழுந்து
விட்டதைப் பார்த்து ஆச்சரியப்பட்ட
யோகானந்தர் “ஏன் எழுந்து விட்டீர்கள்
குருவே?” என்று கேட்டார்.

”இன்று வந்த நண்பர்களில் சிலர் ரயிலைத்
தவற விட்டு விட்டார்கள். அவர்கள் பசியோடு
வருவார்கள். அவர்களுக்காக சமைக்க
வேண்டும். அதனால் தான் எழுந்தேன்” என்று
ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னார்.
யோகானந்தருக்கு அந்த நண்பர்கள் ரயிலைத் தவற விட்டாலும் திரும்பவும் அந்த நள்ளிரவு நேரத்தில் ஆசிரமத்திற்கு வருவார்கள் என்று தோன்றவில்லை. அதை வெளிப்படையாக அவர் குருவிடம் சொன்னார்.

“அவர்கள் வருவார்கள். நீ இன்று நிறைய
வேலைகள் செய்து களைத்துப்
போயிருக்கிறாய். அதனால் உறங்கு. நான்
சமைக்கிறேன்” என்று சொல்லிஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சமையலறைக்குச் சென்றார்.

களைத்துப் படுத்திருந்த மற்ற சீடர்களையும்
அவர் எழுப்ப விரும்பவில்லை. என்னவொரு
உயர்ந்த உள்ளம் பாருங்கள்! தன் குரு வேலை செய்யும் போது படுத்திருக்க மனம் வராமல் யோகானந்தரும் சமையலறைக்குச் சென்றார். இருவரும் சேர்ந்து எளிய உணவு சமைத்தார்கள். ஸ்ரீயுக்தேஷ்வர்கிரி சொன்னது போலவே அந்த அன்பர்கள்
ரயிலைத் தவற விட்டு சிறிது நேரத்தில்
ஆசிரமத்திற்கே திரும்பி வந்தார்கள்.

அவர்களை வரவேற்க விரைந்த
யோகானந்தரிடம் அவர்கள் “தொந்திரவுக்கு
மன்னியுங்கள் அன்பரே. ரயிலைத் தவற விட்டு விட்டோம். ரயில் நேரம் பற்றி நாங்கள்
குறித்துக் கொண்டது தவறாக இருந்திருக்கிறது” என்று சொன்னார்கள்.
“பரவாயில்லை வாருங்கள். நீங்கள் பசியோடு
வருவீர்கள் என்று நம் குருநாதர் உங்களுக்காக சமைத்தும் வைத்திருக்கிறார். வாருங்கள். பசியாறுங்கள்” என்று சொன்ன போது அந்த அன்பர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

பசியோடு இருந்த அவர்கள் குரு சமைத்த
ருசியான உணவை உண்டு மகிழ்ந்தார்கள்.
எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் தன்
சீடர்களுக்கும், பக்தர்களுக்கும் கூடச் சேவை
செய்யும் குருவின் அருகிலேயே இருப்பதில்
ஆர்வம் கொண்டிருந்த யோகானந்தருக்கு
பரிட்சை நெருங்கும் போது தான் அது குறித்த
பயம் வந்தது.

பரிட்சைக்கு ஐந்தே நாட்கள் இருந்த போது
அவர் ஸ்ரீயுக்தேஷ்வர் கிரியிடம் சென்று இந்த
முறை பரிட்சை எழுதப் போவதில்லை என்று
தெரிவித்தார். ஏன் என்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி
கேட்ட போது “நான் ஒன்றுமே படிக்கவில்லை.
இனி படிக்க ஐந்து நாட்கள் போதவே போதாது” என்று யோகானந்தர் தெரிவித்தார்.

“நீ பரிட்சை எழுதாவிட்டால் எனக்கும் சேர்த்து
தான் கெட்ட பெயர் வந்து சேரும். உன் வீட்டார்
நான் தான் உன்னைப் படிக்க விடாமல் செய்து விட்டேன் என்று ஏசுவார்கள். அதனால் கண்டிப்பாக பரிட்சை எழுது.” என்று
ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சொன்னார்.

“எழுதி என்ன பயன்? நான் தான் ஒன்றும்
படிக்கவில்லையே. நான் எழுதுவதானால்
எல்லா பரிட்சைகளிலும் உங்கள் அருமை
பெருமைகளைப் பற்றியும் உங்கள்
உபதேசங்களைப் பற்றித் தான் எழுத
வேண்டும்” என்றூ யோகானந்தர் சொன்னார்.
ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி சிரித்துக் கொண்டே
“முடிந்த வரை படி. பரிட்சை முடிகிற வரை
இங்கே வராதே. படிப்பில் கவனம் செலுத்து. நீ
சோம்பலால் படிக்காமல் இருந்து விடவில்லை.

ஆன்மிக ஆர்வம் காரணமாகவே நீ படிக்க
முடியாமல் போயிருக்கிறது. அதனால்
கவலைப்படாதே” என்று சொன்னார்.
யோகானந்தர் சரியென்றார். ஒரு நிமிட
மவுனத்திற்குப் பின் ”உன் வகுப்பில் மிக
நன்றாகப் படிக்கும் ரமேஷ் சந்திர தத்தின்
உதவியை நாடு.” என்று ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி
சொன்னார். ரமேஷ் சந்திர தத் அந்தக் கடைசி
நேரத்தில் போனால் உதவுவானா என்ற
இயற்கையான சந்தேகம் வந்த போதும்
சரியென்று சொல்லி விட்டு யோகானந்தர்
சென்றார்.

