புத்தாண்டு பலன்கள் 2018 – தனுசு ராசி
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2018-ல் அடி எடுத்து வைக்கும் தனுசு ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம்.
இந்த 2018 புத்தாண்டு உங்களுக்கு நன்மையும், தீமையும் கலந்த ஆண்டாக அமையும். சனி பகவானின் சோதனை காலத்தில் இருப்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.
நீங்கள் எதற்காகவும் கவலை பட தேவையில்லை குரு பகவான் உங்களுக்கு சாதகமான நிலையில் உள்ளார், இதனால் பண வரவு அதிகரிக்கும். வீட்டில் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
குடும்பத்திலும் வெளி இடத்திலும் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். கணவன் மனைவிக்குள் சுமுகமான சூழ்நிலை உருவாகும். புதிய முயற்சிகளை துணிச்சலுடன் செய்து பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள்.
மற்றவர்களுக்காக எப்போதும் ஜாமின் கையெழுத்து போட வேண்டாம். உங்களிடம் ஒரு சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைத்து விட்டால் அதை எப்படியாவது செய்து முடித்து விடுவீர்கள். குடும்பத்தில் சண்டை, சச்சரவு ஒரு சில நேரங்களில் ஏற்படும்.
நீங்கள் பேசும் வார்த்தைகளை அளந்து பேசவும். யாரையும் எடுத்தெறிந்து பேசவேண்டாம். ஒயாத குடும்ப பணி மற்றும் வெளி அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படும்.
குல தெய்வ வழிபாடு சிறப்பான பலனை தரும். உங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறப்புக்கு பிரச்சனை வந்தாலும் அதை சரி செய்ய பார்ப்பீர்கள்.
உங்களின் ஆலோசனைகள் பலருடைய வாழ்வை முன்னேற்றம் அடைய வைக்கும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். கட்டுக்கடங்காத வீண் செலவுகள் ஆகியவற்றில் பண விரையம் ஏற்படும். வெளியூர் பயணத்திற்கு திட்டமிடுவீர்கள்.
குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்கள் கைகூடும், உற்றார், உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்.
கூட்டு தொழில் எப்போதும் உங்களுக்கு ஒத்து வராது. பணியில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு சாமர்த்தியமாக பேசி மற்றவர்களை கவர்வது உங்களுக்கு கைவந்த கலை.
எதிர்காலத்தில் நடப்பதை கூட முன்கூட்டியே அறிந்து கொள்ளும் சக்தி உங்களிடம் இருக்கும். நீங்கள் செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அதை சிறப்பாக செய்து வெற்றி காண்பீர்கள்.
தொழில், வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்க்கவும். நிர்வாகம் உங்கள் தலைமையில் நடக்கும். குடும்ப சூழ்நிலைகளால் பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். ஒரு சிலர் குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டிய நிலை உண்டாகும்.
பண தேவைக்காக வெளியில் கடன் வாங்க வேண்டியிருக்கும். உங்கள் வாழ்வின் பிற்பகுதி யோகமாக இருக்கும். உங்களுடைய வாழ்க்கை வசதிக்கு ஏற்ப யாவும் உங்கள் செயல்கள் மாறும்.
பண வரவில் ஒரு சில தடைகள் வந்தாலும் அதை எப்படியும் சமாளித்து விடுவீர்கள். நீங்கள் வீட்டிற்குள் எப்படி இருந்தாலும் வெளிவட்டாரத்தில் மிகவும் உயர்வாக மதிக்கப்படுவீர்கள்.
எல்லாவற்றிற்கும் இறை வழிபாடு ஒன்றே சிறந்த பரிகாரம்.
பரிகாரம் : இந்த ஆண்டு முழுவதும் ஸ்ரீ ராகவேந்திரரை வெள்ளிக்கிழமையில் வழிபடவும்.










