புத்தாண்டு பலன்கள் 2018 – கும்ப ராசி
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2018-ல் அடி எடுத்து வைக்கும் கும்ப ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம்.
இந்த 2018 புத்தாண்டு உங்களுக்கு அநேக நன்மைகள், ஆதாயங்கள் ஏற்பட்ட வண்ணம் இருக்கும். முக்கிய கிரங்களான அனைத்தும் உங்களுக்கு பெரிய நன்மைகள் தரக்கூடிய சாதகமான இடத்தில் உள்ளனர்.
அதனால் இப்புத்தாண்டு உங்களுக்கு அமோகமான ஆண்டாக அமையும். நீங்கள் மனதில் நினைத்தது எல்லாம் நிறைவேறும். உங்கள் வாழ்க்கை தரம் நீங்கள் எதிர்பாராத அளவிற்கு அமோகமாக அமையும்.
எந்த ஒரு விஷயத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்தே செய்வீர்கள். யாருக்காகவும் உங்கள் சுய கௌரவத்தை விட்டு தர மாட்டீர்கள். மனதில் புது தெம்புடன் வலம் வருவீர்கள். பணம் பல வழிகளில் உங்களை தேடி வரும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சுப காரியங்கள் நடைபெறும். உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஒரு சிலருக்கு திட்டமிடாத வெளிநாட்டு பயணம் ஏற்படும்.
உங்கள் பிடிவாத குணத்தை கொஞ்சம் தளர்த்திக்கொள்ளவும். நீண்ட நாட்களாக குழந்தை இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். கொடுக்கல் வாங்கல் யாவும் லாபம் தரும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
உற்றார் உறவினர்களின் உபசரணை நல்ல விதமாக இருக்கும். இழுபறியில் இருந்து வந்த காதல் கைகூடும். பூர்விக சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் கூட நண்பர்களாக மாறுவர்.
வீட்டில் பொருள் சேர்க்கை ஏற்படும். புது வீடு, புது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பல பிரபலங்களின் நட்பு கிடைக்கும். உத்யோகஸ்தர்களுக்கு பல கௌரவமான பதவிகள் கிடைக்கும்.
தொழில், வியாபாரத்தில் பல நுணுக்கங்களை கையாண்டு அதில் வெற்றி பெறுவீர்கள். பண விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. சமுதாயத்தில் உங்களை நம்பி பெரிய பொறுப்புகள் ஒப்படைக்க படும்.
சொந்த தொழில், செய்பவர்களுக்கு தாராளமான பணப்புழக்கம் இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒப்பந்தம் கிடைக்க பெறுவீர்கள். புதிய உத்வேகத்துடன் பல விதங்களில் முன்னேற்றம் அடைவீர்கள்.
உங்கள் வாழ்க்கை தரம் வெகுவாக உயரும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனை ஏற்பட்டாலும் அது தானாக சரியாகிவிடும். கடன் வாங்குவதை தவிர்த்து வருவீர்கள்.
குடும்பத்தில் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களை பாராட்டி பேசுவார். கூட்டு, தொழில், வியாபாரம் சிறப்படையும். மனதிற்கு பிடித்தமான விஷயங்களை மட்டும் பேசுவீர்கள்.
தெய்வ வழிபாட்டினை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எல்லாவற்றிற்கும் இறை வழிபாடு ஒன்றே சிறந்த பரிகாரம்.
பரிகாரம்: இந்த ஆண்டு முழுக்க விநாயகரை அருகம் புல் வைத்து வழிபடவும்.