ரமேஷ் சந்திர தத் யோகானந்தரை
வரவேற்றான். ஆனால் வருடம் முழுவதும்
படிக்காமல் கடைசி ஐந்து நாட்களில் ஒரு
சப்ஜெக்ட் மட்டுமல்லாமல் அனைத்து
சப்ஜெக்ட்களும் படிக்க உதவுவது என்பது
அந்த மாணவனையும் மலைக்கத் தான்
வைத்தது. ஆனாலும் ஒவ்வொரு
சப்ஜெக்டிலும் முக்கியமான கேள்விகளாகத்
தேர்ந்தெடுத்து யோகானந்தருக்கு முடிந்த
வரை விளக்கினான்.

முதலிரண்டு சப்ஜெக்ட்களில் அவன்
தேர்ந்தெடுத்த முக்கியக் கேள்விகள் அந்தந்த
பரிட்சைகளில் பாஸ் ஆகும் அளவு
வந்திருந்தன. யோகானந்தருக்கு மகிழ்ச்சி
தாங்கவில்லை. ரமேஷ் சந்திர தத் சொன்னதை நினைவு வைத்துக் கொண்டிருந்ததை எழுதினார்.

ஆங்கில இலக்கியப் பரிட்சையில் அதே போல் கேள்விகள் வந்திருந்த போதும் ஒரு பெரிய தவறை யோகானந்தர் செய்தார். அந்த
வினாத்தாளில் A அல்லது B, Cஅல்லது D
கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என்று இருந்தது. யோகானந்தர் அதைக் கவனிக்காமல் ஏதோ இரண்டு எழுத வேண்டும் என்று எண்ணி A Bஇரண்டு வினாக்களையும் எழுதி விட்டு C
D இரண்டு வினாக்களையும் எழுதாமல் விட்டு
விட்டார். அதை பரிட்சை முடிந்து வெளியே
வந்த பிறகு தான் அவர் உணர்ந்தார்.

இந்தத் தவறால் அவருக்குப் பாஸாக குறைந்த பட்ச மதிப்பெண்களுக்கும் குறைவாகவே கிடைக்கும் என்பது உறுதியாகத் தெரிந்தது.

தன் குருவின் அருளால் தெரிந்த கேள்விகளே
வந்தும் கவனக்குறைவால் இப்படி தவறு
இழைத்து விட்டோமே என்ற குற்ற உணர்வுடன் அவர் குருவிடம் ஓடோடி வந்து நடந்ததைத் தெரிவித்தார்.

ஸ்ரீயுக்தேஷ்வர் கிரி “கவலைப்படாதே. நீ
இந்தப் பரிட்சையில் பாஸ் ஆவது
உறுதி”என்று சொல்லி விட்டார்.
கடைசி பரிட்சையான வங்காள மொழிப்
பரிட்சையில் இரண்டு பெரிய கேள்விகளுக்குப் பக்கம் பக்கமாக பதில் எழுத வேண்டும். எந்தக் கேள்வி கேட்பார்கள் என்று அனுமானிக்க முடியாத அளவு கேட்க நிறைய விஷயங்கள் இருந்தன. ரமேஷ் சந்திர தத், விதயாசாகர் என்கிற வங்காள சமூகம், மற்று கல்வி சீர்திருத்தவாதி ஒருவரைப் பற்றிய விவரங்களைச் சொன்னான். மறு நாள் பரிட்சையில் அவர் பற்றியே ஒரு கேள்வி இருந்தது. இரண்டாவது கேள்வி பொதுவானதாக இருந்தது”உன்னை மிகவும் கவர்ந்த ஒரு உயர்ந்த மனிதரின் வாழ்க்கையைப் பற்றி எழுது”. முதல் கேள்விக்கு ரமேஷ் சந்திர
தத் சொன்னதையும், இரண்டாவது
கேள்விக்குத் தன் குருவான ஸ்ரீயுக்தேஷ்வர்
கிரி பற்றியும் பக்கம் பக்கமாய் எழுதிய
யோகானந்தருக்குத் தன் குருவிடம் ஆரம்பத்தில் “உங்களைப் பற்றித் தான் எழுத வேண்டும்” என்று சொன்னதும் பலித்தது குறித்து அவருக்குப் பரம சந்தோஷம்.
ஆங்கிலப் பாடத்தின் குறைந்த பட்ச
மதிப்பெண்ணை அந்த முறை அரசாங்கம்
திடீரென்று குறைக்க யோகானந்தர் அது உட்பட எழுதிய அனைத்து பரிட்சைகளிலும்
சித்தியடைந்தர்.

Previous Post

புரட்டாசி சனிக்கிழமை ரகசியம்

Next Post

குளிக்கும் முறை..!

Next Post
குளிக்கும் முறை..!

குளிக்கும் முறை..!

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

March 1, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »