புத்தாண்டு பலன்கள் 2018 – கன்னி ராசி
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2018-ல் அடி எடுத்து வைக்கும் கன்னி ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம்.
இந்த புத்தாண்டில் சென்ற ஆண்டில் இருந்த பணப்பிரச்னைகள் குறைந்து பொருளாதார நிலை மேம்படும். பண வரவால் வீட்டில் பொருள் சேர்க்கை உண்டு.
அடிப்படை வசதி, வாய்ப்புகள் பெருக வழி தேடிக்கொள்வீர்கள். குடும்ப வருமானம் உயரும். குறிப்பாக இந்தாண்டு மனநிறைவும், மனமகிழ்ச்சியும் கிடைக்கும்.
சனி பகவான் சாதகமற்ற நிலையில் இருப்பதால் எதிலும் எச்சரிக்கை தேவை, முக்கியமாக உடல் நலத்தில் கவனம் தேவை.
குடும்பத்தினரின் உடல் நலத்திலும் கவனம் தேவை. மருத்துவ செலவு கட்டுப்படுத்த முடியாதபடி இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் நடைபெறும்.
எதிர்பார்த்த நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் வேலைக் கிடைக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரும். பூர்விக சொத்து வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
நீண்ட நாள் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். எதிலும் வெற்றி பெறுவீர்கள். புதிதாக வீடு, வாகனம் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். புது நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும்.
திடீர் பயணங்கள் உண்டு. பல ஆன்மீக பெரியோர்களின் அருளும், ஆசியும் கிட்டும். வெளிவட்டாரத்தில் உங்களை பற்றி பெருமையாக பேசுவார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் உண்மை முகம் தெரிய வரும்.
அக்கம் பக்கம் வீட்டாருடன் நல்ல அனுசரணை ஏற்படும். முடிந்து போன விஷயங்களை நினைத்து மனம் கலங்குவீர்கள். பழைய கடன் பிரச்சனை மனதை வாட்டும். சுபச் செலவுகள் அதிகமாகும். புது வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள்.
எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும். குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம், தடுமாற்றம் வந்துப் போகும். பூர்வீக சொத்துப் பிரச்னை வெடிக்கும். பெரிய திட்டங்கள் நிறைவேறும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும்.
திடீர் பணவரவு உண்டு. உங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற பலன் கிட்டும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் உங்களை இணைத்துக் கொள்வீர்கள். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். குடும்பத்தினருடன் சுற்றுலா பயணம் சென்று வருவீர்கள்.
உறவினர்கள், விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். தடைப்பட்ட திருமணம் மீண்டும் நடக்கும். உடன்பிறந்தவர்களுடன் மோதல் ஏற்படும். சொத்து வாங்குவது, விற்பதில் சில சிக்கல்கள் வரலாம்.
எதிர்காலம் பற்றிய கவலை அதிகமாக இருக்கும். பணத்தட்டுப்பாடு நீங்கும். நண்பர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு பின் சீராகும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பத்தில் தொடர்ச்சியாக சுப காரியங்கள் சிறப்பாக நடக்கும்.
பரிகாரம் :
இந்த ஆண்டு முழுவதும் மகாவிஷ்ணுவை வழிபடவும்.










